Heart Beat: "உயிருக்கும் மரணத்துக்கும் இடையில் ரீனா!” ஹார்ட்பீட் சீரிஸ்: தீபா பாபுவின் எமோஷனல் பதிவு! இனி கதை இதுதானா?
சென்னை: டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகி ரசிகர்களைப் பரபரப்பில் ஆழ்த்தியுள்ள 'ஹார்ட் பீட்' வெப் சீரிஸில் யாரும் எதிர்பார்க்காத கட்டத்தை எட்டி இருக்கிறது. ரீனாவாக நடித்திருக்கும் நடிகை தீபா பாபு தன்னுடைய சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவு, ரீனாவின் நிலை குறித்து ரசிகர்களின் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

தீபா பாபுவின் வைரல் பதிவு
ரீனா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தீபா பாபு, ரீனா மருத்துவமனை யூனிஃபார்மில் இருக்கும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து, உணர்ச்சிப்பூர்வமான வரிகளைப் பதிவிட்டுள்ளார்: "ரீனா-அவளுக்கு ஒரு குடும்பத்தின் ஆசீர்வாதம் கிடைக்காமல் இருந்திருக்கலாம், ஆனால் அவளுடைய நண்பர்கள் அவளுக்குக் குடும்பமாக அமைந்தார்கள்." "அனாதை இல்லத்தில் வளர்ந்த ஒரு பெண், ஒவ்வொரு புயலையும் தைரியமாகச் சந்தித்து, அவளுடைய சொந்தப் பாதையை உருவாக்கிக் கொண்டாள்." "இப்போது, அவள் உயிருக்கும் மரணத்துக்கும் இடையில் இருக்கும் நிலையில், அவள் மீண்டும் சிரிப்பாளா?"
இந்த எமோஷனல் பதிவு, ரீனாவின் தற்போதையக் கவலைக்கிடமான நிலையையும், அவரதுக் கடினமானப் பின்னணியையும் மீண்டும் நினைவுபடுத்தி, ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வார சம்பவங்கள்
கடந்த வாரம், ரீனாவின் விபத்துக்கு முன்னால் நடந்த சம்பவங்கள் வெப் சீரிஸின் கதைக்களத்தைத் தலைகீழாக மாற்றியது: ரீனா, அர்ஜுனிடம் திருமணம் குறித்துப் பேசச் சென்ற போதுதான், விஜய் தான் தன்னுடைய அப்பா என்ற உண்மை ரதி மூலமாக ரீனாவுக்குத் தெரிய வந்தது. இந்த உண்மையை அர்ஜுனிடம் சொல்ல போகும் ரீனா, அர்ஜுனுக்கு ஏற்கெனவே இந்த விஷயம் தெரியும் என்ற உண்மையை அறிந்து அதிர்ச்சியில் நிற்கும்போது, விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விஜயின் நிலை
ரீனாவுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலையில், சட்டச் சிக்கலால் விஜய் சிகிச்சை அளிக்க முடியாமல் தவித்து வருகிறார். ரீனாதான் தன் மகள் என்ற உண்மை விஜய்க்குத் தெரிய வந்து, ரதியிடம் அவர் கோபத்துடன் சண்டையிடும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளும் அரங்கேறின.

இனி என்ன நடக்கும்
தற்போது ரீனாவின் உயிருக்குப் போராடும் நிலை, அடுத்தக்கட்ட எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. விஜய், தன்னுடைய மகள் ரீனாவின் உயிரைக் காக்க, தன்னுடைய இதயத்தைக் கொடுத்துத் தியாகம் செய்வார் என்றும், ரீனா உடல்நலம் தேறி எழுவதாகவும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த சீசன் முடிவுக்கு வந்ததும் அடுத்த சீசனில் ரீனாவின் புதிய வாழ்க்கை குறித்துக் காட்சிகள் இருக்கும் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரீனா மீண்டும் சிரிப்பாளா என்றக் கேள்விக்கு, சீசன் 3இல் விடை கிடைக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications