பிந்துகோஷை பார்க்க யாரும் போகலியா? அவங்க என்ன பிச்சையா எடுத்தாங்க? இதென்ன பிந்து கோஷ் பற்றி டுவிஸ்ட்
சென்னை : பிந்துகோஷ் மறைவுக்கு திரையுலகிலிருந்து பலரும் அஞ்சலி செலுத்த செல்லவில்லையே, ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.. அத்துடன், பிந்து கோஷை அவரது இரு மகன்களுமே நல்லபடியாக கவனித்து கொண்டிருந்தார்கள் என்றும், கஷ்டப்பட்டு வறுமையால் இறக்கவில்லை என்றும், புது தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. என்ன நடந்தது?
1960ல், களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் கமல்ஹாசனுடன் சேர்ந்து நடனமாடியிருந்தார் பிந்துகோஷ்.. பிறகு, நடன இயக்குநர் ஹீராலால் மாஸ்டரிடம் சேர்ந்து நடன நுணுக்கங்களை கற்றதுடன், அவரது டான்ஸ் ட்ரூப்பிலேயே ஒருவராக இணைந்தார். பிறகு தங்கப்பன் மாஸ்டரிடமும் உதவி நடன இயக்குநராகவும் வேலை பார்த்திருக்கிறார்.

மூன்றாம் பிறை படத்தில், "வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட" என்ற பாடலில் நண்பர்களில் ஒருவராக வந்து நடனமாடியிருப்பார்.. அதுவரை விமலா என்ற தன்னுடைய இயற்பெயருடன் நடனமாடி கொண்டிருந்தார் பிந்துகோஷ்..
கோழி கூவுது
1982ம் ஆண்டு கங்கை அமரனின்கோழி கூவுது படத்தில்தான், பிந்துகோஷ் என்று பெயரை மாற்றிக் கொண்டார். கோழி கூவுது படத்துக்கு பிறகு, ஏகப்பட்ட படங்கள் பிந்துகோஷூக்கு வரிசைகட்டி வந்தன.. மலையாளத்தில் 100-க்கும் மேற்பட்ட படங்களுக்கு உதவி நடன இயக்குநராகவும் பணிபுரிந்து வந்துள்ளார் பிந்துகோஷ்,
இதற்கு பிறகுதான், உடல்நிலையில் சில பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிட்டது.. உடல் பருமன் அதிகரித்தாலும், அதையே தனக்கு பிளஸ் பாயிண்ட்டாக மாற்றிக்கொண்டு நடித்தவர் பிந்துகோஷ்.. எனினும், தைராய்டு, இதயநோய் என ஒவ்வொரு பிரச்சனையாக உடலில் சேர்ந்துவிடவும், பிந்துகோஷ் சிகிச்சைக்கு ஆளானார்.
மருத்துவ செலவு - வறுமை
பல வருடங்களாகவே சிகிச்சையை பெற்று வரும்நிலையில், சமீப காலமாக பிந்துகோஷின் வறுமை செய்திகள் வெளியாகின. கார், பங்களா என வாழ்ந்த பிந்துகோஷ், இப்போது வாடகை வீட்டில் அவதிப்படுவதாகவும் செய்திகள் வந்தன.
அவருக்கு உடலில் பல்வேறு பிரச்னைகள் இருப்பதாகவும், மருத்துவ செலவு, சாப்பாட்டு செலவுக்கு கூட பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் பல பேட்டிகளில் அவரே பேசியிருந்தார். அவரின் நிலையை தெரிந்து கொண்ட நடிகர் விஷால் ஏற்கனவே உதவி செய்திருக்கிறார்.. எனினும், நடிகை ஷகீலா மேற்கொண்ட முயற்சியால் கேபிஒய் பாலா பிந்துகோஷூக்கு செய்திருந்தார். நேற்று மதியம் பிந்துகோஷ் இறந்துவிட்டார்.. சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் சடலம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று மதியம் அடக்கமும் செய்யப்பட்டது.
மருமகள் பேட்டி
இந்நிலையில், பிந்துகோஷ் குடும்பத்தினர் 2nd Floor Tamil யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை தந்துள்ளனர். அந்த பேட்டியில் பிந்துகோஷ் மருமகள் சொன்னபோது, "பிந்துகோஷூக்கு 2 மகன்கள்.. இருவருமே தெலுங்கு சினிமாவில் டான்ஸ் மாஸ்டர்களாக உள்ளனர்.. என் மாமியார் பிந்துகோஷ் அப்படி ஒன்னும் பணக்கஷ்டத்தில் வாடவில்லை.. 2 மகன்களுமே நல்ல படியாக அவரை பார்த்து கொண்டார்கள்.. சேனல்களில், அவரவர்கள் டிஆர்பி-க்காக இப்படி செய்திகளை போட்டுவிட்டார்கள்.
இதோ 2 மகன்கள், மருமகள்கள், பேரன், பேரப்பிள்ளைகள் எல்லாருமே இங்கேதான் இருக்கிறோம்.. சொந்தக்காரர்கள் எல்லாரும் இங்கேதான் இருக்காங்க.. தப்பான செய்தியை தந்துவிட்டு, எங்களை எல்லாம் அசிங்கப்படுத்திட்டாங்க.. இனிமேல் பிந்துகோஷ் பற்றி எந்த தவறான செய்தியையும் தயவுசெய்து யாரும் பதிவிட வேண்டாம்.
பரபரப்பு - பிச்சை எடுக்கல
அவருக்கு வயதாகிவிட்டது, அதுதொடர்பான நோய்களால் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். அவ்வளவுதான். அதற்காக பணத்துக்காக கஷ்டப்பட்டு சாகல.. பிச்சை எடுத்துட்டு சாகல" என்று தெரிவித்துள்ளார்.
வறுமையால், சிகிச்சைக்கு பணமின்றி, மகன்கள் ஆதரவின்றி பிந்துகோஷ் அவதிப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில், பிந்துகோஷூக்கு 2 மகன்களுமே உதவி செய்து வந்ததாக, அவரது மருமகள் கூறியிருக்கும் தகவல் பரபரப்பை தந்துவிடுகிறது.
இதனிடையே, பிந்துகோஷ் இறந்தும்கூட, அவரது உடலுக்கு திரையுலகிலிருந்து அஞ்சலி செலுத்த பலரும் ஏன் செல்லவில்லை? மூத்த கலைஞருக்கே இந்த நிலைமையா? என்று இணையதளத்தில் கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.












Click it and Unblock the Notifications