Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆர்த்திக்கு மறுமணமா? இதெல்லாம் நல்லாவா இருக்கு? பாயிண்ட்டா பேசி ஜெயம் ரவியை சப்போர்ட் செய்த பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயம் ரவி - ஆர்த்தி குடும்ப சண்டை விஸ்வரூபமெடுத்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தன்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கிறார். இதில் ஜெயம் ரவிக்கு தன்னுடைய ஆதரவை வழங்கி பேசியிருக்கிறார்.. இதுதான் கடந்த 2 நாட்களாகவே இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

ஜெயம் ரவி, சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய பிரச்சனையை வெளிப்படுத்தியிருந்தார்.. அதுவரை ஆர்த்திக்கு ஆதரவு தெரிவித்து வந்த பலரும், ஜெயம் ரவியின் பக்கம் சாய்ந்தார்கள்.. ஜெயம் ரவி பேசுவதிலும் நியாயம் உள்ளதாக கூறினார்கள்.

television jayam ravi aarthi

நேற்றைய தினம், ஜெயம் ரவியின் குற்றச்சாட்டுகளுக்கு எந்த பதிலையும் சொல்லாமல், தன்னுடைய மவுனத்தை கலைத்திருந்தார் ஆர்த்தி.. எனினும், மூத்த பத்திரிகையாளர் சபிதா King 24X7 என்ற சேனலுக்கு அளித்த பேட்டியில், ஜெயம் ரவிக்கே தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார்.. அதன் சுருக்கம்தான்:

நடிகை நிச்சயதார்த்தம்: "பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகையுடன், ஜெயம் ரவியை சம்பந்தப்படுத்தி பேசினாங்க.. ஆனால், நல்லவேளை அந்த நடிகைக்கு இப்போது வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது. இல்லாவிட்டால் இன்னமும் அந்த நடிகையை இணைத்துதான் பேசிட்டு இருந்திருப்பாங்க..

ஒரு பிரபல நடிகர், பலருடன் பேச வேண்டி வரும். ஹீரோயினுடன் பேசுவது குறித்து கேட்பது, எங்கே போறார்? ஏன் அவருடன் பேசறீங்க? இப்படியெல்லாமா கேட்பது? வாழ்க்கையா என்ன இது? கொடைக்கானலில் ஜெயம்ரவியின் ரூம் கதவை பார்த்திருக்காங்க. உள்ளே போய் பார்த்தால் ஒன்னுமேயில்லை..

பணம் இல்லை: இப்படி வேவு பார்க்கிறது நல்லாவா இருக்கு? அதுவும் 15 வருஷத்துக்கு பிறகு.. அதுவும் 2 பிள்ளைகளை பெற்ற பிறகு? நம்பிக்கைதானே வாழ்க்கை? ஜெயம் ரவி உங்களை வேவு பார்க்கிறாரா? சந்தேகப்படுகிறாரா? இத்தனைக்கும் அவரிடம் பணம் கிடையாது.. அன்னைக்கு 10 கிலோ மீட்டருக்கு நடந்தே, அவருடைய அப்பா வீட்டுக்கு போயிருக்காரு.. ஆட்டோவுக்கும் காசு இல்லை, பஸ்ஸுக்கும் காசு இல்லை..

கடைசியில் நடுதெருவில் நிற்கக்கூடிய வாழ்க்கை.. இதையெல்லாம் இதை 4 பேருடன் உட்கார்ந்து பேசியிருந்தாலும் பரவாயில்லை..

நல்ல குடும்பத்து பெண்கள், சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள், இப்படியெல்லாம் குற்றச்சாட்டு சொல்ல மாட்டாங்க. சேர்ந்து வாழக்கூடாது, சொத்தை ஆட்டைய போடணும், பிரிந்துவிட வேண்டும் என்று நினைப்பவர்கள்தான், இப்படித்தான் குற்றஞ்சாட்டுவார்கள்.. இதுவரை ஜெயம் ரவி பற்றி கிசுகிசு வந்ததில்லை.. எந்த நடிகையுடனும் தொடர்பு படுத்தி பேச்சு வந்ததில்லை.. மதுபோதையில் விழுந்து கிடப்பதாக செய்திகள் வந்ததில்லை..

