நடிகர் நேத்ரன் மறைவால் இருண்ட வாழ்க்கை! தீபா போட்ட பதிவு! கண்ணீரில் சின்னத்திரை!
சென்னை: சீரியல் நடிகர் நேத்ரன் புற்றுநோய் பாதிப்பால் இறந்த நிலையில் அவருடைய மனைவியும் சீரியல் நடிகையுமான தீபா, தனது கணவர் குறித்து உருக்கமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். இதையடுத்து அவருக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.
சின்னத்திரை நடிகரும் நடன கலைஞருமான நேத்ரனை சீரியலில் நடித்த போது தெரியாவிட்டாலும் அவரும் அவரது மகளும் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை யாராலும் மறக்க முடியாது.

இதை பார்த்த பலரும் இத்தனை திறமை கொண்ட நேத்ரனுக்கு இன்னும் ஏன் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என கவலை தெரிவித்தனர். நேத்ரன் சிறு வயது முதலே நடித்து வருகிறார். நேத்ரன், தீபா என்ற சக ஆர்டிஸ்டையே திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
இவர்களுக்கு அபிநயா, அஞ்சனா என இரு மகள்கள் உள்ளனர். இந்த இரு குழந்தைகளையும் பார்த்துக் கொள்வதற்காக சீரியலில் இருந்து விலகியே இருந்த தீபா, விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் ரீ என்ட்ரி கொடுத்தார்.

அதைத் தொடர்ந்து சன் டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட சேனல்களிலும் முன்னணி சீரியல்களில் நடித்து வந்தார். அபிநயா பல ஷோக்களில் தனது தந்தையுடன் கலந்து கொண்டிருக்கிறார். இளைய மகள் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். இந்த நிலையில் கனா காணும் காலங்கள் சீசன் 2 சீரியலில் அபி நடித்திருந்தார்.
மேலும் சில சீரியல்களிலும் அபிநயா ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் திடீரென குருவிக் கூட்டில் கல் எறிந்தது போல் அந்த குடும்பத்தின் ஆணிவேரான நேத்ரனுக்கு புற்றுநோய் என்பது கண்டறியப்பட்டது. இதனால் தீபாவும், மகள்களும் உடைந்து போயினர்.
எனினும் தொடர் சிகிச்சையால் அப்பாவை மீட்டுவிடலாம் என மகள்களும் கணவரை மீட்கலாம் என தீபாவும் நம்பியிருந்தனர். ஆனால் இந்த புற்றுநோயானது. ஒரு குறிப்பிட்ட உறுப்பில் வந்ததுடன் உடல் முழுவதும் பரவியது. நேத்ரனுக்கு இந்த புற்றுநோயானது அலட்சியத்தின் பேரில் வந்ததாக அவருடன் நடித்தவர்கள் எல்லாம் சொல்கிறார்கள்.

ஷூட்டிங்கில் இருந்த போது அடிக்கடி அவருக்கு வயிறு வலி ஏற்பட்டு வந்ததாம். அவரை மருத்துவமனைக்கு போக சொன்னாலும், இது ஒன்றுமில்லை அல்சர்தான் என சொல்லிவிடுவாராம். ஒரு கட்டத்தில் தாள முடியாத வயிற்று வலியால் துடித்த அவர் மருத்துவமனையில் பரிசோதனை செய்த போதுதான் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.
ஆனால் அவரை காப்பாற்ற எத்தனையோ வகைகளில் போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் அண்மையில் உயிரிழந்தார். இதனால் சின்னத்திரையில் அவருடன் நடித்த நடிகர், நடிகைகள் எல்லாம் கலங்கி போனார்கள். தீபாவுக்கும் இரு மகள்களுக்கும் என்ன ஆறுதல் கூறுவது என தெரியாமல் வேதனை அடைந்தனர்.

இந்த நிலையில் அண்மையில் அவருடைய மகள்கள், நேத்ரனின் சிறுவயது, பால்ய வயது புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தனர். அது போல் தீபாவும் இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் நேத்ரனுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழித்த நாட்கள், அவருடன் சாகச விளையாட்டுகளை செய்த தருணங்கள் என மறக்க முடியாத புகைப்படங்களை போட்டு கண்ணீர் விடும் இமோஜியை போட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்களும் சின்னத்திரை கலைஞர்களும் தீபாவுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். உங்கள் மகள்கள் மூலம் உங்களுக்கு நேத்ரன் திரும்ப கிடைப்பார் என ஆறுதல் கூறி வருகிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications