தங்கலான்! திரைப்படம் ரஞ்சித்தின் சுவை குறைந்த காட்சிகள் ஏன்? இத்தனை குழப்பத்திறகு காரணம் என்ன?
சென்னை: நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தை பார்த்துவிட்டீர்களா? அதில் இந்த சீன்கள் எல்லாம் முரணாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த படம் மகா குழப்பத்திற்கு சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தங்கலான்.. படம் பார்த்தாகி விட்டது.. படம் நல்ல ஒரு கதைக்களமும், அதில் காட்சி மாயாஜாலங்களும் செய்யும் பல வாய்ப்புக்கள் இருந்தும், ஏனோ பூர்த்தி செய்யவில்லை என்றே தோன்றுகிறது. Treasure hunt என்று சொல்லப்படும் படங்கள் நம்மை சீட்டை விட்டு எழ விடாமல் செய்யும் காட்சி மாயாஜாலங்கள் செய்யக்கூடியவையாக வே இது வரை இருந்துள்ளன.

ஆனால் இந்தக்களத்தை ரஞ்சித் சுவை குறைந்த காட்சிகளை வைத்து மழுங்கடித்து விட்டாரோ எனத்தோன்றியது. அந்த க்ராஃபிக்ஸ் மிருகக்காட்சியை ஏதோ சுவைக்காக ஊறுகாய் மாதிரி வைத்திருக்கிறார். உப்பேயில்லை.
பலரும் சிலாகிக்கும் பெண்களின் மேலாடைக் காட்சிகளில் பார்வதியின் நடிப்பு அபாரம். அந்த தங்கலான் மனைவியிடம் ஒரு கேள்வி கேட்கத்தோன்றுகிறது. ப்ளவுஸ் கிடைத்ததும் ஆனந்தப்படும் நீங்கள் ஒரு முறையாவது தங்கலான் என்பவனை ஷேவ் செய்து, குளித்து, தலைமுடி வெட்டி க்கொடுத்து ஆனந்தப்பட்டிருக்கலாமே...அதற்கும் பதிலை ரஞ்சித்தே படத்தில் அறியாமல் வைத்திருக்கிறார்.
வைணவத்தை ஏற்கும் பசுபதி அருமையாக முடி வெட்டி, சுத்தமாக இருப்பது போல் வருகிறார். இந்த முரண்கள் தான் அன்றும் சமுதாயத்தில் காணப்பட்டன என ரஞ்சித் சொல்ல வருகிறாரா?. விக்ரம் உடை அணிந்து, குதிரையில் ஊருக்குள் வரும் காட்சி தொடங்கி அடுத்த சில காட்சிகள் இயல்பான திரைப்படமாக மிளிர்கிறது.
அப்படி முழுப் படமும் அமைந்திருந்தால் ஆஹா.... வெள்ளைக்கார துரையின் ஆடையை எடுத்தெடுத்து பார்க்கும் தங்கலானின் அந்த காட்சி அழகு. உயர்ந்த இடமாக தங்கலான் வெள்ளைக்காரனை விட தகுதி, திறமை, வலிமை இருந்தும் அவனைப்போல உடைகள் அணிந்து வாழவே ஆசைப்படுகிறான் என்பதிலேயே பல செய்திகள் இருக்கின்றன.
எதையோ நினைத்து எதையோ இடித்தது போல நல்ல கதையை வைத்துக் கொண்டு அதை எதையோ நினைத்து இடித்திருக்கிறார் ரஞ்சித். பார்வதி, விக்ரம், மாளவிகா அனைவரின் உழைப்பும் வீணடிக்கப்பட்டிருக்கிறது. ஒன்று தங்கம் தேடுவதை சொல்ல வேண்டும். அல்லது தங்க வேட்டைக்கு காரணமான மக்கள் மீது நடத்தப்பட்ட அதிகாரத் தாக்குதல் பற்றிச் சொல்ல வேண்டும். இரண்டும் இல்லாமல் இரண்டையும் சொல்ல நினைத்து திரைக்கதை மகா குழப்புதலுக்கு சென்று விடுகிறதோ எனத் தோன்றுகிறது. இன்னும் அழுத்தமாக வந்திருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications