நடிகை பாம்பே ஞானம் வீட்டு 6 படுக்கை அறைகளிலும் சிசிடிவி கேமரா! கழிப்பறைகளில் "கோயில்" ஆஹா பட்டம்மாள்
சென்னை: நடிகை பாம்பே ஞானம் வீட்டில் படுக்கை அறையில் கேமராக்கள் இருப்பது குறித்தும் கழிவறையில் மின்விசிறி இருப்பது குறித்தும் அவரே தெரிவித்துள்ளார்.
பாம்பே ஞானம் என அழைக்கப்படும் ஞானம் பாலசுப்பிரமணியன் திரைப்படம் மற்றும் சீரியல் நடிகை. இவர் 1989-ஆம் ஆண்டு மகாலட்சுமி பெண்கள் டிராமா குழுவை தொடங்கி அதன் மூலம் மேடையில் நடிக்கத் தொடங்கினார். இதுவரை 50-க்கும் மேற்பட்ட தொலைகாட்சி சீரியல்களில் நடித்திருந்தார்.

அவருக்கு 2005-ஆம் ஆண்டு கலைமாமணி விருது கிடைத்துள்ளது. இவர் அவ்வை சண்முகி, ஒரு நாள் ஒரு கனவு, வெயில், அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அண்மையில் இவர் எதிர்நீச்சல் என்ற சீரியலில் அப்பத்தா பட்டமாளாக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
அவருடைய கேரக்டர் அந்த சீரியலில் பெரிதும் பேசப்பட்டது. இந்த நிலையில் அவரது வீட்டை கலாட்டா சேனலில் ஹோம் டூராக படம்பிடித்து காட்டினார்கள். அப்போது அவருடைய வீட்டு வாசலை திறந்தவுடன் ஒரு பெரிய கண்ணாடி இருந்தது. வாசலில் கண்ணாடி வைத்திருந்தால் அதை பார்த்தவாறு யார் வீட்டிற்கு வந்தாலும் கண் திருஷ்டி விலகும்.
அது போல் அவர்களிடம் இருக்கும் நெகடிவ் வைப்ரேஷன் நம்மை தாக்காது என்றார். மேலும் வீடு முழுக்க சிறிய சிறிய சுவாமி சிலைகள், ஆன்டிக் பொருட்களால் அலங்கரித்திருந்தார். அவரது வீட்டில் மொத்தம் 6 படுக்கை அறைகள் உள்ளது. அந்த 6 அறைகளில் தனக்கு, தனது இரு மகன்களின் குடும்பத்தினருக்கு ஒவ்வொரு அறை, அவர்களின் குழந்தைகளுக்கு ஒரு அறை, வீட்டில் பணி செய்யும் பெண்ணுக்கு ஒரு அறை என 5 அறைகளும் ஒரு அறை காமனாக யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளும்படியாகவும் இருந்தது.
மேலும் பாம்பே ஞானத்தின் வீட்டு கழிவறையில் மின்விசிறி இருப்பதாக அறிந்து அந்த நெறியாளர் கேட்ட போது டாய்லெட்டை நேரடியாக அழைத்துக் கொண்டு போய் காட்டினார் ஞானம். அப்போது டாய்லெட்டில் நிறைய பூச்செடிகள், அழகிய பொம்மைகளை வைத்து அலங்கரித்திருந்தார்.
அவருடைய டாய்லெட்டில் மின்விசிறி எதற்கு என கேட்ட போது, ஒவ்வொரு வீட்டு பாத்ரூமிலும் எக்ஸாஸ்ட் ஃபேனும், சீலிங் ஃபேனும் முக்கியமானது. குளித்து டவலில் என்னதான் துடைத்தாலும் அந்த ஈரம் போகாது. அப்போது ஃபேனை போட்டு நன்கு துடைத்துக் கொள்ளலாம். மேலும் டாய்லெட் என்றால் மூக்கை பிடித்துக் கொண்டு போகும் விஷயம் என சிலர் நினைக்கிறார்கள்.
அது தவறு! டாய்லெட்டையும் கோயிலாக மாற்றலாம். என் வீட்டு டாய்லெட்டை பயன்படுத்துவோர், இப்படி இருப்பதால் எங்களுக்கு வருவது கூட வரமாட்டேங்கிது என நகைச்சுவையாக சொல்வார்கள். அது போல் பாம்பே ஞானம் வீட்டில் உள்ள 6 கழிப்பறைகளிலும் இப்படித்தான் ஃபேனுடன் அழகிய வேலைப்பாடுகளும் இருக்குமாம்.
6 படுக்கை அறைகளும் எப்போதும் சுத்தமாக இருக்கும். வீட்டை கிளீனாக வைத்துக் கொள்வதில் ஞானத்திற்கும் ரொம்ப பிடிக்குமாம். அது போல் வீட்டு டைனிங் டேபிள் இருக்கும் இடத்தில் ஒரு கேமரா உள்ளது. இது குறித்து அந்த ஆங்கர் கேட்ட போது, "எங்கள் வீட்டில் உள்ள படுக்கை அறைகளிலும் கேமரா வைத்திருக்கிறோம்" என பாம்பே ஞானம் சொன்னார்.
உடனே மகன், மருமகள் வந்தாலும் பிரைவசி எப்படி என கேட்டபோது , "அது குறித்து வெளிப்படையாக சொல்ல முடியாது, பாதுகாப்பு அம்சம் என்பதால் வீடியோவில் சொல்ல முடியாது" என்றார். பாம்பே ஞானத்தின் நண்பர் ஒருவர் வீட்டில் ஒருவர் திடீரென இறந்துவிட்டாராம். அவர் எப்படி இறந்தார், என்ன துன்பப்பட்டார் என்றெல்லாம் யாருக்குமே தெரியவில்லை. எனவே சிசிடிவி கேமரா இருந்தால் அதன் மூலம் அறிந்து கொள்ளலாம் என்ற காரணத்திற்காக சிசிடிவி கேமரா முக்கியம் என்றார். அது போல் இவர் வீட்டிற்கு யார் வந்து காலிங் பெல்லை அழுத்தினாலும் உடனே அவருடைய போனுக்கு ரிங் போகுமாம். மேலும் கருங்கல் செட்டியில் குழம்பு வைத்தால் உடலுக்கு நல்லது என்றார். அது போல் ஈய பாத்திரத்தில் ரசம் வைத்தாலும் நல்லது என்றார்.
அந்த காலத்தில் வெள்ளி தட்டுகளில் தங்க காசை பதித்து முன்னோர்கள் சாப்பிட்டனராம். வெள்ளி உடலுக்கு நல்லதாம். இவருடைய உறவினர் ஒருவர் தினமும் கிராம் கணக்கில் தங்கத்தை இழைத்து சாப்பிடுவாராம். அது போல் காலையில் எழுந்ததும் கோயில் கோபுரம், கடற்கரை உள்ளிட்டவைகளை முதலில் பார்த்தால் அன்றைய நாள் நன்றாக இருக்கும் என்றார். இவ்வாறு அந்த வீடியோவில் பல்வேறு பயனுள்ள தகவல்களை பாம்பே ஞானம் தெரிவித்திருந்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications