டாப் நடிகரின் காதலை சேர்த்து வைத்த நடிகை திரிஷா.. ஆனால் இப்போ டைவர்ஸ் ஆக போகுதே ! பீல் பண்ணும் மனைவி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை திரிஷா பற்றிய செய்திகள் சமீப காலமாகவே அதிகமாக பேசப்பட்டு வரும் நிலையில் அவர் பேசிய பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலகி வருகிறது. அதில் டாப் நடிகர் ஒருவர் காதலித்து வந்தபோது அவருடைய காதல் சேர்வதற்கு திரிஷா உதவி செய்திருக்கிறாராம். ஆனால் அந்த காதல் திருமணம் இப்போது டைவர்ஸ் ஆக போகிறதாம். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை திரிஷாவிற்கு அறிமுகமே தேவை இல்லை. 90ஸ் காலகட்டத்தில் சினிமாவில் என்ட்ரி கொடுத்தாலும் 20 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் டாப் ஹீரோயினியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு சினிமாவை விட்டு விலகி இருந்தார். இதனால் திரிஷா அவ்வளவு தானா? இனி சினிமாவில் நடிக்க மாட்டாரா? என்ற கேள்வி பலருக்கும் இருந்தது.

Trisha Ravi Mohan Khushbu Kollywood

திரிஷா கம்பேக்

ஆனாலும் 96 படத்தின் மூலம் மீண்டும் பழைய நிலையில் இப்போது சினிமாக்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான் இவர் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான சமயத்தில் பேசிய பேட்டி ஒன்று இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் பிக் பாஸ் பிரபலமும் குக் வித் கோமாளி டைட்டில் வின்னருமான காரக்குழம்பு கனி திரிஷாவை பேட்டி எடுத்திருக்கிறார்.

திரிஷா பேட்டி

அப்போது திரிஷாவிடம் பொன்னியின் செல்வன் படத்தில் உங்களுக்கு அண்ணன் காதலித்த பெண்ணை பிடிக்காது அதேபோல நிஜத்தில் நீங்க பிரித்து வைத்த காதல் கதை எதுவும் இருக்கிறதா? என்று கேள்வி கேட்க, அதற்கு திரிஷா அய்யய்யோ சத்தியமா அப்படியெல்லாம் இல்லைங்க என்று சொல்ல, அப்போ நீங்க ரொம்ப நல்ல பொண்ணா என்று கனி கேட்டதும் அதற்கு திரிஷா நான் நல்ல பொண்ணு எல்லாம் கிடையாது ஆனால் மத்தவங்க காதல் கதையில் எனக்கு பிசினஸ் இல்ல... சொல்லப்போனால் சில காதல் கதையை சேர்த்து வைத்திருக்கிறேன் என்று சொன்னதும் அப்போது பக்கத்தில் இருந்த ரவி மோகன் அந்த வரிசையில் நானும் ஒருவன் என்று சொல்லி இருக்கிறார்.

காதல் திருமணம்

அதாவது ரவி மோகன் அவருடைய மனைவி ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த காதலுக்கு நடிகை குஷ்பூ உதவி செய்தார் என்று ஏற்கனவே பல பேட்டிகளில் ரவி மோகன் சொல்லி இருக்கிறார். அதேபோல திரிஷாவும் இவர்களுடைய காதலுக்கு உதவி செய்திருக்கிறாரா? இதற்கு முன்பு சம்திங் சம்திங் உட்பட பல படங்களிலும் திரிஷா மற்றும் ரவி மோகன் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் ரவி மோகனின் காதல் விஷயம் திரிஷாவிற்கு தெரிய வர திரிஷாவும் அவருடைய காதலுக்கு சப்போர்ட் செய்திருந்தாராம்.

விவாகரத்து

ஆனால் பல எதிர்ப்பையும் மீறி ரவி மோகன் அவருடைய மனைவி ஆர்த்தியை திருமணம் செய்து இருந்தார். 15 வருடங்களுக்கு மேலாக திருமண வாழ்க்கையில் இருந்த ரவி மோகன் திடீரென தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார். அதற்குப் பிறகு அவருடைய நெருங்கிய தோழியான பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.

மனைவி பதிவு

ஒரு திருமண பங்க்ஷனில் கூட ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் ஒரே கலரில் டிரஸ் போட்டு வந்தது பெரிதாக பேசப்பட்டது. அதேபோல சமீபத்தில் திரிஷாவும் விஜயுடன் ஒரே கலரில் டிரஸ் போட்டு வந்தது பெரிதாக பேசப்பட்டது. அந்த சமயத்தில் ரவிமோகனின் மனைவி ஆர்த்தி கூட சோகமான மற்றும் வருத்தமான பதிவுகளை வெளியிட்டு இருந்தார்.

42 லட்சம் சொத்து.. உண்மையை மறைத்து கோவாவில் ரவி மோகன் செய்த செயல்.. புது சிக்கல்! பின்னணி சம்பவம்
அதில் ஒரு பதிவில், தற்போது மட்டும் இவ்வளவு குரல் கேட்கிறதே கடந்த ஆண்டும் கூட இதே மாதிரி நடந்த போது பாதிக்கப்பட்ட ஒரு மனைவிக்கு ஆதரவாக எந்த குரலும் வரவில்லையே என்று மக்கள் பாதிக்கப்பட்டும் பெண் பிரபலமான ஒருவருடைய மனைவியாக அல்லது பரபரப்பை ஏற்படுத்தும் ஒருவருடைய மனைவியாக இருந்தால் தான் கேள்வி கேட்பார்கள் என்றெல்லாம் நான் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இப்போது திரிஷா காதலுக்கு சப்போர்ட் பண்ணுன ரவி மோகனுடைய காதலும் பிரிந்து விவாகரத்து வரைக்கும் வந்து விட்டதே என்று பலர் கமெண்ட்ஸ் கொடுத்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+