டிஜே பிளாக்கோடு காரில் குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பூஜா..ஒரு வழியா சொல்லிட்டாங்க!
சென்னை: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகியாக இருக்கும் பூஜா டிஜே பிளாக்கோடு அவருடைய பிறந்தநாளுக்கு வீட்டிற்கே சென்று இருக்கிறார்.
நிஜத்தில் நாங்கள் நெருங்கிய நண்பர்கள் என டிஜே பிளாக் மற்றும் பூஜா இருவரும் தெரிவித்திருக்கும் நிலையில் தற்போது இவர்களுடைய வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல பேருடைய வாழ்க்கையை புரட்டி போட்டிருக்கிறது. அதில் பாடகர்கள் மட்டுமல்லாமல் முதல் முறையா டிஜேபிளாக்கும் இடம் பிடித்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு பின்னணி பாடல்கள், டைமிங் காமெடி போட்டு பிரபலமான டிஜே பிளாக் இப்போது பூஜாவிற்கு அதிகமாக பாட்டு போட்டு பிரபலமாகி வருகிறார்..
பூஜாவுக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாட்டு போட்டு பல இளைஞர்களின் மனதையும் கவர்ந்து விட்டு டிஜே பிளாக் நிஜத்தில் பூஜாவை காதலிக்கிறாரா? இல்லையா? என்று பலருக்கும் கேள்வி எழும்பிக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு பூஜாவின் வீட்டில் இருந்து அவருடைய உறவினர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டிஜே பிளாக்கை திட்டி தீர்த்து இருந்தனர். அதனை உண்மை என்று ரசிகர்களும் முதலில் நம்பி விட்டார்கள்.
பிறகு நாங்களும் டிஜே பிளாக்கின் தீவிரமான ரசிகர்கள் நீங்கள் இப்படி பாட்டு போட்டதனால் தான் எங்களுடைய பூஜா இவ்வளவு பிரபலம் அடைந்திருக்கிறார் என்று கூறி டிஜே பிளாக்க்கு நன்றி கூறி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருந்தனர். அதை தொடர்ந்து தன்னுடைய வேலையில் மேலும் உற்சாகமான டிஜே பிளாக் ஒவ்வொரு பாடல்களும் காதல் ரசம் சொட்ட சொட்ட எடுத்து வைத்து ஒலிக்க விடுகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் கூட விஜய் டிவியில் எட்டாவது ஃபிலிம் ஃபேர் அவார்ட் கிடைக்கும்போது பூஜாவுக்கு பாட்டு போட்டு பிரபலமான டிஜே பிளாக்குகும் அவார்டு கொடுத்து அவரையும் கண்கலங்க வைத்து பலருடைய வயிற்றெரிச்சலையும் கமெண்ட் களில் பெற்றுக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் தற்போது வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பூஜாவின் பிறந்தநாளுக்கு பூஜாவின் சொந்த ஊரான பாண்டிச்சேரிக்கு டிஜே பிளாக் அவர் புதியதாக வாங்கிய காரில் பூஜாவை கூட்டிக்கொண்டு சென்றிருக்கிறார். குடும்பத்தினர் அனைவருக்கும் நேரில் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானதை தொடர்ந்து இவர்கள் நிஜத்தில் நண்பர்களா? இல்லை காதலர்களா? என்று கணிக்க முடியாமல் கருத்துக்களை சிதறவிடுகிறார்கள்.
ஆனால் பூஜாவும் டிஜே பிளாக்கும் நாங்கள் அந்த நிகழ்ச்சியின் சுவாரசியத்திற்காக தான் அப்போது அப்படி பேசிக்கொள்வோம். ஆனால் நிஜத்தில் அப்படியெல்லாம் கிடையாது. நிஜத்தில் நல்ல நண்பர்கள் என்று விளக்கமும் கொடுத்திருக்கிறார்கள்.
-
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications