டிரஸ் இல்லாம பெட்ல "அப்படி” இருக்கணும்.. காது கூசவைக்கும் அர்ணவின் புது ஆடியோ..! லீக் செய்த திவ்யா
சென்னை: சீரியல் நடிகை திவ்யா தன்னுடைய கணவர் அர்ணவ் இன்ஸ்டாகிராமில் பழகிய பெண்ணிடம் ஆபாசமாக பேசிய ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
திவ்யா ஸ்ரீதர் மற்றும் அர்ணவ் குடும்பப் பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் அர்ணவ் பல பெண்களோடு தொடர்பில் இருந்திருக்கிறார் என்றும் அவர் பேசிய ஆடியோ என அடுத்தடுத்து திவ்யா ஆடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலின் கதாநாயகி திவ்யா ஸ்ரீதர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லமா சீரியல் கதாநாயகன் அர்ணவை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து இருந்தார். ஆறு வருடங்களாக காதலித்து வந்து, திருமணத்திற்கு பிறகு அர்ணவ் அவரோடு சீரியலில் நடிக்கும் பெண்ணோடு பழகிக் கொண்டிருக்கிறார் என்றும், அதனால் எங்கள் வீட்டில் பிரச்சனை என்றும் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தார்.

சீரியலில் அர்ணவ் உடன் நடிக்கும் நடிகையுடன் இருக்கும் தொடர்பை விட கூறியதால் தான் கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் தன்னை அடித்துக் கொடுமைப்படுத்துகிறார் என்று திவ்யா கொடுத்த கம்ப்ளைன்ட் காரணமாக அர்ணவ் ஜெயிலில் அடைக்கப்பட்டு பின்பு ஜாமினில் வெளிவந்திருக்கிறார். தற்போது சீரியலில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் சில மாதங்களாக இவர்களுடைய குடும்ப பிரச்சனை அமைதியாக இருந்த நிலையில் இப்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. அர்ணவ் தன்னை காதலிக்கும் முன்பு பல பெண்களோடு பழகி இருக்கிறார் என்றும், அதுபோல ஜெயிலுக்கு போயிட்டு வந்த பிறகும் கூட திருந்தாமல் இன்ஸ்டாகிராமில் பழகிய டாக்டர் பெண்ணோடு நெருக்கமாக பேசி பழகி இருக்கிறார் என்றும் அந்தப் பெண் தனக்கு அனுப்பிய ஆடியோக்கள் என தொடர்ச்சியாக திவ்யா ஆடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
அதில் லேட்டஸ்டாக வெளியான ஆடியோ கேட்டு ரசிகர்கள் திட்டி தீர்க்கின்றனர். காரணம் அதில் அந்த அளவிற்கு காது கூசும் அளவிற்கு ஆபாசமாக பேசப்பட்டிருக்கிறது. அதில், அர்ணவ், இஷா என்கிற டாக்டர் பெண்ணிடம் நாம ரெண்டு பேரும் பெட்டில் ட்ரெஸ் இல்லாம ஒண்ணா படுத்து தூங்கணும். நீ என்னுடைய நெஞ்சுக்குள்ள படுத்துக்கணும். தூங்கின பிறகு எப்படி வேணாலும் மாறிக்கோ ஆனா தூங்குற வரைக்கும் நீ என்னுடைய கை குள்ளே தான் இருக்கணும்.
அதோடு உனக்கு மூடு இல்லன்னா நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். ஆனா நான் அப்போ கிஸ் பண்ணுவேன், கட்டிப்பிடிப்பேன். அதுக்கு எல்லாம் நீ எனக்கு பெர்மிஷன் தரணும். அதெல்லாம் வேண்டாம்னு சொல்ல கூடாது. அது போல நம்ம ரெண்டு பேருக்கும் உள்ள எந்த கேவலமும் இருக்கக் கூடாது. நான் என்ன பண்ணுனாலும் இப்படியெல்லாம் பண்ணுவாங்களான்னு நீ கேட்க கூடாது. நம்ம ரெண்டு பேருக்கும் அந்த விஷயத்தில் எந்த அசிங்கமும் பார்க்க கூடாது என்றும், இன்னும் அதிகமாக காது கூசும் அளவிற்கு அந்தரங்க விஷயங்களை பேசி இருக்கிறார்.
இது குறித்து திவ்யா கூறுகையில் இந்த ஆடியோவில் பேசிய பெண் முதலில் அர்ணவை உண்மையாக நம்பி தான் பேசி இருக்கிறார். ஆனால்
பிறகு தான் அந்த பொண்ணுக்கு எங்க ரெண்டு பேருக்கும் ஏற்கனவே கல்யாணம் ஆனது, எங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை எல்லாம் தெரிய வந்திருக்கு. அதுக்கு பிறகு தான் அர்ணவ் உடைய சுயரூபம் தெரிஞ்சு அந்த பொண்ணு எனக்கு கால் பண்ணி என்கிட்ட பேசிச்சு, இந்த எவிடன்ஸ் எல்லாம் அனுப்பிச்சு என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications