குலதெய்வ கோவிலில் தனுஷ்.. மக்களை பார்த்ததும் சட்டென செய்த செயல்.. வெளியிட்ட அந்த போஸ்ட்
சென்னை: நடிகர் தனுஷ் நடிக்கும் ராயன் திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கும் நிலையில் அவர் அவருடைய குடும்பத்தோடு சேர்ந்து தன்னுடைய குலதெய்வ கோயிலில் சாமி தரிசனம் செய்திருக்கிறார். அதோடு அங்கு எடுத்த புகைப்படத்தையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில் சில தத்துவத்தையும் கருத்தாக வெளியிட்டு இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துரங்கபுரத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ கஸ்தூரி அம்மாள் மங்கம்மாள் கோயில் உள்ளது. இந்த கோவில் தான் நடிகர் தனுஷின் குடும்ப குல தெய்வமாகும். இந்த கோவிலில் தான் ஒவ்வொரு ஆண்டும் அவருடைய குடும்பத்தினர் வந்து வழிபாடு செய்து வருவது வழக்கமாக இருக்கிறதாம். சமீபத்தில் கடந்த ஆண்டு இந்த கோவிலில் பூனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் முடிவடைந்து இருக்கிறது.

அந்த நிகழ்ச்சியில் தனுஷின் தந்தையையும் இயக்குனர் கஸ்தூரிராஜாவும் கலந்து கொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சி கஸ்தூரிராஜா தலைமையில் தான் நடைபெற்றது. தனுஷ் வெளிநாட்டில் படப்பிடிப்பு இருந்ததால் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் தனுஷ் நடிக்கும் ஐம்பதாவது படமான ராயன் இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கிறது. அந்த படம் வெற்றி படமாக அமைய வேண்டும் என்று தனுஷ் அவருடைய இரு மகன்களோடு குலதெய்வ கோயிலுக்கு வந்திருக்கிறார். அங்கு சிறப்பு வழிபாடு செய்திருக்கிறார்.
தனுஷுடன் அவருடைய அண்ணனும் இயக்குனருமான செல்வராகவன் மற்றும் அவருடைய குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் என பலரும் அங்கு நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டு இருக்கின்றனர். அப்போது கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தனுஷ் மற்றும் குடும்பத்தினரை வரவேற்று இருக்கின்றனர்.

அவர்களை பார்த்ததும் தனுஷ் கையெடுத்து கும்பிட்டு அவர்களிடம் நலம் விசாரித்து இருக்கிறார். இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைத் தொடர்ந்து தேவாரம் அருகில் உள்ள தனுஷின் தாயார் வழி குலதெய்வ கோவிலான சங்கராபுரம் கருப்பசாமி கோயிலுக்கும் சென்று குடும்பத்தோடு வழிபட்டு இருக்கின்றனர்.
அப்போது தனுஷ் சாமி சிலைகளின் முன்பு தான் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து "இங்கு பறந்து கிடக்கும் பூமி உனக்கும் தந்ததையா.. இங்கு இருக்கும் அத்தனை சாமியும் உனக்கும் சொந்தமய்யா" என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார்
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications