கரடு முரடாக இருந்தாலும் இத்தனை அன்பா? பிரிந்த மனைவிக்குத்தான் என் வீடு! மிஷ்கின் உருக்கம்
சென்னை: தான் தனது மனைவியைப் பிரிந்து வாழ்ந்தாலும், தான் சம்பாதித்த ஒரே சொத்தான தனது வீடு, மனைவிக்குத்தான் என்று இயக்குநர் மிஷ்கின் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். தனது மனைவியை இன்றும் பத்திரமாகவும், அன்பாகவும் பார்த்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் விவரித்திருப்பதாவது:
"என் மனைவி ஏழ்மையானவர் என்பதால் என் நண்பர்களுக்கு அவரைப் பிடிக்கவில்லை. அவர் வந்து என்னிடம் காதல் சொன்னவுடன், 'அப்படியா அம்மா காதலிக்கிறீர்களா, வாம்மா' என்று உடனே சம்மதம் சொன்னேன். அது என் அம்மாவுக்குப் பிடிக்காததால், என்னை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லிவிட்டார்கள். அதன் பிறகு 14 ஆண்டுகள் என் அம்மாவைப் பார்க்கவில்லை. என் முதல் படம் வெளியானதுக்குப் பிறகுதான் அவர்களைப் பார்த்தேன். நான் செய்ததுதான் சரி என்று என் மனதில் அவ்வளவு பெரிய ஆழமான நம்பிக்கை இருந்தது.
சொத்து என் வீடுதான்
இப்போது என் மனைவியுடன் நான் இல்லாமல் இருந்தாலும், நான் செய்ததுதான் சரி என்று நினைக்கிறேன். இன்றும் என் மனைவியைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்கிறேன், அன்போடு பார்த்துக்கொள்கிறேன். நான் சம்பாதித்த ஒரே சொத்து என் வீடு, அது என் மனைவிக்குத்தான்," என்று மிஷ்கின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பிரிவுக்குக் காரணம் சினிமா மீதான காதல்
மேலும் மிஷ்கின் கூறுகையில், தான் மனைவியைப் பிரிவதற்கு முக்கிய காரணம் சினிமாதான் என்றார். "சினிமா மீது எனக்குத் தீராத காதல் இருந்ததால், குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழிக்க முடியாமல் போனது. அதுவே நாளடைவில் எனக்கும் என் மனைவிக்கும் இடையே மனக்கசப்பை ஏற்படுத்தி, இருவரும் பிரிய காரணமாக அமைந்துவிட்டது.
விவாகரத்து
நான் என் மனைவியிடம் ஒருமுறை, 'விவாகரத்து செய்து கொள்ளலாமா?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'நான் கொடுக்க முடியாது' என்று சொல்லி மிகவும் அழுதுவிட்டார். அதிலிருந்து, நான் விவாகரத்தைக் கேட்கவில்லை. ஏனென்றால், எனக்கு நியாயம் புரிந்தது. அதனால், நாங்கள் இருவரும் தள்ளி நின்றுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நான் என் மகளை அவர்களிடம் கொடுத்துவிட்டேன். என் மகளிடம், 'அம்மாவை நீ பத்திரமாகப் பார்த்துக் கொள்' என்று சொல்லிவிட்டேன். இப்போது நான் சினிமாவைத் திருமணம் செய்து கொண்டேன். எனக்கு மனைவி தேவையில்லை, எனக்கு சினிமா போதும்," என்று அந்தப் பேட்டியில் கூறியிருந்தார்.
மிஷ்கின் திரைப்பயணம்
'சித்திரம் பேசுதடி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மிஷ்கின், 'அஞ்சாதே', 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்', 'துப்பறிவாளன்', 'பிசாசு', 'சைக்கோ' உள்ளிட்ட பல குறிப்பிடத்தக்க படங்களை இயக்கியுள்ளார். தற்போது 'பிசாசு 2' திரைப்படம் தயாராகி வருகிறது, இதில் நடிகை ஆன்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மிஷ்கின் தற்போது பல படங்களிலும் நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் 'மாவீரன்', 'லியோ' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications