யுவன் ரசிகர்கள் கெட்ட வார்த்தையில் திட்டுறாங்க! ஆனால், நடந்த விஷயம் இதுதான்! இயக்குனர் ராம் வருத்தம்
சென்னை: இயக்குனர் ராம் இயக்கத்தில் பல வருடங்களுக்குப் பிறகு உருவாகி இருக்கும் "பறந்து போ" திரைப்படம் வரும் ஜூலை நான்காம் தேதி தியேட்டரில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது இந்த படத்திற்காக முதலில் இசையமைப்பாளர் யுவன் பாடல் இசை அமைப்பதாக இருந்தது பிறகு மாற்றப்பட்டதற்காக யுவனின் ரசிகர்கள் தன்னை கெட்ட வார்த்தையில் மெசேஜ் பண்றாங்க என்று ராம் வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.
"கற்றது தமிழ்" போன்ற பல வித்தியாசமான படங்களை கொடுத்த இயக்குனர் ராம் இயக்கி இருக்கும் "பறந்து போ" திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் சிவா, ஜு வர்கீஸ் கிரேஸ் ஆண்டனி என பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது இயக்குனர் ராம் பேசியிருந்தார்.

இயக்குனர் ராம் வருத்தம்
அதில் ராம் பேசுகையில், "இந்த படத்திற்காக முதலில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பதாக தான் இருந்தது, அதற்குப் பிறகு அவர் மாற்றப்பட்டது குறித்து யுவன் ரசிகர்கள் எனக்கு தினமும் கெட்ட வார்த்தையில் மெசேஜ் செய்றாங்க அவர்களுக்கு ஒன்னு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், இந்த படத்துக்கு யுவன்தான் இசையமைப்பாளராக இருந்தது. அவருக்கு முன்பணமும் கொடுத்திருந்தோம். திடீர்னு மதன் கார்த்தி இந்த படத்தில் அதிக பாடல்கள் இருந்தால் நல்லா இருக்கும்னு சொன்னாரு.

நடந்தது இதுதான்
அந்த நேரத்தில் தான் நாங்க ரோட்டர்டேம் திரைப்பட விழாவுக்கு படத்தை கொண்டு போகணும் என்று நினைத்து இருந்தால் அப்போது அப்போது இமான் துபாயில் இருந்தார், அப்படியான சூழ்நிலையில் அவரால் பாடல்களை கம்போஸ் செய்ய முடியவில்லை. ஆனாலும் பின்னணி இசை நான் பண்ணிடுறேன்னு அவர் சொன்னார். பிறகுதான் சந்தோஷ் தயாநிதி படத்துக்குள்ள வந்து எங்களுக்கு பாட்டு ரெடி பண்ணி கொடுத்தாரு.
நடிகர் சிவா பற்றி இயக்குனர் ராம் பேட்டி
நானும் யுவனோட ரசிகன் தான். நானுமே அவரை ரொம்ப மிஸ் பண்றேன். இந்த படம் எளிமையாக எடுக்கப்பட்டிருந்தாலும் அதற்கான பொருள் செலவோடு தான் எடுத்து இருக்கிறோம் என்று யுவன் பற்றிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். அதோடு நடிகர் சிவா குறித்தும் இயக்குனர் ராம் பேசி இருந்தார். அதில் நானும் சிவா சாரும் ஒரே வருஷம் சினிமாவுக்கு வந்தோம். நான் "கற்றது தமிழ்" படத்தை எடுத்துக் கொண்டிருந்தேன், அவர் "சென்னை 28" படத்தில் நடித்திருந்தார்.
சிறுவனின் நடிப்பு
சிவா சார் முன்னாடி கேமரா இருந்தாலும் எந்த தயக்கமும் இல்லாமல் சுலபமா நடிப்பாரு. இந்த படத்தில் நடிச்ச சிறுவனுக்கு சைக்கிள் ஓட்டுறதிலிருந்து எல்லா விஷயங்களையும் நாங்கள் சொல்லிக் கொடுத்தோம். ஆனால் எப்படி நடிக்கணும் என்பது மட்டும் சொல்லிக் கொடுக்கல. அவருக்கு தானாகவே நடிப்பு வந்தது. என்னுடைய அசிஸ்டன்ட் நடிப்பு சொல்லிக் கொடுக்கும் போது இது க்ரிஞ்சா இருக்குன்னு சொல்லிட்டு போயிடுவான் என்று இயக்குனர் ராம் பேசியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் மிகவும் எளிமையாக ராம் கலந்து கொண்ட வீடியோக்களும் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications