நம்ம கூடவே பொறந்திடுச்சு.. கேன்சரை விட வேகமா பரவுது.. செல்வராகவன் வெளியிட்ட திடீர் வீடியோ
சென்னை: நடிகராகவும், இயக்குனராகவும் இருக்கும் செல்வராகவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பொறாமை குறித்து பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இது இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது. அதில் "பிறக்கும் போது இருந்தே பொறாமையும் கூடவே பிறந்து விடுகிறது. அதனால் அழிவு மட்டும் தான் வரும்" என்று பல்வேறு தகவல்களையும் அந்த வீடியோவில் செல்வராகவன் அவர் பேசியிருக்கிறார்.
இயக்குனராக பலபேரை ஆட்டி படைத்த செல்வராகவன் இப்போது திரைப்பட நடிகராகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இன்று அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ தான் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.. அந்த வீடியோவில் செல்வராகவன் பேசுகையில், நாம் பிறக்கும் போது நம்முடைய கை, கால், தலை போல பொறாமையும் நம்முடனே பிறந்து விடுகிறது.

தெருவில் நடந்து போறவன் பொண்டாட்டி அழகாக இருந்தால் அதை பார்த்து பொறாமை, பக்கத்து வீட்டுக்காரன் கார் வாங்கிட்டா அதை பார்த்து பொறாமை, ஆபீஸில் நம்மை விட இன்னொருத்தருக்கு ப்ரமோஷன் கிடைத்துவிட்டால் அதை பார்த்து பொறாமை... இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். பொறாமை ஒரு கேன்சர் மாதிரி உடம்புல பரவி பரவி அந்த பீலிங்ஸ்லயே நம்மை நச்சுரிச்சு கடைசி சமாதிவரைக்கும் அந்த பொறாமை இருந்துகிட்டே தான் இருக்கும்.
இது இல்லன்னு சொல்லுறவங்கள நம்பவே நம்பாதீங்க.. முற்றிலும் துறந்தவங்களில் இருந்து எல்லோரிடமும் இந்த பொறாமை இருக்கத்தான் செய்யும். இந்த பொறாமை இல்லாமல் எப்படி வாழ்வது என்றால் வாழவே முடியாது... இதற்கு சொல்யூஷன் கிடையாது. இதற்கு மருந்தும் கிடையாது.. இதற்கு என்ன பண்ணலாம் என்றால் எந்த விஷயமாக இருந்தாலும் அந்த விஷயத்தோடு நாம மல்லுக்கெட்ட மல்லுக்கட்ட அந்த விஷயம் பெருசாகி கிட்டே தான் போகும்.
அதனால நாம பொறாமையை நிறுத்தனும் என்று அதோடு சண்டை போட்டா அதோட பவர் ஜாஸ்தி ஆகிட்டு வளர்ந்துகிட்டே போகும். அதனால அதை நம்முடைய உடம்பில் ஒரு பார்ட்டா எடுத்துக்கோங்க.. பொறாமை வருதுன்னு உங்களுக்கே தோணுச்சுன்னா வா நண்பா என்று அந்த பொறாமையை பக்கத்தில் உட்கார வைத்து எனக்கும் பொறாமை வருது என்ன பண்ண என்று அதை அசட்டை செய்யாமல் விட்டு விட்டு நம்முடைய வேலைகளில் கவனம் செலுத்திக்கொண்டே இருந்தால் கொஞ்சம் வருடம் கழித்து போகும்போது உங்களுக்கே தெரியாமல் மேஜிக்கா அந்த பொறாமை மறைந்து போய்விடும் என்று எதார்த்தமாக அந்த வீடியோவில் செல்வராகவன் பேசியிருக்கிறார்.
இது பலருடைய பாராட்டுகளை பெற்று வருகிறது. ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு செல்வராகவனின் தம்பியான நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த திரைப்படத்தில் செல்வராகவனும் முக்கிய கேரக்டரில் நடிக்கும் நிலையில் அது குறித்து இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் செல்வராகவனை கலாய்த்து இருந்தார்.

இப்போ உங்களுக்கு தெரிகிறதா நடிப்பது எவ்வளவு கஷ்டம்னு..? நான் இந்த படத்தில் உங்களை நடிக்க வைக்கும் போது எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா? இதற்கு முன்பு நீங்கள் என்ன என்னெல்லாம் படுத்தினிங்களோ அது இப்போ நான் உங்களிடம் செய்யும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கிறது... இப்போ சொல்லுங்க பாப்போம் அந்த ஒரு கண்ணை மட்டும் தூக்கணும், ஒரு பக்கமா சரியனும் என்றெல்லாம் நீங்க சொல்லுவிங்களே... இப்போ உங்களை நான் படுத்தி எடுக்கும்போது எனக்கு அவ்வளவு சந்தோசமா இருக்கு.
குலதெய்வ கோவிலில் தனுஷ்.. மக்களை பார்த்ததும் சட்டென செய்த செயல்.. வெளியிட்ட அந்த போஸ்ட்
நீங்க ஒவ்வொரு டேக் வாங்கும் போதும் என்னுடைய மனசுக்குள் அப்படி ஒரு பூ பூக்கும் என்று தன்னுடைய கோபத்தை எல்லாம் மொத்தமாக கொட்டி இருந்தார். அதைத்தொடர்ந்து செல்வராகவன் மேடையில் பேசும்போது நான் உங்களிடம் எல்லோரிடமும் ஒரு அறிவுரையை சொல்கிறேன், நீங்க யாரும் உங்க தம்பியையோ அல்லது தங்கையையோ சின்ன வயதில் அடிக்காதீங்க, அவர்களை பாடாய்படுத்தி எடுக்காதீங்க ஏன்னா அவர்களும் ஒரு கட்டத்தில் நம்மை விட வளருவார்கள் அப்போ அதையெல்லாம் நமக்கு ரிவெஞ்ச் கொடுப்பாங்க என்று கலகலப்பாக பேசி இருந்தார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications