சரிகமப லிட்டில் சேம்ஸ் 4வது வின்னர் இவர்தான்! பரிசு எவ்வளவு தெரியுமா? 2வது, 3வது வின்னர்ஸ் இவங்கதான்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சரிகமப லிட்டில் சேம்ஸ் நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே லைவ்வாக நேற்று ஒளிபரப்பாகியது. அதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். ஆறு போட்டியாளர்கள் இறுதி கட்டத்தை எட்டி இருந்த நிலையில் டைட்டில் வின்னராக திவினேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். அடுத்ததாக இரண்டாவது, மூன்றாவது இடத்தில் யார் செலக்ட் ஆனார்கள் என்று விரிவாக பார்க்கலாம்.
ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதனாலே புதியதாக பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் பாடல் நிகழ்ச்சிக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என்று ஒவ்வொரு சேனலிலும் புதியது புதியதான பெயரில் பாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அதுபோல ஜீ தமிழில் சரிகமப நிகழ்ச்சி இரண்டு விதமாக நடைபெறுகிறது.

இறுதி போட்டியாளர்கள்
சரிகமப லிட்டில் சேம்ஸ் என்று ஜூனியர்களுக்காகவும், சரிகமபா ஜூனியர் என்று இரண்டு விதமாக நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் சமீபத்தில் சரிகமபா லிட்டில் சேம்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த சில மாதங்களாகவே ஒளிபரப்பாகி வந்தன. இதில் ஆரம்பத்தில் பல குழந்தைகள் போட்டியில் கலந்து கொண்டனர். கடைசியில் இறுதி கட்டத்திற்கு 6 போட்டியாளர்கள் மட்டுமே செலக்ட் ஆகி இருந்தனர்.
சிறப்பு விருந்தினர்
அதில் திவினேஷ், யோகஸ்ரீ, மஹதி, ஹேமித்ரா, அபினேஷ் மற்றும் ஸ்ரீமதி போன்றோர் இறுதியில் போட்டிக்கு முன்னேறி இருந்தனர். சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் இந்த இறுதி போட்டி நடைபெற்று லைவாக ஒளிபரப்பானது. இந்த நிலையில் சரிகமப கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் வின்னர்ஸ்
அதுபோல கடைசியாக ரசிகர்களின் மனதை கவர்ந்த திவினேஷ் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு சிவகார்த்திகேயன் பரிசு கொடுத்திருக்கிறார். அவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது இடத்தை யோகஸ்ரீ மற்றும் மூன்றாவது இடத்தை ஹேமித்ரா ஆகியோர் பிடித்திருக்கிறார்கள். பல கோடி மக்களின் மனதை கவர்ந்த திவினேஷுக்கு மெல்லிசை இளவரசர் என்ற பட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
பழைய பாடல்கள்
பழைய பாடல்கள் மூலமாக தன்னுடைய திறமையை நிரூபித்து பல இளம் தலைமுறையினர்கள் மட்டுமல்லாமல் வயதானவர்களின் மனதையும் திவினேஷ் கவர்ந்திருந்தார். ஒட்டுமொத்த சரிகமப ரசிகர்களும் திவினேஷ் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையோடு இருந்தனர். அவர்களின் ஆசை நிறைவேறி இருக்கிறது. அதே நேரத்தில் இறுதி மேடையில் சில சுவாரசியமான சம்பவங்களும் எமோஷனலான தருணங்களும் நடைபெற்றது.

ரசிகர்களின் கருத்து
போட்டியாளர்கள் தங்களுடைய கஷ்டமான இன்னொரு பக்கத்தையும் காட்டி இருந்தனர். அதில் சில போட்டியாளர்களின் குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்களும் வீடியோவாக வெளியிடப்பட்டது. இதை சிலர் பாராட்டி இருந்தாலும் சிலர் இது போன்ற சென்டிமென்ட் காட்சிகளை இறுதி போட்டியில் தவிர்த்து இருக்கலாம் போட்டியாளர்களின் திறமைக்கு மட்டுமே பரிசு என்பது போன்று வைத்திருக்கலாம் என்ற கருத்தும் இருந்து வருகிறது.












Click it and Unblock the Notifications