அந்த டாப் ஹீரோவை பற்றி நடிகை புஷ்பலதா சொன்னதுமே.. கட்டையை கையிலெடுத்த விறகுக்கடைக்காரர்.. பிரபலம் அட
சென்னை: பழம்பெரும் மூத்த நடிகை புஷ்பலதா திரைத்துறைக்கு வந்தது குறித்தும், சினிமாவில் நடிக்க ஆரம்பத்தில் அவர் பட்ட கஷ்டங்கள் குறித்தும், மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
Kingwoods News யூடியூப் சேனலுக்கு தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில் அவர் சொன்னதாவது, "பிரபல நடிகர் ஏவிஎம் ராஜனின் மனைவி புஷ்பலதா.. அற்புதமான நடிகை... இவரை பற்றி சொல்வதானால், ஒரு துயரத்தையும் இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது. புஷ்பலதா திருப்பூரை சேர்ந்தவர். சினிமா வாய்ப்புக்காக சென்னைக்கு வந்தார்..

ஆனால், அப்போதைய ஒரு உச்சபட்ச நடிகர், அவரை சினிமாவில் நடிக்க அனுப்பாமல், தனக்கு சின்ன வீடாகவே அவரை வைத்திருந்தார். சினிமா ஸ்டுடியோ அவரை விடுவதில்லை. இதனால் அவரை மீறி செல்லவும் பயந்து கிடந்தார் புஷ்பலதா.
ரயில்வே கேட்: அப்போதெல்லாம் கோடம்பாக்கம் மேம்பாலம் இல்லாத சமயத்தில், வெறும் ரயில்வே கேட் மட்டும்தான் அப்போது போடப்பட்டு இருந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வண்டிகள் எல்லாம் ரயில்வே கேட்டில் நின்றுதான் செல்லும்.. இந்த ரயில்வே கேட்டை சுற்றிலும் ஏராளமான விறகுக்கடைகள் இருந்தன. அந்த காலகட்டத்தில் கேஸ் ஸ்டவ் இல்லாததால், பெரும்பாலும் அனைவரது வீடுகளிலும் விறகு அடுப்புகள்தான் பயன்பாட்டில் இருந்தன.
அந்தவகையில், கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில், ஒரு விறகுக்கடைக்காரரிடம், தன்னுடைய நிலைமையை சொல்லி புஷ்பலதா அழுதார்.. உச்சபட்ச நடிகர் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருப்பதாகவும், சினிமாவில் நடிக்க அனுமதி தராமல் கட்டுக்குள்ளேயே வைத்திருப்பதாகவும் கூறி கதறினார்.
கிறிஸ்தவ பின்னணி: உடனே அந்த விறகுக்கடைக்காரர் புஷ்பலதாவுக்கு தைரியம் சொல்லி அனுப்பி வைக்கிறார்.. ஒருநாள், கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில், அந்த உச்சபட்ச நடிகரின் கார் வந்து நிற்கிறது. உடனே அந்த விறகு கடைக்காரர், நீண்ட விறகுக்கட்டையை கொண்டு போய், அந்த நடிகரின் கார் கண்ணாடியை அடித்து உடைக்கிறார். வாய்ப்பு தேடி வந்த பெண்ணை சினிமாவில் நடிக்க விடாமல், சின்ன வீடாக பயன்படுத்துகிறாயா? என்று கேட்டு, அவரது காரை நொறுக்குகிறார்.
இந்த சம்பவத்துக்கு பிறகு, அந்த நடிகர் புஷ்பலதாவை தொந்தரவு செய்யவில்லை. அதற்கு பிறகுதான் சினிமாவில் மிகப்பெரிய நடிகையாகவும் புஷ்பலதா வர்றாங்க. இயல்பாகவே கிறிஸ்தவ பின்னணியை சேர்ந்தவர் என்பதால், கணவனுடன் இணைந்து, கிறிஸ்தவ பணிகளை மேற்கொண்டு வருகிறார்" என்று தெரிவித்துள்ளார் தமிழா தமிழா பாண்டியன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications