எதிர்நீச்சல் 2 இல்ல! புது சீரியல் தொடங்கியாச்சு.. அந்த நடிகர் கேட்ட வார்த்தை.. இயக்குனர் பளிச்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் எதிர்நீச்சல் சீரியல் முடிவு குறித்து அந்த சீரியலின் கடைசி பத்து நாளில் என்ன நடந்தது என்பது குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. அதை பற்றி பார்க்கலாம்.
கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எதிர்நீச்சல் சீரியல் 2000 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் கிட்டத்தட்ட 750 எபிசோடுகளை கடந்ததும் முடிவடைந்தது. இது பெரிய அளவில் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சீரியல் தொடங்கப்பட்ட சில மாதங்களுக்குள்ளேயே இந்த சீரியல் ஆண்களையும் சின்னத்திரை பக்கம் இழுத்தது.

அதோடு பல பிரபலங்களும் இந்த சீரியல் குறித்து பாராட்டி வந்தனர். காமெடி மற்றும் வில்லத்தனம் என இரண்டும் சேர்ந்து இருந்ததாலேயே இந்த சீரியல் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டது. இந்த நிலையில் இந்த சீரியலின் திடீர் முடிவு குறித்து இயக்குனர் திருச்செல்வம் பேட்டி ஒன்றில் விளக்கம் கொடுத்து இருக்கிறார். அதில் திருச்செல்வம் பேசுகையில், எதிர்நீச்சல் சீரியலை பொருத்தவரை அந்த சீரியலில் நான்கு பெண்கள் தான் கதாநாயகிகள் அவர்களை சுற்றி தான் கதை இருந்தது.
ஆனால் ஆரம்பத்தில் நான் பார்த்த என்னுடைய உறவினர்கள் ஊர்காரர்கள் போலவே மாரிமுத்து கேரக்டரை உருவாக்கி இருந்தேன். ஆனால் ஆரம்பத்தில் இருந்த மாரிமுத்துவை ரசிகர்கள் ஹீரோ போல பார்க்க தொடங்கி விட்டார்கள். பிறகு அவருடைய இழப்பு அனுதாபமாக மாறி அடுத்த நடிகர் வந்த பிறகு அவரோடு ஒப்பிட்டு பேச தொடங்கி விட்டார்கள். ஆனால் நான் உருவாக்கி வைத்த குணசேகரன் கேரக்டரே வேறு...
அதுவும் வேலராமமூர்த்தி குணசேகரன் கேரக்டரில் நடிக்க வந்த பிறகு அவருக்கு அதிகமான நெகட்டிவ் கருத்துக்கள் வர தொடங்கிவிட்டது. அதை பார்த்து அவரே என்ன சார் இப்படி பேசுறாங்க என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் அவங்க பேசுறவங்க பேசிட்டு இருக்கட்டும் நீங்க உங்களுடைய வேலையை பாருங்க என்று சொன்னேன். ஆனால் வேலராமமூர்த்தி முதலில் பயப்படத் தான் செய்தார்.
அதுபோல சீரியல் முடிய போக போகிறது என்று பத்து நாட்களுக்கு முன்பு காலையில் சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து சொன்னதும் எல்லா நடிகைகளும் அழுது விட்டார்கள். அதிலும் ஹரிப்பிரியா இனி நான் இந்த வீட்டை ரொம்பவே மிஸ் பண்ண போகிறேன் என்று அழுது கொண்டிருந்தார். காரணம் அவங்க சூட்டிங் ஸ்பாட்க்கு வந்ததும் அவங்களுடைய காட்சிகள் எப்ப வருகிறதோ அதுவரைக்கும் அந்த வீட்டில் தனியாக சென்று தூங்கி விடுவார்.
அது பற்றி ஹரி பிரியா என்னுடைய வீட்டில் கூட எனக்கு நிம்மதியா தூக்கம் வராது இங்கே தான் நிம்மதியா தூங்குறேன் என்று சொல்லுவார். ஹரிப்ரியா மட்டுமல்லாமல் ரேணுகா கேரக்டரில் நடித்த பிரியதர்ஷினி, மதுமிதா, கனிகா எல்லாருமே அழுதுவிட்டனர். அன்னைக்கு மட்டுமல்லாமல் பத்து நாள் ஷூட்டிங்கிலும் பீல் பண்ணி கஷ்டப்பட்டாங்க. அதிலும் கடைசி நாள் சூட்டிங்கில் அவங்களுக்கு ஆறுதல் சொல்றது எங்களுக்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது.
அதுபோல நான் இணையத்தில் வரும் நெகட்டிவ் கமெண்ட்களை கண்டு கொள்வது கிடையாது. காரணம் ப்ரோமோவை மட்டும் பார்த்து ஒரு சிலர் போடும் கமெண்டுகளுக்கு நாம் நம்முடைய மனதை மாற்றிக் கொண்டு இருக்க முடியாது. முன்னாடி எல்லாம் நாங்க சீரியல் இயக்கும்போது சீரியல் பற்றி பலர் கடிதத்தில் எழுதுவார்கள். அது வேல்யூவா இருக்கும் ஆனால் இப்போது மனசில் என்ன நினைக்கிறார்களோ அதை உடனே கமெண்டில் போட்டு விடுகிறார்கள்.
அது எனக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அதுபோல எதிர்நீச்சல் சீசன் 2 கிடையாது எல்லாரும் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். இதே பெயரில் இனி சீரியல் வைப்பதை விட புதிய பெயரில் இந்த கதையோடு பொருந்துற மாதிரி கதை உருவாகியிருக்கிறது. நானும் இப்போ பல ஊர்களில் பழையபடி சுற்றிக் கொண்டிருக்கிறேன். இரண்டாவது புதிய சீரியல் தொடங்குவதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு கொண்டிருப்பதால் விரைவில் அது குறித்து செய்தியை சொல்லுவோம்.
அதுபோல எதிர்நீச்சல் வீட்டுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அந்த வீடும் அந்த சீரியலில் முக்கிய பங்கு வகித்தது. அதனாலயே நான் இப்போதும் அந்த வீட்டிற்கு வாடகை கொடுத்து கொண்டு இருக்கிறேன். அந்த வீட்டை அடுத்த சீரியலிலும் வைத்துக் கொள்ளலாம் என்ற ஒரு மனநிலை இருக்கிறது. என்ன நடக்கப்போகிறது என்று அந்த பேட்டியில் இயக்குனர் திருச்செல்வம் பேசியிருக்கிறார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications