Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குழம்பிட்டாரா ராஜேஷ்.. ஒரு பக்கம் கல்லறை, மறுபக்கம் ஜோதிடம்.. நிறைவாக வாழ்ந்த அறிவு ஜீவி: பிரபலம் 

Subscribe to Oneindia Tamil
சென்னை: "தன்னுடைய ஜோதிடத்தை ராஜேஷ் வலுவாக உண்மை என்று நம்புகிறார்.. நாத்திகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் அதை மறுக்கும்போது, நிச்சயம் ஜோதிடத்தை நம்புபவர்களுக்கு மனக்காயம் ஏற்படும்.. ராஜேஷின் நம்பிக்கையை நாம் குலைக்க முடியாது.. அவரை காயப்படுத்தவும் முடியாது.. ராஜேஷ் அறிவுஜீவியாக இருந்திருக்கிறார். ஆனால், தெளிவின்மையாக இருந்துள்ளார்" " என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தெரிவித்துள்ளார்.
Fine Time Cine என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "ராஜேஷின் மரணத்துக்கு அலோபதி மருத்துவம்தான் என்று சொல்கிறார்கள்.. அப்படியெல்லாம் சொல்ல கூடாது.. ராஜேஷ் சிறுவயதில் ஒன்றும் இறக்கவில்லை.. 75 வயது என்பது, வயது மூப்பை சார்ந்ததுதான்.. பார்ப்பதற்கு 60 வயதாக தோன்றினாலும் 75 வயதில் இறந்துள்ளார். அவருடையது இயற்கையான மரணம் என்றுதான் அவரது தம்பி உட்பட அனைவருமே சொல்கிறார்கள்.
டாக்டரை கூப்பிடுங்கள்
தன்னுடைய மரணத்தை தானே கணித்ததாக பலரும் தெரிவித்து வருகிறார்கள்.. அப்படி கணித்திருந்தால், தன் மகனுக்கு 2 வருடங்களுக்கு முன்பேயே திருமணத்தை செய்து வைத்திருப்பார்.. மூச்சு திணறல் ஏற்பட்டபோது, டாக்டரை கூப்பிடுங்கள் என்று சொல்லியிருக்க மாட்டார்..
எனவே, யாருமே எதிர்பாராத சூழலில் நடப்பதுதான் மரணம்.. ஏற்கனவே ஹார்ட் சர்ஜரி செய்திருந்தால், இன்னும் கொஞ்ச காலம் உயிரோடு இருப்போம் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்திருக்கலாம்.. மருத்துவ ரீதியாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் நினைத்திருக்கலாம். எது எப்படியிருந்தாலும், ராஜேஷூடையது இயற்கையான மரணம் என்று குடும்பத்தினரே சொல்கிறார்கள்.
சித்த மருத்துவம்
இதுல போய் அலோபதியை குறை சொல்லக்கூடாது.. சித்த மருத்துவத்துக்குள் போய்விட்டார்.. சித்தா டாக்டர் லேட்டாக வந்துட்டாரு என்றெல்லாம் சிலர் சொல்லி கொண்டிருக்கிறார்கள்.. அப்படி பார்த்தால் டாக்டர் செரியன், சமீபத்தில் மரணமடைந்தார்.. இந்தியாவிலேயே இதய மாற்று சர்ஜரியை செய்தது டாக்டர் செரியன்தான்.. பல விஐபிகளுக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்துள்ளார்.. 84 வயதில் இறந்துவிட்டார்.. "டாக்டர் செரியன் உயிர்துடிப்பு நின்றது, மூச்சை நிறுத்திக் கொண்டார்" என்று செய்திகள் வந்தன..
ஆனால், ராஜேஷூக்கு மாரடைப்பு என்று செய்திகள் வருகிறது. இதுவே செரியனுக்கு மாரடைப்பு என்று சொல்லவில்லை.. மனோஜ் பாரதிராஜா போல சில அகால மரணம் உள்ளது.. அதுபோல பாரதிராஜாவை சொல்ல முடியாது. இதற்கும் மருத்துவத்துக்கும் சம்பந்தமில்லை..
மனோஜ் பாரதிராஜா
அலோபதி சிகிச்சை தவறென்றால், டாக்டர் செரியன் அதிலும் ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் ஏன் சாக வேண்டும்?அதுக்காக டாக்டர் செரியனை குறை சொல்ல முடியுமா? மரணம் என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்று.ராஜேஷ் யோகா செய்யக்கூடியவர், அவருக்கே இப்படி ஆகிவிட்டதே என்று சிலர் சொல்கிறார்கள்.. அப்படியானால் பிரபல யோகா ஆசிரியர் ஆசனா ஆண்டியப்பன் இறந்திருக்கக் கூடாதே? அவரும் 80 வயதில் இறந்தார்..
எண்ணற்ற ஆசன கலைகளை பயிற்றுவித்தவர். அவரது சீடர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.. அதுக்காக யோகாசனம் செய்பவர்கள் இறப்பதில்லையா? சித்த மருத்துவர்கள் யாருமே இறப்பதில்லையா? மரணத்தை வென்றவர் இங்கு யாருமே கிடையாது..
