Tamil Selvi Serial: சட்னி ஃபிரிட்ஜில வச்சுருக்கேன்னு சொல்ற மாதிரி இது சொல்லுதே!
சென்னை: சன் டிவியின் தமிழ்ச்செல்வி சீரியலில் தில்ரூபா சரவணனை கொலை செய்து ஃபிரிட்ஜுக்குள் வச்சு இருக்கேன்னு என்னவோ மல்லித்தழை சட்னியை அரைச்சு ஃபிரிட்ஜுல வச்சு இருக்கேன்னு சொல்ற மாதிரி கேஷுவலா சொல்றா.
இன்றைய தொலைக்காட்சி சீரியல்களின் நிலைமை இதுதான். ரொம்ப அசால்ட்டா பொண்ணுங்க கொலை செய்யத் திட்டம் போடுவாங்க. கொடூரமான செயல்கள் எல்லாம் இதன் மூலம் செய்வாங்க.
கெமிக்கல் மருதாணி, பாலில் விஷம், சாப்பாட்டில் விஷம், ஆள் கடத்தல், கடத்திவிட்டு ரவுடிகளை விட்டு கொலை செய்யச் சொல்வது, எங்காவது கடத்தி வச்சு கரண்ட் ஷாக் கொடுத்து சாகடிக்க நினைப்பது இப்படி கற்பனைக்கும் எட்டாத பல விஷயங்கள் சீரியலில் வில்லிகள் அரங்கேற்றும் சதி செயல்.

தமிழ்ச்செல்வி சீரியல்
சன் டிவியின் தமிழ்ச்செல்வி சீரியல் கதை எங்கியோ ஆரம்பித்து எங்கியோ போகுது என்கிற மாதிரி, ஆரம்பத்தில் கிராமத்து பெண்ணான தமிழ்ச்செல்வி கலெக்டருக்கு படிக்க ஆசைப்பட்டு, பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கணும் என்பது போல இருந்தது. போகப் போக அந்த பாயிட்ஸ் கதையில் இருப்பதாகவே தெரியாதபடி, நகரத்து இளைஞனை மணந்துக்கொண்டு குடும்பத்தில் மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமை, மாமனார் கொடுமை என்று திசை திரும்பிப் போனது.

முந்தானை முடிச்சு ஊர்வசி
குழந்தை பிறந்தால் கணவன் உயிருக்கு ஆபத்து என்று ஜோதிடம் சொல்ல, தமிழ்ச்செல்வி குழந்தை பெத்துக்க வேண்டாம் என்று முந்தானை முடிச்சு ஊர்வசி மாதிரி குடும்ப கட்டுப்பாடு செய்துக்கொண்டது. முந்தானை முடிச்சு போலவே அந்த டாக்டர் தமிழ்ச்செல்விக்கு சும்மா கருத்தடை ஆபரேசஷன் செய்து விட்டேன் என்று பொய் சொல்லி அனுப்புவது என்று கதை நகர்ந்தது. இதற்கு நடுவில் புருஷன் உயிரை காப்பாற்ற அக்கினியில் அடிபிரதட்சணம் வேற செய்கிறாள் தமிழ்ச்செல்வி

ஏனோ பழிக்குப் பழி
தமிழ்ச்செல்வி மீது ஏனோ பழிக்குப் பழி வாங்குகிறேன் என்று இலக்கியா தனது அண்ணியுடன் சேர்த்துக்கொண்டு சதி செய்வது என்று கதையின் போக்கு மாற... இதற்கு நடுவில் தமிழ்ச்செல்வியின் புருஷனோட அண்ணன் ஆற்றலை தில்ரூபா பிளாக் மெயில் செய்து பணத்தை வாங்குவாள், இப்போது தமிழ்ச்செல்விக்கு இவளும் எதிரியாகி விடுகிறாள்.

தமிழ்ச்செல்வி சரவணன்
தமிழ்ச்செல்வியின் அத்தை மகன் சரவணனை கொன்றுவிட துடிக்கிறாள் தில்ரூபா. இதன் மூலம் தமிழ்ச்செல்வியை பழிவாங்க நினைக்கிறாளாம். அதன் படி கல்யாண வீட்டில் சரவணனை பட்டென்று இவள் தட்ட, அவன் பொட்டென்று விழுந்து இறந்து விடுகிறான். உடனே சரவணனை பிரிட்ஜில் வைத்து மறைத்து விடுகிறாள் தில்ரூபா. பின்னர் அடியாட்களிடம் சொல்கிறாள், சரவணனை கொன்று ஸ்டோர் ரூமில் ஃபிரிட்ஜில் வச்சு இருக்கேன். அதை எடுத்துக்கிட்டு போங்கடான்னு அடியாட்கள் கிட்டே சொல்றா.
கொலை செய்யறது எவ்ளோ சுலபமா பெண்கள் வாயில் இருந்து வருது பாருங்க...!
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications