மதுரையில் தனுஷின் பட பூஜையின் போது ஏற்பட்ட பஞ்சாயத்து.. கோவிலுக்குள் நடந்த அசம்பாவிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷின் D56 படத்துக்கான பூஜை மதுரை சிவகங்கை சுற்று வட்டாரத்தில் இவ்வளவு பெரிய நிகழ்ச்சியாக மாறும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். ஒரு பக்கம் தனுஷை பார்க்க ரசிகர்கள் கூட்டம், இன்னொரு பக்கம் 18 அடி அரிவாள் நேர்த்திக்கடன், வடிவேலுவுடன் தனுஷின் முதல் கூட்டணி என சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது. ஆனால் இந்த பூஜை நடந்த இடத்திலேயே படக்குழுவுக்கும் கோவில் தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பேசு பொருளாக மாறி இருக்கிறது.

Actor Dhanush Madurai Vadivelu

தனுஷின் புது படம் பூஜை

தனுஷின் 56வது படத்தை லப்பர் பந்து படத்தை இயக்கிய தமிழரசன் பச்சமுத்து இயக்குகிறார். படத்துக்கு இன்னும் அதிகாரப்பூர்வ தலைப்பு வெளியாகவில்லை. சோசியல் மீடியாவில் படையல் என்ற பெயர் பரவிய போது இயக்குனர் தமிழரசன் பச்சமுத்துவின் அதை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு படையல் நல்லா இருக்கே.. நான் ஏன் யோசிக்காமல் போனேன்? என்று பதிவிட்டு இருந்தார். ஆனால் அந்த பெயர் இன்னும் ரசிகர்கள் மத்தியில் சுற்றிக் கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் தான் இன்று மதுரை வந்த தனுஷுக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் தடபுடலான வரவேற்பு கொடுத்தனர். ரசிகர்கள் மாலை அணிவித்ததோடு வேல் மற்றும் பொக்கே கொடுத்தனர். தனுஷ் காரின் சன் ப்ரூப் வழியாக நின்றபடி ரசிகர்களை பார்த்து கையை அசைத்துவிட்டு புறப்பட்டு சென்றார். அதற்குப் பிறகு படத்தின் பூஜைக்கு சிவகங்கை மாவட்டம் அருகே உள்ள மாரநாடு கருப்புசாமி கோவில் சென்று இருந்தார்.

கிடா வெட்டு

அந்த கோவிலில் சுற்று வட்டாரத்தில் நேர்த்தி கடனுக்காக பெரிய அருவாள்களை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். ஒரு அடி முதல் 51 அடி வரையிலான அரிவாள்கள் தயாரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் D56 படத்தின் பூஜைக்காக 18 அடி உயர அரிவாள் காணிக்கையாக செலுத்தப்படுவதாகவும், ரசிகர்களுக்காக பெரிய அளவில் அசைவ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் காலையிலேயே தகவல் வெளியாகிவிட்டது.

இந்த ஃபங்ஷனுக்காக 16 கிடா வெட்டி விருந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றது. பூஜை நிகழ்ச்சிகளில் தனுஷ் பேசும் போது, இது படத்தின் பூஜை என்பதை தாண்டி பெரிய ஒரு திருவிழா போல இருக்கிறது. ரசிகர்கள் எல்லோரும் கறிசாப்பாடு சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாக வீட்டுக்கு போக வேண்டும் என்று கூறியிருந்தார். அதுபோல் அங்கு இருந்த வடிவேலும் கூட்டத்தை பார்த்து இது மாநாடு மாதிரி இருக்கிறது என்று சொல்லி இருந்தார்.

கோவிலுக்குள் வாக்குவாதம்

வடிவேலு மற்றும் தனுஷ் இதுவரைக்கும் எந்த படங்களிலும் இணைந்து நடித்ததில்லை. முதல் முறையாக இந்த படத்தில் நடிக்கிறார்கள். சமீப காலமாக வடிவேலு பெரிதாக நடிக்காமல் இருந்த நிலையில் இப்போது நடிக்க தொடங்கி இருப்பது குறித்தும் அதில் பேசியிருந்தார். இது ஒரு பக்கம் இது நடந்து கொண்டிருக்கும் சமயத்திலேயே இன்னொரு சம்பவம் நடந்தது.

அதாவது பட பூஜை நடைபெற்ற இடத்தில் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. அப்போது அங்கு வந்த கோவில் நிர்வாகத்தினர்கள் இந்த கோவிலுக்கு பட சூட்டிங் நடக்கக்கூடாது தயவு செய்து வெளியே போங்க என்று சொல்லியிருக்கிறார்கள். இதனால் அங்கு பட குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகத்திற்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+