ராத்திரி நேரத்து பூஜையில்.. விஜய் டிவி நிகழ்ச்சியில் டிஸ்கோ சாந்தி போட்ட டான்ஸ்! அசந்து போன ரம்பா!
சென்னை: ஒரு காலத்தில் தனது டான்ஸால் திரையரங்குகளை குலுக்கியவர் டிஸ்கோ சாந்தி. பல வருடங்களாக பெரிய அளவில் வெளியில் தெரியாமல் இருந்த அவர், இப்போது திடீரென மீண்டும் ரசிகர்கள் முன் வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "ஜோடி ஆர் யூ ரெடி" நிகழ்ச்சியின் சிறப்பு எபிசோடில் டிஸ்கோ சாந்தி கலந்து கொண்டார். அதில், தனது பழைய ஹிட் பாடலான "ராத்திரி நேரத்து பூஜையில்" பாடலுக்கு, சாண்டி மாஸ்டர் உடன் சேர்ந்து மேடையே குலுங்கும் அளவுக்கு டான்ஸ் ஆடி இருந்தார்.

ரசிகர்கள் கமெண்ட்
இந்த நிகழ்ச்சியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பல வருட இடைவெளிக்குப் பிறகும் டிஸ்கோ சாந்தியின் அதே எனர்ஜி, அதே எக்ஸ்பிரஷன், அதே ஸ்டைல் என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் குவித்து வருகின்றனர். "இது நம்ம பழைய டிஸ்கோ சாந்திதானே!" என்று ஆச்சரியத்துடன் பலரும் பாராட்டி வருகின்றனர்.
டிஸ்கோ சாந்தி கம் பேக்
ஒரு காலத்தில் 'ஊமை விழிகள்' படத்தில் வந்த அந்த பாடலால் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் டிஸ்கோ சாந்தி. அப்போது அவரின் டான்ஸ் பல படங்களுக்கு ஹைலைட்டாக இருந்தது. அதே எனர்ஜியை இப்போதும் இழக்காமல், டிவி மேடையிலேயே மீண்டும் நிரூபித்திருக்கிறார் என்பதே ரசிகர்களின் கருத்து.
வேண்டுகோள்
இதோடு மட்டும் இல்லாமல், இந்த நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்கள் ஒரு முக்கியமான கோரிக்கையையும் முன்வைத்து வருகின்றனர். "இப்படி பழைய கால நடிகர்கள், நடிகைகளுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர்களிடம் இன்னும் நிறைய திறமை இருக்கிறது. இப்படி டிவி நிகழ்ச்சிகள் மூலம் மீண்டும் அறிமுகம் செய்து வைத்தால், அவர்களுக்கு சினிமாவிலும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்" என்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சினிமாவில் ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்த பலர், காலப்போக்கில் திரை வெளிச்சத்திலிருந்து விலகி விடுகிறார்கள். ஆனால் இப்படி ஒரு மேடையில் மீண்டும் வந்து, தங்களின் திறமையை நிரூபிக்கும் போது, ரசிகர்களுக்கும் அது ஒரு நினைவூட்டலாக மாறுகிறது. டிஸ்கோ சாந்தியின் இந்த கம்பேக் அதற்கு ஒரு நல்ல உதாரணம்.
டிஸ்கோ சாந்தியின் டான்ஸ் பார்த்து இந்த நிகழ்ச்சியின் நடுவராக இருக்கும் நடிகை ரம்பா மற்றும் நடிகை ஸ்ரீதேவி இருவரும் வாயடைத்துப் போய் இருக்கின்றனர் மேலும் அந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களும் டிஸ்கோ சாந்திக்கு கைதட்டி ஆரவாரம் செய்திருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியில் இதுவரைக்கும் இரண்டு சிங்களாக தொகுப்பாளராக இருந்த ரியோ இந்த சீசனில் விலகி இருக்கிறார் அதனால் மூன்றாவதான தற்போதைய சீசனில் ரக்ஷன் மற்றும் ஏஞ்சலின் மட்டும் தொடர்கின்றனர். அதே நேரத்தில் டிஸ்கோ சாந்தி டான்ஸ் ஆடிய ப்ரோமோ வெளியான பிறகு இந்த வாரம் எபிசோடு பார்க்க ரொம்ப வெயிட்டிங்கா இருக்கோம் என்று பலர் கமெண்ட்ஸ் கொடுத்திருக்கிறார்கள்.
மொத்தத்தில், ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சி யில் சாதாரணமாக தொடங்கிய இந்த தருணம், இப்போது பழைய நினைவுகளை கிளறிய ஒரு பெரிய வைரல் தருணமாக மாறியுள்ளது. மேலும், இது போன்ற கம்பேக்குகள் இன்னும் அதிகமாக நடக்க வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications