மீண்டும் கோலங்கள் 2..இந்த முறை இத்தனை மாற்றமாம்! காத்திருக்கும் கதாநாயகி..ஆனால் இயக்குனரின் முடிவு!?
மீண்டும் கோலங்கள் இரண்டு சீரியல் விரைவில் வெளியாகும் என்று இயக்குனர் திருச்செல்வம் கூறியிருக்கிறார்.
சென்னை: இயக்குனர் திருச்செல்வன் தான் இயக்கிய கோலங்கள் சீரியலில் இரண்டாவது பாகம் விரைவில் வெளியாகும் என்று கூறியிருக்கிறார்.
ஏற்கனவே கோலங்கள் சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது சன் டிவியில் மட்டும்தான் இந்த சீரியல் ஒளிபரப்பாகும் என்றும் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
முதல் பாகத்தில் நடித்த நடிகை தேவயானி மீண்டும் கதாநாயகியாக இந்த சீரியலில் நடிக்க காத்திருக்கிறேன் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

இயக்குனரின் ஆரம்ப காலம்
சீரியல் இயக்குனர்களில் மிகவும் பிரபலமான இயக்குனராக இருப்பவர் தான் திருச்செல்வன். இவர் ஆரம்பத்தில் டப்பிங் தியேட்டரிலும் இளையராஜா மியூசிக் கம்போஸ் செய்யும் ஒளிப்பதிவு கூடத்திலும் வேலை செய்திருக்கிறார். பின்பு தமிழ், மலையாளம், இந்தி என பல மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் சவுண்டு இன்ஜினியராக வேலை செய்திருக்கிறார். அதற்கு பிறகு தான் இவர் சின்னத்திரையில் சீரியல்களை இயக்கும் பணியில் இறங்கி இருக்கிறார். முதல்முறையாக 2002 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகி பெரிய அளவில் வரவேற்பையும், ஹிட்டையும் கொடுத்த மெட்டிஒலி என்ற சீரியலில் துணை இயக்குனராக திருச்செல்வம் அறிமுகமாகி இருந்தார்.

என்றும் தொல்காப்பியன்
முதல் சீரியலில் இயக்குனராக மட்டுமல்லாமல் திருச்செல்வம் நடிகராகவும் அறிமுகம் ஆகி இருந்தார். அதற்கு பிறகு கோலங்கள் என்ற சீரியலை இயக்கி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் இயக்குனராகவும் ஒரு நடிகராகவும் தன்னை பிரபலப்படுத்தி இருக்கிறார். கோலங்கள் சீரியலில் தொல்காப்பியன் என்ற கேரக்டரில் நடித்து, இப்ப வரைக்கும் ரசிகர்களை கவர்ந்த தொல்ஸ் ஆக இருந்து வருகிறார். அது மட்டுமல்லாமல் கோலங்கள் சீரியலை தொடர்ந்து அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம் போன்ற பல சீரியல்களை இயக்குகிறார். தற்போது கூட சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலையும் இயக்கிக் கொண்டிருக்கிறார்.

காத்திருக்கும் நடிகைகள்
இந்த நிலையில் சமீபத்தில் எதிர்நீச்சல் சீரியலில் அம்மா கேரக்டரில் நடிக்கும் நடிகை சத்யபிரியாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு திருச்செல்வன் பல சுவாரசியமான தகவல்களை கூறி இருக்கிறார். சத்திய பிரியா ஏற்கனவே கோலங்கள் சீரியலிலும் கதாநாயகி அதாவது தேவயானியின் அம்மாவாக கற்பகம் கேரக்டரில் நடித்திருப்பார். இந்த நிலையில் தற்போது மீண்டும் எதிர்நீச்சல் சீரியலிலும் நடித்து வருகிறார். இதனால் மீண்டும் இவர் கோலங்கள் 2 சீரியல் எடுத்தால் நடிப்பீர்களா? அதற்காக எதிர்பார்க்கலாமா என்று கேள்வி கேட்க, அதற்கு நாங்கள் எப்போது என்று தவம் இருக்கிறோம். அதற்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம் என்று சத்யபிரியா மற்றும் அவர் அருகில் இருந்த தேவயானியும் ஒன்றாக கூறியிருக்கின்றனர்.

கதை ரெடி
கோலங்கள் 2 எப்போது வரும் என்று இயக்குனர் தான் சொல்ல வேண்டும் நாங்கள் அதற்கு ரெடியாக இருக்கிறோம் என்று நடிகை சத்யபிரியா சொல்ல, அதற்கு இயக்குனர் திருச்செல்வம் அதற்கான எல்லா வேலைகளும் முடிந்து விட்டது. கதை ரெடி செய்து விட்டேன். அதற்கான சரியான ஆட்கள் கிடைத்தால் உடனே கதை தொடங்கி விடும். இந்த முறையும் கோலங்கள் சீரியல் சன் டிவியில் மட்டும் தான் ஒளிபரப்பாகும். ஆனால் மொத்த டீமும் மாறி இருக்கும். நான் ஏற்கனவே பிஸியாக இருப்பதால் அதை என்னால் ஒரே நேரத்தில் செய்ய முடியாது. அதனால் கோலங்கள் 2 அணி வேராகத்தான் இருக்கும் என்று கூறி இருக்கிறார். ஏற்கனவே கோலங்கள் சீரியல் ரசிகர்கள் இப்ப வரைக்கும் இந்த சீரியலுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கும் நிலையில், கோலங்கள் சீரியல் 2003 ஆம் ஆண்டு தொடங்கி 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. மொத்தம் இந்த சீரியலில் 1533 எபிசோடுகள் ஒளிபரப்பான நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது பாகம் எத்தனை எபிசோடுகள் எட்டுமோ என்று இப்போதே ரசிகர்கள் கூட்டி கழிச்சு பார்க்க ரெடி ஆகி விட்டார்கள்.

எதிர்பார்க்காத மாற்றம்
கோலங்கள் சீரியலில் கதாநாயகி அபி கேரக்டரில் தேவயானி நடித்திருந்தார். ஆனால் முதலில் இந்த கேரக்டரில் அபி கேரக்டரில் நடிப்பதற்காக மறைந்த நடிகை சௌந்தர்யா தான் இருந்தாராம். ஆனால் அவரால் நடிக்க முடியாமல் போனதால் தான் தேவயானி நடித்ததாகவும் அந்த நேரத்தில் தகவல்கள் வெளியானது. அதுமட்டுமில்லாமல் தேவயானியின் சகோதரியாக நடித்த வித்யா தான் தற்போது எதிர்நீச்சல் சீரியலில் கதை ஆசிரியராக இருக்கும் நிலையில், தனக்கு கோலங்கள் சீசன் இரண்டில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தால் நான் நடிப்பு மட்டும்தான் செய்வேன் கதை எழுத மாட்டேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications