நேத்ரன் மறைவுக்கு பிறகு மனைவி தீபா போட்ட முதல் போஸ்ட்.. கண் கலங்க வைக்கும் புகைப்படம்
சென்னை: சீரியல் நடிகர் நேத்ரன் கடந்த வாரம் காலமான நிலையில் அவருடைய மனைவி தீபா நேத்ரன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கணவரோடு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் பீல் பண்ணி கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.
சின்னத்திரை ரசிகர்களுக்கு நடிகர் நேத்ரன் மிகவும் பரீட்சையமானவர். 22 வருடங்களுக்கு மேலாக முன்னணி சேனல்களில் சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். சீரியலில் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அது நேத்ரனை போலவே அவருடைய மனைவி தீபாவும் சீரியலில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

தீபா மற்றும் நேத்ரன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு அக்ஷயா, அஞ்சனா என்ற இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் குழந்தைகளின் வளர்ப்பதற்காக சில வருடங்கள் சினிமா மற்றும் சீரியலை விட்டு விலகி இருந்த தீபா சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் என்று முன்னணி சேனல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இப்போதும் சன் டிவியில் சிங்கம் பெண்ணே சீரியலிலும், ஜீ தமிழில் மாரி சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த தம்பதியின் மூத்த மகள் அபிநயா தன்னுடைய தந்தை நேத்ரனோடு பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். அதிலும் பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் நிகழ்ச்சியில் தந்தை மகள் டான்ஸ் பெரிய அளவில் பேசப்பட்டது.

அதுபோல கனா காணும் காலங்கள் சீசன் 2 வெப் சீரிசிலும் அபிநயா நடித்து இருந்தார். தற்போது சில ப்ராஜெக்ட்களில் கமிட் ஆகி இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு பேசியிருந்தார். அதுபோல நேத்ரனுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு புற்றுநோய் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியாகி இருந்தது.

அதுவரைக்கும் அவருக்கு இந்த நோயின் தீவிரம் தெரியாமல் இருந்திருக்கிறது. அடிக்கடி வயிறு வலி வருகிறது என்று சொல்லி இருக்கிறார். அதற்கு பிறகு அவருடைய நண்பர்கள் குடும்பத்தினர் வற்புறுத்தலினால் அவர் மருத்துவமனையில் சென்று செக் பண்ணி பார்த்தபோதும் அவருக்கு புற்றுநோய் என்று தெரிய வந்திருக்கிறது.
உடனடியாக அதற்கான ஆபரேஷன் செய்யப்பட்டிருக்கிறது. அப்போது ஆபரேஷன்க்கு பிறகு நேத்ரன் ஐசியுவில் இருக்கும் போது தான் நேத்ரனின் மகள் அபிநயா தன்னுடைய தந்தைக்கு புற்றுநோய் பாதிக்கப்பட்டு இருக்கிறது எல்லோரும் வேண்டிக் கொள்ளுங்கள் என்று ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதற்கு பிறகு தான் பலருக்கும் தெரியும்.
ஆனாலும் சமீபத்தில் சில மாதத்திற்கு முன்பு அபிநயாவும் அவருடைய தங்கை அஞ்சனாவும் ஒரு பேட்டியில் கலந்து கொண்டனர். அப்போது அப்பா புற்றுநோய் பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல மீண்டும் வந்து கொண்டிருக்கிறார் விரைவில் எல்லோரிடமும் பேசுவார் என்று கூறியிருந்தார்.

ஆனால் குடும்பத்தினரின் நம்பிக்கையை பொய்யாக்கும் வகையில் நேத்ரனின் இறப்பு நடந்து விட்டது. நேத்ரனின் இறப்பு பற்றி அவருடைய நண்பர்களும் குடும்பத்தினரும் வருத்தத்தில் இருக்கிறார்கள். சின்னத்திரை நடிகர்கள், ரசிகர்கள் தொடர்ந்து நேத்ரன் குடும்பத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு நேத்ரனின் மகள்கள் தங்களுடைய அப்பாவின் இளமை பருவ புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார்கள். அதை தொடர்ந்து நேத்ரனின் மனைவி தீபா இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேத்ரனோடு ஜோடியாக எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அழுவது போன்ற இமேஜி பகிர்ந்து இருக்கிறார். இதற்கு பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications