கனகாவுக்கு நான் அப்பான்னு தெரியாது! சொத்துக்காக கொலை பண்ண வந்தாங்க! டைரக்டர் தேவதாஸ் பகீர் குற்றசாட்டு
சென்னை: நடிகை கனகாவின் அப்பாவும் சீனியர் நடிகை தேவிகாவின் கணவருமான சினிமா இயக்குனர் தேவதாஸ் தன்னுடைய மகள் கனகா பற்றி பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதோடு தனக்கு கொலை மிரட்டல் வந்தது குறித்தும் பகீர் தகவலை பகிர்ந்து இருக்கிறார். கனகாவுக்கு மூன்று வயதாக இருக்கும் போது தேவதாஸ் கனகாவின் அம்மா தேவிகாவை பிரிந்த நிலையில் அதற்கு பிறகு என்ன நடந்தது என்று தேவதாஸ் பேசியிருக்கிறார்.

80ஸ் காலகட்டத்தின் இறுதியில் சினிமாவில் அறிமுகம் ஆகி 90ஸ்களுக்கு பிரபலமான கனகா தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு கனகாவின் புகைப்படம் வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. எப்படி இருந்த நடிகை இப்படி மாறிவிட்டாரே என்று பலரும் பீல் பண்ணி வந்தனர். அதோடு கனகா குறித்து பல வதந்திகளும் பரவி வந்தது. கனகாவிற்கு திருமணம் முடிந்து அவருடைய கணவர் பிரிந்து விட்டார் அதனால் கனகா மனதளவில் பிரச்சனையில் இருக்கிறார் என்றும், அதேபோல கனகாவின் அம்மா தேவிகா இறப்பிற்கு பிறகு கனகா யாருடனும் பேசாமல் வீட்டிற்குள் தனியாக வசித்து வருகிறார் அவர் யாரையும் சந்திக்க விரும்பவில்லை என்றெல்லாம் கூறப்பட்டு வந்தது.
கனகாவின் தந்தை இயக்குனர் தேவதாஸ்
இந்த நிலையில் கனகாவின் அப்பாவான இயக்குனர் தேவதாஸ் அவள் விகடன் youtube சேனலுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் கனகாவிற்கு மூன்று வயது இருக்கும்போது நானும் கனகாவின் அம்மாவும் பிரிஞ்சிட்டோம். கனகாவிற்கு நான் தான் அப்பா என்று தெரியாது. கனகா என்னை பார்க்க வேண்டும் என்று சின்ன வயதில் ஆசைப்பட்டு கேட்கும் போது அவருடைய அம்மாவை நான் யார் என்று அவருக்கு சொல்லாமலே வளர்த்து விட்டார்.
மகளின் பிரிவு
கனகா ஸ்கூல் படிக்கும்போது கூட நான் அந்த ஸ்கூலுக்கு போனால் உடனே ஸ்கூலை மாற்றி விடுவார். அதனால் கனகாவின் படிப்பு கெட்டுப் போய் விடக்கூடாது என்பதற்காக நானும் கனகாவை பார்க்க போகவே இல்லை. பிறகு நான் சபரிமலைக்கு மாலை போட்டு சென்றிருந்தேன். அப்போது அந்த பஸ்ஸில் கனகாவும் அமர்ந்திருந்தார். என்னை பார்த்ததும் தள்ளி அமர்ந்து பக்கத்தில் உட்காருங்கள் என்று இடம் தந்தார்.
கனகா பற்றி பேசிய அப்பா
ஆனால் அப்போது நான் கனகாவிற்கு அப்பா என்று தெரியாது, நான் யாருன்னு தெரியுமா என்று கேட்டேன். எனக்கு தெரியலையே யாரு என்று கேட்டா. அப்போ நான்தான் உன்னுடைய அப்பா என்று அறிமுகப்படுத்திக்க வேண்டிய நிலைமையில் இருக்கிறேன் என்று அழுதுவிட்டேன். அதற்குப் பிறகு தேவிகா இறந்த பிறகும் நான் கனகாவை சந்தித்தேன். கனகாவை இன்னொரு திருமணம் செய்து கொள், நீ மகிழ்ச்சியாக வாழ வேண்டும் எனக்குனு ஒரு வாரிசு பெற்றுக்கொடு என்று கேட்டதற்கு உங்களுக்கு வாரிசு வேண்டுமென்றால் நீங்கள் இன்னொரு திருமணம் செய்து கொள்ளுங்கள், எதற்காக என்கிட்ட வந்து பேசுறீங்கன்னு கேட்டாங்க.
காதல் திருமணம்
கனகாவின் அம்மா தேவிகா என்னை விரட்டி விரட்டி காதலிச்சாங்க. நான் அப்போ நான் அவர்களுடைய காதலை ஏற்றுக்கொள்ள பயந்தேன். ஏனென்றால் நான் அம்பது ரூபா சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும்போது அவங்க ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குனாங்க. என்னை விட பல மடங்கு பெரிய நடிகையாக இருந்தாங்க. அதனால நமக்கு இது செட் ஆகாது என்று நான் நினைத்தேன். ஆனால் தேவிகா உங்களை மனப்பூர்வமாக விரும்புகிறேன் என்று சொன்னார்.
கொலை முயற்சி
அதற்குப் பிறகு திருமணம் செய்தேன் திருமணத்திற்கு பிறகு சில வருடங்கள் கழித்து எனக்கு என்னுடைய படங்கள் நல்ல ஓட தொடங்கியதும் நானும் அதிகமாக சம்பாதிக்க தொடங்கினேன். என்னுடைய சொத்துக்கள் வேண்டும் என்று தேவிகா பிரச்சனை செஞ்சாங்க. அதனால நான் பிரிஞ்சு போயிட்டேன். அதற்கு பிறகு அந்த சொத்துக்காக எனக்கு கொலை முயற்சி வரைக்கும் நடந்தது.
குற்றசாட்டுகள்
கனகா ரொம்ப படிக்கல அதனால அவனுக்கு வெளி உலகம் தெரியல. யாரை பார்த்தாலும் பயம். யாரிடமும் அன்பாய் இருக்க முடியல என்று அந்த பேட்டியில் இயக்குனர் தேவதாஸ் பேசியிருக்கிறார். ஏற்கனவே கடந்த 2013 ஆம் ஆண்டு கனகா மற்றும் அவருடைய தந்தை இருவரும் ஒரு பேட்டியில் பேசி இருந்தனர். அப்போது தங்களுடைய சொத்து பிரச்சனை குறித்து பேசும்போது கனகா முன்பு அவருடைய தந்தை தேவதாஸ் தேவிகா தன்னை கொலை செய்ய ஆள் அனுப்புனாங்க என்று சொன்னபோது கனகா கோபப்பட்டு வாக்குவாதம் செய்திருந்தார்.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
அப்போது செய்தியாளர்களிடமும் என்னுடைய சொத்துக்களை எழுதி வாங்கிவிட்டு என்னுடன் சேர்ந்து வாழாமல் என்னை இன்னொரு திருமணம் செய்து கொண்டு வாழு என்று மரியாதை இல்லாமல் பேசுறாங்க என்று கனகா மீது அவருடைய தந்தை தேவதாஸ் பல குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். அதேபோல இப்போது மீண்டும் கனகா பற்றி தேவதாஸ் பேசி இருக்கிறார் இது கறித்து கனகா விளக்கம் கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications