மனோஜ் பாரதிராஜாவின் நிறைவேறாத கடைசி ஆசை..13 வருடம் காத்திருந்தும் நடக்கல! வருத்தமான தகவல்
சென்னை: இயக்குனர் பாரதிராஜாவின் ஒரே மகனான மனோஜ் நேற்று மரணமடைந்தார். அவருடைய மறைவு செய்தி ஒட்டு மொத்த திரையுலகையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. 48 வயதில் நிறைவேறாத கனவுகளோடு மனோஜின் வாழ்க்கை முடிந்து விட்டது குறித்து பலரும் வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் 13 வருடங்களாக காத்திருந்த மனோஜின் ஆசை குறித்து அவர் ஒரு பேட்டியில் பேசியது பலரையும் வருத்தம் அடைய செய்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் பிரபலங்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் சிலர் அடுத்தடுத்து காலமாகி கொண்டிருக்கிறார்கள். வந்த வரிசையில் கடந்த வருடத்தில் இளையராஜாவின் மகள் பவதாரணியின் மறைவு செய்தி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. பவதாரணிக்கு புற்றுநோய் பாதிக்கப்பட்டு தெரியாமல் இருந்த நிலையில், நான்காவது ஸ்டேஜில் தான் அவருக்கு புற்றுநோய் என்பதே கன்பார்ம் செய்திருந்தனர்.

அடுத்தடுத்து துயரம்
அதற்குப் பிறகு பவதாரணியை காப்பாற்ற முடியாது என்று டாக்டர்களே கைவிட்ட நிலையில் மனம் தளராமல் குடும்பத்தினர் போராடி வந்த பிறகும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்து போனார். அதே போல இளையராஜாவின் நண்பரான பாரதிராஜாவின் ஒரே மகனான மனோஜ் பாரதிராஜா நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தது சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தந்தையை போல இயக்குனராக ஆசை
மனோஜும் தந்தை போல வெற்றிகரமான இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு இருந்தார். அந்த கனவு கடந்த 2023 ஆம் ஆண்டு நனவானது மனோஜ் பாரதிராஜா இயக்கிய முதல் திரைப்படமான மார்கழி திங்கள் கடந்த 2023ல் ரிலீஸ் ஆனது. அந்த படத்தில் பாரதிராஜாவும் நடித்திருந்தார். இயக்குனராக அவர் ஒரு படத்தை இயக்கி இருந்தாலும் தான் ஆசைப்பட்ட ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பதுதான் அவருடைய பெரிய கனவாக இருந்ததாக பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.
அடுத்தடுத்து தடங்கல்கள்
தன்னுடைய தந்தை இயக்கிய சிகப்பு ரோஜாக்கள் படத்தின் அடுத்த பாகத்தை எடுக்க வேண்டும் என்று பல வருடங்களாக போராடினார். ஆனால் அது கடைசியில் நடக்காமலே போனது. அந்த படத்திற்காக கதையை 13 ஆண்டுகளுக்கு முன்பே தயார் செய்து வைத்து விட்டாராம். அந்த ஸ்கிரிப்ட் கையில் எடுக்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு தடங்கல் வந்து கொண்டே இருக்கிறது என்று பேட்டியில் பேசி இருந்தார்.
மனோஜின் நிறைவேறாத 13 வருட ஆசை
அதனால் சிவப்பு ரோஜா படத்தை பல ஆண்டுகளாக கிடப்பில் போட்டு வந்தார். 13 வருடங்களாக இந்த படத்தை எப்படியாவது எடுக்க வேண்டும் என்று ஆசையோடு காத்திருந்த மனோஜ் பாரதியின் கனவு நிறைவேறாமலே போயிருக்கிறது. நடிகர் கமல் நடிப்பில் பலரையும் மிரள வைத்த சிவப்பு ரோஜாக்கள் திரைப்படம் கடந்த 1978 ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தில் ஸ்ரீதேவி, கவுண்டமணி, வடிவுக்கரசி என மிகப் பெரிய பட்டாளமே நடித்திருந்தனர்.
சிவப்பு ரோஜாக்கள் 2
ஆனால் இரண்டாவது பாகத்தை சிம்பு மற்றும் சுருதிஹாசனை வைத்து எடுப்பதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கிறது. பாரதிராஜா நடிகராகவும் இயக்குனராகவும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். ஆனால் தன்னுடைய தந்தையை போல தன்னால் சாதிக்க முடியவில்லை என்றாலும் அதற்காக போராடிக் கொண்டிருந்தார்.
மனோஜ் சந்தித்த அவமானம்
தாஜ்மஹால் திரைப்படத்தில் இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் போது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இவரை அப்போதே பலரும் உருவகேலி செய்திருந்தார்கள். ஆனாலும் அந்த திரைப்படம் பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இப்ப வரைக்கும் மனோஜ்க்கு தாஜ்மஹால் படமே பெரிய அடையாளத்தை கொடுத்துக் கொண்டிருந்தது.
மனோஜ் நடித்த திரைப்படங்கள்
இந்த திரைப்படத்திற்கு பிறகு கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், ஈர நிலம் போன்ற படங்களில் மனோஜ் கதாநாயகனாக நடித்திருந்தார். அதுபோல சமுத்திரம் திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் உடன் அவருக்கு தம்பியாக நடித்திருந்தார். அதற்குப் பிறகு நடிப்பிலிருந்து விலகி இருந்த நிலையில் தன்னுடைய தந்தையான பாரதிராஜா இயக்கிய அன்னக்கொடி படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். ஆனால் அந்த திரைப்படம் பெரிய அளவில் அவருக்கு பெயர் கொடுக்கவில்லை.
அதுபோல 2002 ஆம் ஆண்டு வெளியான விருமன் திரைப்படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த நிலையில் இவருடைய மறைவுக்கு பல பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications