அனிருத்துக்கு போட்டியாக போட்டோ வெளியிட்ட ஷாலினி? அஜித்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்!
சென்னை: இசையமைப்பாளர் அனிருத் திருமண புகைப்படங்கள் நேற்று வெளியானதில் இருந்து சோசியல் மீடியாவே களைகட்டி வருகிறது. காவ்யா மாறனுடன் கிரீஸில் திருமணம் செய்து கொண்ட அனிருத், தனது திருமண புகைப்படங்களை பகிர்ந்ததை தொடர்ந்து ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் ஒரு பக்கம் வைரலாகி கொண்டிருக்க, நடிகை ஷாலினி தற்போது வெளியிட்டுள்ள தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

அனிருத் - காவ்யா மாறன் திருமணம் கிரீஸில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்றது. அனிருத் தனது திருமண புகைப்படத்தைப் பகிர்ந்து, 'My once in a lifetime, for a lifetime' என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். இந்த திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா, மகள் ஐஸ்வர்யா உள்ளிட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டனர். அதேபோல் பொண்ணு வீட்டு சார்பாக மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கலாநிதி மாறன் மற்றும் இரு குடும்பத்தினரும் பங்கேற்ற புகைப்படங்களும் வெளியாகி கவனம் பெற்றன. வரும் நவம்பர் 21ஆம் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஷாலினி வெளியிட்ட தீபாவளி போட்டோ
இப்படி அனிருத் திருமண புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி கொண்டிருக்கும் நேரத்தில், ஷாலினி தனது கணவர் அஜித் குமாருடன் எடுத்துக்கொண்ட தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இருவரும் ட்ரெடிஷனல் உடையில் அழகாக போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் அஜித் ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

அஜித் - ஷாலினி இருவரும் தங்களுடைய குடும்ப புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியிடுவது கிடையாது. எப்போதாவது ஷாலினி ஒரு புகைப்படத்தை பகிர்ந்தாலே அது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கவனம் பெறும். அந்த வகையில் இப்போது வெளியாகியிருக்கும் தீபாவளி புகைப்படங்களும் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே அனிருத் திருமண புகைப்படங்கள் வைரலாகும் நேரத்தில் ஷாலினியும் அஜித்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டிருப்பதால், 'அனிருத்துக்கு போட்டியாக போட்டோ போட்டிருக்கிறாரா?' என்று சிலர் கிண்டலாகக் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். உண்மையில் அப்படி ஒரு போட்டி எதுவும் கிடையாது. ஷாலினி தனது குடும்பத்துடன் கொண்டாடிய மகிழ்ச்சியான தருணங்களை ரசிகர்களுடன் பகிர்ந்திருக்கிறார் என்பதுதான் இதில் முக்கியம்.

பைக் ரேஸில் பிஸி
அஜித் தற்போது திரைப்படங்களை விட கார் மற்றும் பைக் ரேஸ்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். வெளிநாடுகளில் நடைபெறும் பந்தயங்கள், பயிற்சி என அவருடைய நேரம் பெரும்பாலும் ரேஸிங் தொடர்பான வேலையில் இருக்கிறது. இதனால் அவர் குடும்பத்துடன் நேரம் செலவிடும் புகைப்படங்கள் வெளியாகும்போதெல்லாம் ரசிகர்கள் ஆர்வமாக பார்க்கிறார்கள்.
அந்த வகையில் இப்போது ஷாலினி வெளியிட்டுள்ள புகைப்படங்களில் அஜித் வேஷ்டி சட்டையில் மனைவியுடன் தீபாவளியை கொண்டாடியிருப்பதை பார்த்து, 'ரேஸில் இவ்வளவு பிஸியாக இருந்தாலும் குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடியிருக்கிறாரே' என்று ரசிகர்கள் வியந்து வருகின்றனர். அனிருத் திருமண புகைப்படங்கள் ஒரு பக்கம், அஜித் - ஷாலினியின் தீபாவளி புகைப்படங்கள் இன்னொரு பக்கம் என இப்போது சோசியல் மீடியாவில் இரண்டு நட்சத்திரக் குடும்பங்களின் புகைப்படங்களும் பேசுபொருளாகி இருக்கின்றன.


Click it and Unblock the Notifications