வங்கி கணக்கு: இப்போதுகூட, தன்னுடைய பசங்க செலவுக்காக, வங்கியில் அக்கவுண்ட் ஆரம்பித்து, மாசத்துக்கு 20 லட்சம் அனுப்பும் வழியை ஏற்படுத்தியிருக்கிறார். இதற்கான டாக்குமெண்ட்டையும் அவரே வைத்திருக்கிறார்.

ஒரு நல்ல அப்பாவா இருந்திருக்கிறார்.. ஒரு நல்ல கணவான இருந்திருக்கிறார். ஆனால், ஆர்த்தி அப்படி இருந்தாரா? என்று தெரியவில்லை.. டார்ச்சர், அவமானம் தாங்க முடியாமல் இப்போது ஜெயம் ரவி வெளியேறுகிறார்.. ஒரு மேக்கப் மேன், டச்சப் பாய், தன்னை வேவு பார்ப்பதெல்லாம் எவ்வளவு பெரிய அசிங்கம்? பதிலுக்கு மனைவியை சந்தேகப்பட்டால் என்னாகும்?

ஒன்று அவரது வெற்றிக்காக உழைக்கணும்.. துணை இருக்கணும்.. இல்லாவிட்டால் அவரை இமேஜை டேமேஜ் செய்யாமல், தொடர்ந்து பாதிப்பை உண்டாக்காமலாவது இருக்கணும்

கல்யாணம்: சோஷியல் மீடியாவில் "ஆர்த்தி ரவி" என்றுதான் இன்றுவரை பெயர் உள்ளது.. ஒருவேளை, தம்பதிக்குள் விவாகரத்தானால், இது மாறலாம். ஆர்த்தி வேறு கல்யாணமும் பண்ணலாம். பணக்கார பெண்கள் யாரையுமே மதிக்க மாட்டார்கள்.. "நீ யார் என்னை கேட்க?" என்று கேட்டு அவரவர் வாழ்க்கையை அமைத்து கொள்ளலாம்.

இப்போதைக்கு ரவியுடன் இருக்கும்வரை ஆர்த்தி ரவி என்றிருக்கிறது.. ஆனால், இது எப்போதுமே "ஆர்த்தி ரவி"யாகவே இருக்க வேண்டும் என்றுதான் நாம் அனைவருமே நினைக்கிறோம்.. நல்ல மனைவியாக, மனசு நோகாமல், சந்தேகப்படாமல் இருக்க வேண்டும்.. அதுவும் தன்னுடைய 2 குழந்தைகளுக்காக.

ஓபன் டாக்: மொத்தத்தில், இந்த விஷயத்தை பொறுத்தவரை, ஜெயம் ரவி பக்கம்தான் நியாயம் இருக்கிறது.. பண விவகாரம், சினிமா விவகாரம் உட்பட எல்லாவற்றையும் ஜெயம் ரவி ஓபனாக சொல்லிவிட்டாரே.. அதை இல்லைன்னு மனைவி இதுவரை சொல்லவில்லையே? அதனால், இவர் பக்கம்தான் நியாயம் உள்ளது" என்றெல்லாம் பேசியிருக்கிறார்

அதுமட்டுமல்ல,"அந்த வீடு யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கும்போது, அங்கே ஜெயம்ரவியால் எப்படி தங்கியிருக்க முடியும்? இவரால் போய் அங்கே தங்க முடியாது.. இவரும் அடுத்தடுத்த படத்தை வெளியிட வேண்டும்.. படங்கள் வரிசையாக வந்தால்தான், அடுத்தடுத்து நகர முடியும்.. அவருக்கு நிறைய வேலைகள் இருக்கு.. இப்போது சுழலில் மாட்டிக் கொண்டமாதிரி இருக்கு..

குஷ்பு : குஷ்பு இந்த விஷயத்தை பற்றி ஏற்கனவே பேசியிருந்தார்.. ஆனால், சுந்தர் சி சாருக்கு, குஷ்பு இன்றுவரை மரியாதை தருகிறார்கள்.. அவருக்கான சுதந்திரத்தை தந்திருக்காங்க.. அவருக்காக படங்களை தயாரித்து எடுத்திருக்காஙக.. எங்கேயும் சுந்தர் சி-யை குஷ்பு விட்டுக் கொடுத்ததில்லை.. ஆனால், ஆர்த்தி விவகாரத்தில் அப்படியில்லை என்பதுதானே, பிரச்சனையே" என்று குஷ்பு பேசியதையும் பத்திரிகையாளர் சபீதா சுட்டிக்காட்டியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+