ராஜேஷ் அறிகுறி
அன்றாட பணிகளை செய்து கொண்டிருக்கும்போது, சில அறிகுறிகள் ராஜேஷூக்கு வந்துள்ளது.. மருத்துவமனைக்குள் செல்வதற்குள் உயிர் பிரிந்துள்ளது.. இதற்காக யாரையுமே காரணம் சொல்வது சரி கிடையாது.. எனவே வயது மூப்பை, எந்த மருத்துவத்துடனும் தொடர்புபடுத்த கூடாது.
ராஜேஷ் அறிவுஜீவியாக இருந்துள்ளார்.. அதற்கு காரணம் எண்ணற்ற புத்தகங்களை படித்துள்ளார்.. 7000 புத்தகங்கள் படித்ததாக சொல்வார்கள்.. அவரிடமிருந்து அந்த அறிவாற்றலை பெறக்கூடிய நபர்கள் யாருமில்லை.. நிறைய விஷயங்களை ராஜேஷ் மண்டையில் ஏற்றிக் கொண்டதால், யாரை பார்த்தாலும் நிறைய பேசிக்கொண்டே இருந்துள்ளார்.. அப்படி பல விஷயங்களை கொட்டும்போது, அதை பெற்றுக் கொள்ள யாரும் தயாராக இல்லை.. படித்ததை அனைத்தையும் தானே இதயத்தில் வைத்து புழுங்கி வந்துள்ளதாக நினைக்கிறேன்..
எச்சில் துப்பும் பழக்கம்
ஒருமுறை ராஜேஷ் பேசும்போது, எச்சில் துப்பும் பழக்கம் 2000 வருடங்களுக்கு முன்பு நம்முடைய மக்களிடம் இருந்தது என்கிறார்.. இதை எதன் அடிப்படையில் சொன்னார்? படித்ததை வைத்து இவ்வாறு சொன்னார்.. ஆனால், இப்படி சொன்ன ராஜேஷ், "எனக்கு எச்சில் சுரப்பதில்லை, 8ம் இடத்தில் சுக்கிரன், ராகு, கேது இருக்கிறது" என்றார்.. அப்படியானால் இதில் எது சரி? ஆக, சிக்கல் என்னவென்றால் நிறைய படித்து விட்டார் ராஜேஷ்.. நிறைய படித்ததால், ஒருவகையான மன அழுத்தத்தில் இருந்திருப்பாரோ? என்ற சந்தேகம் வருகிறது.. படித்ததை கொட்ட வடிகால் தேவைப்படுகிறது..
ஒரு விவாதத்தில் ஜோதிடத்துக்கு எதிராக டாக்டர் எழிலன் பேசினார்.. ஜோதிடத்தை ஆதரித்து ராஜேஷ் பேசினார்.. ஜோதிடத்துக்கு எதிரான ஆதாரபூர்வமான விஷயங்களை எடுத்து வைத்தார்.. ஆனால், இவரால் ஆதாரப்பூர்வமாக எடுத்து வைக்க முடியாமல் "நம்புகிறேன்" என்றார்...
ஜோதிட நம்பிக்கை
ஏனென்றால் தன்னுடைய ஜோதிடத்தை ராஜேஷ் வலுவாக உண்மை என்று நம்புகிறார்.. நாத்திகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் அதை மறுக்கும்போது, நிச்சயம் ஜோதிடத்தை நம்புபவர்களுக்கு மனக்காயம் ஏற்படும்.ராஜேஷின் நம்பிக்கையை நாம் குலைக்க முடியாது.. அவரை காயப்படுத்தவும் முடியாது.. ராஜேஷ் அறிவுஜீவியாக இருந்திருக்கிறார். ஆனால், தெளிவின்மையாக இருந்துள்ளார்.. அறிவை இரண்டு வகையாக பெறலாம்.. அனுபவத்தைவிட, படிப்பின் மூலமாக தன்னுடைய அறிவை பெற்றுள்ளார்.
கல்லறை - ஜோதிடம்
ஒருபக்கம் கல்லறை கட்டி கொண்டுள்ளார், மறுபக்கம் ஜோதிடத்தை நம்பியிருக்கிறார்.. யார் தனக்கு தானே கல்லறை கட்டிக் கொள்கிறார்களோ, அவர்கள் 100 வயது வரை வாழ்வார்கள் என்றும் ராஜேஷ் சொல்கிறார்.. இது இப்போது என்னாச்சு?ஒருபக்கம் கிறிஸ்தவ கல்லறை, மறுபக்கம் 100 வருட வாழ்வோம் என்ற ஜோதிடத்தை துணைக்கு கொண்டு வந்துள்ளார்.. ஏதோ குழப்பத்தில் இருந்திருக்கிறார். எனவே, சில விஷயங்களை அவர் நம்புவதால், அதையெல்லாம் விமர்சித்து அவரை காயப்படுத்த முடியாது.
மற்றபடி நிறைவான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்.. நன்றாக பணம் சம்பாதித்துள்ளார்.. அனைவருக்கும் தெரிந்த நடிகராக உயர்ந்துவிட்டார்.. 3 முதலமைச்சர்களுடன் நெருகி பழகியிருக்கிறார். எம்ஜிஆர் திரைப்பட கல்லூரிக்கு முதல்வராக இருந்துள்ளார்.. எத்தனையோ நண்பர்களை பெற்றுள்ளார்.. எந்தவொரு கெட்ட பழக்கமும் இல்லாமல் நேர்மையாக வாழ்ந்துள்ளார்.. இது நிறைவான வாழ்க்கைதானே?" என்று தெரிவித்துள்ளார்.
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+