Thalaivar 173: ரஜினியின் தலைவர் 173 இயக்குநர் தனுஷா? இது புது கதையா இருக்கே? பின்னணி சம்பவம்
சென்னை: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான கமல்ஹாசன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் தலைவர் 173 திரைப்படம் குறித்த பேச்சுதான் இப்போது கோடம்பாக்கத்தில் ஹாட் டாபிக் படத்தின் ஹீரோவும், தயாரிப்பாளரும் முடிவாகிவிட்ட நிலையில், அந்தப் பிரம்மாண்ட கூட்டணிக்கு இன்னும் இயக்குநர் மற்றும் தரமான கதை அமையாமல் இருப்பது, சினிமா ரசிகர்களிடையே பெரும் கவலையையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. புது தகவல் ஒன்று வலம் வருகிறது.
ரஜினியும் கமலும் கைகோர்த்தும், ஒரு தரமான இயக்குநர் கிடைக்காமல் ராஜ்கமல் பிலிம்ஸ் தவிப்பது வேதனையளிக்கிறது. இப்போது தென்னிந்தியத் திரையுலகிலேயே ராஜமௌலி, பிரசாந்த் நீல், சந்தீப் ரெட்டி வங்கா, சுகுமார், ரிஷப் ஷெட்டி என உலகின் கவனத்தை ஈர்க்கும் திறமையான இயக்குநர்கள் உருவாகி உள்ளனர். இப்படியிருக்க, கோலிவுட் மட்டும் ரஜினிகாந்த் போன்ற பான் இந்தியா நடிகரை வைத்து இயக்க ஆளில்லாமல் திணறுவது, "கோலிவுட்டின் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்கிறது" என்ற விவாதத்தை நாலாபுறமும் கிளப்பியுள்ளது.

இதைப்பார்த்த டோலிவுட் ரசிகர்கள், "ரஜினிகாந்த் படத்தை இயக்கவே கோலிவுட்டில் இயக்குநர்கள் இல்லையா?" என்று கிண்டலாகச் சிரிப்பது தமிழ் சினிமாவுக்குச் சற்று வேதனையளிக்கிறது. இந்த இக்கட்டான சூழலில், தலைவர் 173 படத்தை நடிகர் தனுஷ் இயக்கப் போவதாகவும் ஒரு உலக மகா உருட்டு சோசியல் மீடியாவில் பரவிக் கொண்டிருக்கிறது.
தனுஷ், 'பவர் பாண்டி' போன்ற படங்களை இயக்கி இயக்குநராக அறிமுகமாகி தொடர்ந்து சில படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார் ஆனாலும் அவரால் அவருக்கே ஒரு மெகா பிளாக்பஸ்டர் படத்தை இயக்கிக் கொள்ள முடியாத சூழல் தான் உள்ளது. "அப்படியிருக்க, ரஜினிகாந்தை வைத்து அவரால் பேன்-இந்தியா படம் பண்ண முடியாது" என்றும், இது யாரோ சில நெட்டிசன்களின் வேலைவாய்ப்பற்ற வேலை தான் என்றும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
அதே நேரத்தில் அஜித்தை வைத்து அவருடைய தீவிரமான ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் குட் பேட் அட்லீ படத்தை எடுத்து சூப்பர் ஹிட் ஆக்கியது போல ரஜினிகாந்தின் தீவிரமான ரசிகரான அவருடைய முன்னாள் மருமகன் தனுஷ் ரஜினிகாந்துக்கு சூப்பரான கதை ரெடி பண்ணி விடுவார் என்றும் சிலர் கூறி வருகிறார்கள்.
லோகேஷுக்கு டாட்டா
தலைவர் 173-க்கு இயக்குநர் கிடைக்காததற்குக் காரணம், சில முன்னணி இயக்குநர்கள் விலகியதும் தான். இயக்குநர் சுந்தர் சி ஆரம்பத்தில் ரஜினியை இயக்க ஆர்வம் காட்டினார். ஆனால், லோகேஷ் கனகராஜின் 'லியோ' பட விமர்சனங்களுக்குப் பிறகு, அவரது நிலைமை போலத் தன்னுடைய படமும் ஆகிவிடுமோ என்று பயந்து சுந்தர் சி தானாகவே ஒதுங்கிக் கொண்டதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. சுந்தர் சி ஒதுங்கிய நிலையில், தயாரிப்பாளர் கமல்ஹாசன் இயக்குநர் கிடைக்காமல் ரொம்பவே தவியாகத் தவித்துக் கொண்டிருக்கிறார்.
ரஜினி ரசிகர்கள் தற்போது, "ரஜினி படத்தை கமலே இயக்கினால் சிறப்பாக இருக்கும்!" என்று சமூக ஊடகங்களில் ஒரு புதிய கோரிக்கையை வைத்து வருகின்றனர். எது எப்படியோ, இந்த இரண்டு ஜாக்ஸ்டார் கூட்டணியின் தலைவர் 173 படம் தொடங்குவதற்குள், இந்த டைரக்டர் பஞ்சாயத்து ஓயுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!












Click it and Unblock the Notifications