23 வருடமாக பேசாத நகுல்.. உண்மையான காரணமே இதுதான்! கலங்கிய நடிகை தேவயானி கணவர் ராஜகுமாரன்
சென்னை: நடிகை தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு தேவயானியின் தம்பி நகுல் இன்னும் ராஜகுமாரனை ஏற்றுக் கொள்ளாதது குறித்து ராஜகுமாரன் பேட்டி ஒன்றில் பேசி இருந்த நிலையில் அந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
அந்த வகையில் இயக்குனர் ராஜகுமாரனின் திரைப்படங்கள் எல்லாமே சென்டிமென்ட், காதல் காட்சிகளும் நிறைந்ததாக இருந்ததாலேயே மக்கள் மத்தியில் ராஜகுமாரின் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு இருந்தது. இந்த நிலையில் ராஜகுமாரன் மற்றும் தேவயானி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் சந்தித்த பிரச்சனைகள் குறித்து ராஜகுமாரன் பேட்டி ஒன்றை பேசி இருக்கும் நிலையில் அந்த வீடியோ இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

90s காலகட்டத்தில் சினிமாவின் உச்சக்கட்ட நடிகைகளில் ஒருவராக வலம் வந்த நடிகை தேவயானி 1993 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகம் ஆகி தற்போது வரைக்கும் நடித்துக் கொண்டிருக்கிறார். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சீரியல்களையும் விட்டு வைக்காமல் இவர் கலக்கி கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சரத்குமார் என்ற பல முன்னணி நடிகர்களோடு நடித்த தேவயானி தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்திருக்கிறார்.
தேவயானி சினிமாவில் பெரிய அளவில் பிரபலமாக இருக்கும்போது, இயக்குனர் ராஜகுமாரனும் புகழின் உச்சத்தில் இருக்கும்போதே தேவயானி பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி ராஜகுமாரை 2001 ஆம் ஆண்டு திருத்தணியில் திருமணம் செய்து கொண்டார். இதனால் கோபமடைந்த தேவயானியின் பெற்றோர் அந்த நேரத்தில் ராஜகுமாரன் மீது போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்து இருந்தனர்.
இது அந்த நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த நிலையில் தேவயானியின் தம்பி நகுல் இன்று வரை இயக்குனர் ராஜகுமாரனுடன் பேசுவதில்லையாம். தேவயானிக்கு நகுல், மையூர் என்ற இரண்டு சகோதரர்கள் உள்ளனர். தமிழ் சினிமாவில் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து நகுல் பெரிய அளவில் பிரபலமானார்.
ஆனால் சமீபத்தில் இப்போது அவர் நடிக்கும் திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனாலும் தன்னுடைய வெற்றியை கொடுக்க போராடிக் கொண்டிருக்கிறார். அதுபோல தேவயானியின் இன்னொரு சகோதரர் மையூர் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இயக்குனர் ராஜகுமாரன் தேவயானியின் குடும்பத்தை பற்றி பேசுகையில், என்னுடைய மைத்துனர் நகுல் என்னுடன் இன்னும் பேசுவது கிடையாது.
நான் செய்தது துரோகமாக அவர் இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறார். என்னை தேசத்துரோக குற்றத்தில் சம்பந்தப்பட்டவனாகவே பார்க்கிறார். மாமியார் எல்லாரும் ஏற்றுக் கொண்டாலும் அவர்(நகுல் ) மட்டும் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. அது மட்டும் அல்லாமல் தேவயானியின் குடும்பத்தில் எல்லோரும் அவரவர் வாழ்க்கையில் தனியாக சென்று விட்டார்கள்.
தேவயானியின் இன்னொரு தம்பி புனேவில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அவர் மட்டும் போனில் எப்பவாவது பேசுவார். எங்களுக்கு தமிழ்நாட்டு மக்களும், கலை உலகமும் தான் உறவுகள் என்று அந்த பேட்டியில் ராஜகுமாரன் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications