சோபிதாவின் கழுத்தை கவனிச்சீங்களா? தங்க நகையுடன் வந்து நின்று.. அதென்ன அந்த நடிகைகள் மாதிரியே இருக்கே
சென்னை: திருமணத்தின்போது, நடிகை சோபிதா அணிந்திருந்த நகைகள், கடந்த ஒரு வாரம் கடந்தும் இணையவாசிகளை ஈர்த்து வருகிறது.. சோபிதா துலிபாலா அணிந்திருந்த நகைகள் பாரம்பரியமானதாகவும், தனித்தன்மை வாய்ந்ததாகவும் சொல்லப்பட்டு வரும்நிலையில், அந்த நகைகள் குறித்த சந்தேகங்களை இணையவாசிகள் சிலர் கிளப்பி விட்டு வருகிறார்கள்.
சமந்தாவுடனான விவாகரத்துக்கு பிறகு, நடிகை சோபிதாவுடன் டேட்டிங் செய்து கொண்டிருந்த நாக சைதன்யா, சமீபத்தில் அவரை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில், இரு வீட்டினுடைய சொந்தங்களும் திரைப்பிரபலங்களும் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தினார்கள்.
பிராமண கலாச்சாரம்: தமிழ் மற்றும் பிராமண கலாச்சாரத்தின் அடிப்படையில், சோபிதா துலிபாலா மற்றும் நாக சைதன்யா திருமணம் நடைபெற்றது. இதில் சோபிதாவின் உடை நகைகள் அலங்காரம் இணையவாசிகளை வெகுவாக ஈர்த்துள்ளது.

கடந்த 4 நாட்களுக்கு முன்புகூட, நெட்டிசன்கள் சிலர், சோபிதாவின் நகைகளை பார்த்து ஒரு செகண்ட் ஆச்சரியப்பட்டனர். "சோபிதா அணிந்திருக்கும் நகைகளும், திருமணத்தின்போது சமந்தா அணிந்திருந்த நகைகளும் ஒரே மாதிரி இருக்கிறதே" என்று சந்தேகம் கிளப்பினார்கள்.
வேறு வேறு டிசைன்: பிறகு,''இரண்டு நகையும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தாலும், டிசைன் வேற வேற மாதிரியாக இருக்கிறது" என்று நெட்டிசன்களே அதற்கு பதிலையும் சொல்லியிருந்தனர்.
இதனால் அந்த சலசலப்பு அத்துடன் ஓய்ந்து விட்டதாக நினைத்தால், மறுபடியும் சோபிதாவின் நகைகள், ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த நகைகள் போலவே இருப்பதாக இணையவாசிகள் இபபோது சந்தேகத்தை கிளப்பியிருக்கிறார்கள்... அதாவது, சோபிதாவின் நகைகள், பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் த்ரிஷா இருவரும் அணிந்திருந்த நகைகளை போலவே இருக்கிறதாம்.
இந்த நகைகளுடன், நீதா லுல்லா டிசைன் செய்திருந்த உலோகத்தங்க நிறத்திலான பிரமிக்க வைக்கும், காஞ்சிபுரம் புடவையை சோபிதா அணிந்திருந்தார்.. வெள்ளை மற்றும் சிவப்பு நிற புடவையுடன், மேற்கண்ட நகைகளை அணிந்திருந்தார் சோபிதா. மணமகளின் இந்த ஆடை, ஆபரண, அலங்காரங்கள்தான், இப்போதுவரை ஆச்சரியத்துக்குரியதாகவும், பேசுபொருளாகவும் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
பொன்னியின் செல்வன்: இந்நிலையில்தான், சோபிதாவின் திருமண நகைகள், பொன்னியின் செல்வன் படத்தில், நடித்த ஐஸ்வர்யா ராய், த்ரிஷா அணிந்திருந்த நகைகளை போலவே இருப்பதாக சிலர் கமெண்ட்களை பதிவிட்ட நிலையில், இதற்கான விவரமும் வெளியாகியிருக்கிறது.
அதாவது, பொன்னியின் செல்வன் படத்தில், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சோபிதா உள்ளிட்டவர்கள் அணிந்திருந்த நகைகள் பெரும்பாலும், பாரம்பரிய முறையில் பிரபல நிறுவனம் டிசைன் செய்த நகைகள்தானாம். இந்த படத்தில் நடிக்கும்போதே சில நகைகளை பார்த்து சோபிதா ஆச்சரியப்பட்டாராம்.. அந்த நகைகள் அவருக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டதாம்.
தங்க கொலுசு: அதனால்தான் தன்னுடைய திருமணத்திலும், அதே போன்ற தங்க நகைகளை, டிசைன் செய்து வாங்கி அணிந்திருந்தாராம். அதுமட்டுமல்ல, தன்னுடைய திருமணத்திற்காக ஒவ்வொன்றையும் சோபிதாவும், நாக சைதன்யாவும் பார்த்து பார்த்து தேர்வு செய்திருக்கிறார்கள். அதிலும், சோபிதா காலில் தங்க கொலுசு ஆசைப்பட்டு அணிந்தாராம். இந்த கொலுசுகூட இணையத்தில் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
சோபிதா கல்யாணத்தில் அணிந்திருந்த நகைகள் கிட்டத்தட்ட 300 சவரன் இருக்கலாம் என்று தகவல்கள் ஏற்கனவே கசிந்த நிலையில், இன்னும் இந்த திருமண நகைகள் குறித்த சலசலப்புகள் மட்டும் ஓயாமலேயே உள்ளது.












Click it and Unblock the Notifications