Selvaraghavan: "கல்லறை கட்டி, பூச்செண்டு வச்சுட்டாங்க!" அடுத்த 6 மாதத்தில் வெளியே வரும் அதிர்ச்சி! செல்வராகவன் உருக்கம்
சென்னை: தமிழ் சினிமாவின் தனித்துவமான மற்றும் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன், தனது கூர்மையானப் பார்வை மற்றும் உளவியல் சார்ந்த கதைக்களங்களால் ரசிகர்களின் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். இவரது படங்கள் வெளியாகிறது என்றாலே, அது ஒரு புதிய அனுபவத்தைத் தரும் என்பதால், ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஒரு பெரும் ஆவல் இருந்து கொண்டே இருக்கும். இப்படி இருக்கையில், அவரது சமீபத்திய பேட்டி ஒன்று, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

தத்துவார்த்த சினிமாவின் தனி அடையாளம்
செல்வராகவன், வெறும் இயக்குநராக மட்டும் பிரபலமானவர் கிடையாது. இவர், தமிழ் சினிமாவின் அசாத்தியக் கதைசொல்லிகளில் ஒருவர். 'காதல் கொண்டேன்', 'புதுப்பேட்டை', 'ஆயிரத்தில் ஒருவன்' போன்ற இவரதுப் படைப்புகள், மனித மனதின் ஆழமான இருண்டப் பக்கங்களை, தத்துவார்த்தப் பார்வைகளுடன் அணுகியவை. மற்ற இயக்குநர்களிடம் இல்லாத ஒரு தனித்தன்மை இவரிடம் உண்டு-அதுதான், இவரதுக் கதாபாத்திரங்கள் பேசும் தத்துவமானப் பேச்சுக்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள். தனதுக் கதைசொல்லும் பாணியால், இவர் ஒரு 'கல்ட்' அந்தஸ்தைப் பெற்றவர்.
அடுத்த 6 மாதத்தில்
தனதுத் திரைப்படப் பணிகளுக்கு மத்தியில் தொடர்ந்து நடிப்பதிலும் கவனம் செலுத்தி வரும் செல்வராகவன், தற்போதுத் தனிப்பட்ட வாழ்வில் பெரும் வேதனையைச் சந்தித்து வருவதாகப் பேசியிருப்பது, ரசிகர்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது. சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார் அப்போது அவரிடம், "உங்களுக்கு நடந்த விஷயங்களில் மிகவும் மோசமான சம்பவமாக நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள்?" என்ற கேள்விக்கு, அவர் அளித்தப் பதில் நெஞ்சை உலுக்குவதாக இருந்தது.
உணர்ச்சிப்பூர்வமான பதில்
செல்வராகவன் உடனடியாக, "வரும், இன்னும் 6 மாதத்தில் வரும். இப்போது ஒன்று நடந்துவிட்டது. அது அடுத்த ஆறு மாதத்திற்குள் உங்களுக்குத் தெரியவரும். இவ்வளவு வலியுடன் நான் எப்படி மற்ற விஷயங்களைச் செய்து வருகிறேன், எப்படி வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்று நானே என்னை பலமுறை கேட்டு வருகிறேன்," என்றுப் பேசியுள்ளார்.
வலி மிகுந்த நிலையிலும், தன் வாழ்வின் போராட்டத்தைப் பற்றிப் பேசிய அவரது வார்த்தைகள் ஆழமானத் தத்துவப் பொருளைக் கொண்டிருந்தன. "குறிப்பாக, எப்படி நீ (செல்வராகவன்) ஒவ்வொரு முறையும் திரும்பத் திரும்ப எழுந்து வருகிறாய். எத்தனை முறை வீழ்ந்தாலும் அத்தனை முறையும் எழுந்து வருவது எப்படி என்று கேட்டு வருகிறேன். எனக்கு எனது வேலை மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. வேலை கொடுக்கும் ஆசுவாசத்தால் ஓடிக் கொண்டு இருக்கிறேன். அதனால்தான் எத்தனை முறை வீழ்ந்தாலும் இன்னொரு முறை நிற்கலாம் என்ற நம்பிக்கை அங்கிருந்துதான் வருகிறது என்று நினைக்கிறேன்."
மீண்டும் எழுந்த போராளி
"ஏற்கனவே கல்லறை எல்லாம் கட்டி, பூசி, பூச்செண்டு எல்லாம் கொண்டு வந்து வைத்து விட்டார்கள். நான் அதிலிருந்து உடைத்துக் கொண்டு வந்திருக்கிறேன். அதுவும் கடந்த நான்கு, ஐந்து தினங்களுக்கு முன்னர் தான் நான் வெளியே வந்திருக்கிறேன். சுவாரசியமாக இருக்கிறது அல்லவா," என்று மிகுந்த வலியுடன் பேசியிருக்கிறார்.
விவாகரத்து வதந்தி
செல்வராகவன் இவ்வாறு வலி நிறைந்தப் பேச்சைப் பேசியதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று இணையவாசிகள் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர். சில இணையவாசிகள், அவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் விவாகரத்து பெறப் போகிறார்கள் என்று யூகம் அடிப்படையில் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால், செல்வராகவன் தரப்பிலிருந்தோ அல்லது கீதாஞ்சலி தரப்பிலிருந்தோ இது தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வத் தகவலும் வரவில்லை. எதுவாக இருந்தாலும் அது சீக்கிரம் சரியாக வேண்டும் என்றும், செல்வராகவன் இந்தத் துயரத்தில் இருக்கக் கூடாது என்றும் ரசிகர்கள் கவலையுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் தனுஷ் நடிப்பில் உருவான 'நானே வருவேன்' ஆகும். தற்போது அவர் நடிகராகப் பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட இந்தத் துயரம் என்ன என்பது குறித்த உண்மைகள், அடுத்த 6 மாதத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications