என் மனைவியிடம் பேசின ஆடியோவை வெளியிடவா? விஷ்ணுவை மிரட்டிய ரவீந்தர்.. இவ்ளோ பெரிய பிரச்சனையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் ரவீந்தரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த விஷ்ணுவும் சமூக வலைத்தள பக்கத்தில் சண்டை போட்டு இருக்கின்றனர். அப்போது ரவீந்தர் என்னுடைய மனைவியிடம் நீ பேசிய ஆடியோவை நான் வெளியிடவா? என்று மிரட்டி இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சியில் போட்டியாளராக சென்ற ரவீந்தர் முதல் வாரத்திலேயே எலிமினேஷன் செய்யப்பட்டார். இது பெரிய அளவில் பேசப்பட்டது. ரவீந்தர் இதுவரைக்கும் ஆறு சீசன்களை ரிவ்யூ செய்து இருக்கிறார். ஆனால் அவரால் பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு வாரம் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை என்ற கேள்விகள் எழுந்தது.

television bigg boss tamil 8 bigg boss 8 8

அதே நேரத்தில் ரவீந்தருடைய உடல் நிலையை காரணம் காட்டி தான் அவருடைய ரசிகர்கள் அவருக்கு வாக்குகள் செலுத்தாமல் அவரை வெளியே வர வைத்திருக்கிறார்கள் என்று கூறப்பட்டது. இந்த பஞ்சாயத்து ஒரு பக்கம் இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரவீந்தர் இந்த சீசனில் டைட்டில் ஜெயிக்கப் போவது முத்துக்குமாரன்தான் என்று ஆரம்பத்தில் இருந்தே சப்போர்ட் செய்து வருகிறார்.

அதேபோல இந்த சீசனில் போட்டியாளராக இருக்கும் சௌந்தர்யாவிற்கு முந்தைய சீசன் போட்டியாளரான விஷ்ணு சப்போர்ட் செய்து வருகிறார். அதுபோல அருணுக்கு அர்ச்சனா சப்போர்ட் செய்கிறார். இப்படி சில போட்டியாளர்களுக்கு சில பிரபலங்கள் தொடர்ந்து சப்போர்ட் செய்து வருவதை பார்க்க முடிகிறது.

television bigg boss tamil 8 bigg boss 8 8

இந்த நிலையில் ட்விட்டரில் பிக் பாஸ் ரிவ்யூவர்ஸ் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கும் ரசிகர்கள் சிலர் ஒன்று சேர்ந்து பேசி இருக்கிறார்கள். அப்போது ரவீந்தர் மற்றும் விஷ்ணு இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

நேத்ரன் மறைவுக்கு பிறகு மனைவி தீபா போட்ட முதல் போஸ்ட்.. கண் கலங்க வைக்கும் புகைப்படம்
ஆரம்பத்தில் இருந்து ரவீந்தர் முத்துக்குமரன் தான் முதலிடத்தில் வெற்றி பெறுவார் என்று சொல்லி வருகிறார். அதுபோல சில இடங்களில் சௌந்தர்யாவை விமர்சித்தும் இருக்கிறார். இதற்கு விஷ்ணு தன்னுடைய அதிருப்தியை தெரிவித்திருக்கிறார். அதிலும் ரவீந்தரின் மனைவி மகாலட்சுமிக்கு போன் செய்து விஷ்ணு ரவீந்தர் இப்படி தொடர்ச்சியாக பேசி வருவது தவறு என்று பேசி இருப்பது போல தெரிகிறது.

television bigg boss tamil 8 bigg boss 8 8

இதை மகாலட்சுமி ரவீந்தரிடம் கூறியிருக்கிறார். இந்த நிலையில் நேற்று ரவீந்தர் வழக்கம்போல முத்துக்குமரனுக்கு சப்போர்ட் செய்து பேசிக் கொண்டிருக்கும் போது விஷ்ணு குறுக்கிட்டு பேசியிருக்கிறார். அதற்கு ரவீந்தர் நீ சௌந்தர்யாவுக்கு பி ஆர் வேலை செய்து கொண்டிருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது ஆனால் நான் முத்துக்குமரனுக்கு அப்படி செய்யவில்லை என்று கூறியிருக்கிறார்.

அதோடு முத்துக்குமரன் உண்மையாக அந்த விளையாட்டில் விளையாடுவதால் அவர் ஜெயிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீ என்னுடைய மனைவியிடம் போன் பண்ணி பேசிய ஆடியோ என்னிடம் இருக்கிறது அதை நான் லீக் செய்யவா? என்று மிரட்டி இருக்கிறார்.

television bigg boss tamil 8 bigg boss 8 8

இவர்கள் இருவரும் பல பேர் முன்னிலையில் சண்டை போட்டது அந்த லைவில் இருந்த எல்லோரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இது குறித்து இணையத்தில் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+