இயக்குனர் போஸ் வெங்கட் வீட்டில் சோகம்.. அக்கா, அண்ணனை தொடர்ந்து அம்மா மரணம்.. முதல்வர் வருத்தம்
சென்னை: மெட்டி ஒலி சீரியலில் போஸ் கேரக்டரில் நடித்து பிரபலமான வெங்கட் தற்போது இயக்குனராகவும் இருக்கும் நிலையில் அவர் இயக்கிய சார் திரைப்படம் நேற்று வெளியானது. அதே நேரத்தில் அவருடைய அம்மாவ மரணம் அடைந்திருக்கிறார். இந்த வருத்தமான செய்திக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தன்னுடைய வருத்தத்தை பகிர்ந்து இருக்கிறார்.
நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடித்த சார் திரைப்படம் நேற்று வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. கல்வியின் அவசியத்தையும் கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதையும் இந்த படம் பேசி உள்ளது. அதே நேரத்தில் இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் நேரத்தில் போஸ் வெங்கட் வீட்டில் ஒரு துக்கம் நடந்திருக்கிறது.

போஸ் வெங்கட்டின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையூர் கோயில் தாலுகாவில் உள்ள பாண்டி பத்திரம் என்று சிறிய கிராமம் தான். அங்கு வசித்து வந்த போஸ் வெங்கட்டின் அம்மா நேற்று மாலை 5 மணி அளவில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 83. அவருடைய இறுதி சடங்குகள் இன்று மாலை அவருடைய சொந்த ஊரான அறந்தாங்கியில் நடைபெற இருக்கிறது.
போஸ் வெங்கட்டின் அம்மாவின் மறைவிற்கு முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அதில், "திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை கழக பேச்சாளரும் சமூகப் பொறுப்புள்ளவரும், இயக்குனர், நடிகருமான போஸ் வெங்கட் அவர்களின் தாயார் திருமதி ராஜாமணி அம்மாள் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார் என்று தெரிந்து நான் வேதனை அடைந்தேன். அரவணைத்து ஆளாக்கிய அன்னையை இழந்து நிற்கும் போஸ் வெங்கட் அவர்களுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சீரியலிலும் நடித்து பிரபலம் அடைந்த போஸ் வெங்கட் சில திரைப்படங்களில் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு கன்னி மாடம் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். அந்த திரைப்படத்தின் மூலமாகத்தான் இயக்குனர் அவதாரம் எடுத்தார். அந்த திரைப்படத்தில் தான் ஆரம்ப காலகட்டத்தில் ஆட்டோ டிரைவராக இருக்கும்போது பட்ட கஷ்டங்கள் பற்றி கதையாக எடுத்து இருந்தார்.
அதே நேரத்தில் போஸ் வெங்கட்டின் சகோதரி வளர்மதி மாரடைப்பு காரணமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 25 நான்காம் தேதி சென்னையில் காலமானார். இதனால் அவருடைய குடும்பத்தில் பெரும் துக்கத்தில் இருந்தனர். அந்த இறுதி சடங்கில் பங்கேற்ற போஸ் வெங்கட்டின் சகோதரரான ரங்கராஜனும் தன்னுடைய சகோதரியை பார்த்து கதறி அழுது திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சகோதரியின் உடல் மீது விழுந்து அவரும் மரணம் அடைந்தார்.
இவர்களது இறுதி ஊர்வலம் அறந்தாங்கியில் நடைபெற்றது. இந்த சம்பவம் திரை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. போஸ் வெங்கட் இந்த வருத்தத்தில் இருந்து மீண்டு வர வேண்டும் என்று அப்போது அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வந்தனர். பெரும் சோகத்திற்கு மத்தியிலும் போஸ் வெங்கடேஷ் சார் படத்தை இயக்கி முடித்திருந்தார். அந்த படம் வெளியான அதே நாளில் அவருடைய வீட்டில் மீண்டும் ஒரு துக்கம் நடந்திருக்கும் நிலையில் இந்த சோகத்தையும் தாண்டி அவர் அதிலிருந்து வெளிவர வேண்டும் என்று பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications