கோவை குண்டு வெடிப்பு சம்பவம்.. சர்ச்சையாக பேசிய இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன்.. ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் சமீபத்தில் கருப்பட்டி பட ப்ரொமோஷனில் இளையராஜா பற்றியும், ரஜினிகாந்த் பற்றியும் அவர் பேசியது ஏற்கனவே சர்ச்சை ஆகி கொண்டிருக்கும் நிலையில் இப்போது அந்த நிகழ்ச்சியில் அவர் கோவை குண்டு வெடிப்பு பற்றி பேசியது விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆர் சுந்தர்ராஜன் சர்ச்சை பேச்சு

அதாவது இந்த நிகழ்ச்சியில் அவர் ஆரம்பித்தில் பேசும்போது, கோவை குண்டு வெடிப்பில் அப்பாவிகள் இறந்துட்டாங்கன்னு செய்திகள் சொல்லுவாங்க நான் சொல்லுறேன் அப்பாவியா இருக்கிறதை விட நீ செத்துப் போயிடுனு சொல்லுவேன்... யாருங்க இங்க அப்பாவியா இருக்கா? பஸ்க்கு நீங்க போறீங்க அங்க பார்த்தீங்கன்னா செய்தித்தாள் ஒரு சீட்டில் இருக்கும் நான் இடம் பிடித்திருக்கிறேனு சொல்லுவாங்க. இவங்க தான் அப்பாவியா? அப்படி எல்லாம் யாருமே கிடையாது.

சினிமாவில் எப்படியாவது முன்னேறனும் என்று கனவோடு பலர் சினிமாவுக்கு வருவாங்க. 30 வருஷம், 40 வருஷமாக ஜெயிக்க முடியாமல் போராடிட்டு இருப்பாங்க. ஒரு சிலர் எழுத்து துறைக்கு வருவாங்க, சிலர் இயக்குனராக வேண்டும் என்று வருவாங்க, சிலர் நடிக்க வேண்டும் என்று வருவாங்க ஆனால் அவங்களும் பல வருஷமா சரியா வெற்றி கிடைக்காமல் தவிச்சிட்டு இருப்பாங்க. அந்த சமயத்துல ஒரு நல்ல படம் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்று விடும்.

R Sundarrajan Sundarrajan

ஏளன பேச்சு

ஒரு உதாரணத்துக்கு சொல்லனும்னா முதல் மரியாதை மாதிரி ஒரு படம் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்று விடுகிறது. அப்போ அந்த படத்தை பார்த்துட்டு இந்த படம் ஏன் ஓடுதுன்னு தெரியலையேனு சொல்லுவான். அவனுக்கு தெரிஞ்சு இருந்தா தான் அவன் நல்ல டைரக்டரா ஆகியிருப்பானே? அது தெரியாததாலதான அவனால ஒரு நல்ல டைரக்டரா ஆக முடியல. அப்படித்தாங்க சினிமா ஒரு கனவு உலகம்.. என்று அவர் கதை கதையாக பேசிக் கொண்டிருக்க நெட்டிசன்களோ இவரே சோசியல் மீடியாவில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

இளையராஜா உடன் கம்பேர்

இவர் மட்டும் தான் எல்லாமே தெரிஞ்ச மாதிரி பேசுறதே என்பதுதான் பலருடைய கேள்வி. ஏற்கனவே இளையராஜாவுக்கு தலைகனம் இருந்தால் எனக்கு இருக்காதா? என்று அவரோடு கம்பர் பண்ணி பேசி இருக்கிறார். அதுபோல ரஜினிகாந்த் அறிவாளிகளை பக்கத்துல வைக்க மாட்டாரு, அவர் என்னை பற்றி ஒரு நிகழ்ச்சியில தப்பா பேசிட்டாரு, நான் கதையே சொல்லாம அவரை ராஜாதி ராஜா படத்தில் நடிக்க வச்சேன்னு சொல்றாரு. அவர் கதை கேட்காம வந்து நடிக்கிறதுக்கு முட்டாளா? என்றெல்லாம் பேசி இருந்தார்.

ரஜினிகாந்த் பற்றிய குற்றச்சாட்டு

இந்த நிலையில் இப்போது கோவை கொண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களை ஏளனப்படுத்துவது போல யாரு அப்பாவி என்று கேள்வி கேட்கிறார். இவர் தெரிந்து தான் பேசுகிறாரா? அல்லது மைக் கிடைத்து விட்டது என்று கதை கதையாக பேசிக் கொண்டிருக்கிறாரா? என்பதுதான் பலருக்கு சந்தேகமாக இருக்கிறது. ஆரம்பத்தில் இவரும் வைதேகி காத்திருந்தாள், ராஜாதி ராஜா போன்ற பல ஹிட்டான படங்களை இயக்கி இருக்கிறார். அதற்காக எவ்வளவு திமிரோடு பேசலாமா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

ரசிகர்கள் கருத்து

இவர் 80ஸ் 90ஸ் காலகட்டத்தில் படங்கள் இயக்கி இருந்தாலும் இப்போது இவரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் அண்ணாமலையாகத்தான் இப்போதைய தலைமுறையினருக்கு தெரியும். அதனாலேயே இவர் பேசுவதை பார்த்து அண்ணாமலை சீரியலில் எதுவும் பேச மாட்டாரு, அங்க முத்துவுக்கு தான் பிரச்சனை மேல பிரச்சனை கொடுப்பாரு. ஆனால் வெளியே வந்த பிறகு எனக்குத்தான் எல்லாமே தெரியும் என்பது போல பேசிக் கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் கலாய்க்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+