இந்த வாரம் பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்படுவது யார்? அவங்கலாம் எப்போ? 84 நாட்களுக்கு இத்தனை லட்சமா?
சென்னை: பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சரவண விக்ரமுக்கு எவ்வளவு ஊதியம் தெரியுமா?
பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது முடியும் தருவாயில் உள்ளது. ஆரம்பத்திலிருந்தே இந்த நிகழ்ச்சி விருவிருப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கேங் கேங்காக விளையாடி வருவதாக விமர்சனங்கள் உள்ளன.

இதில் மாயா, ஜோவிகா, பிரதீப் ஆண்டனி, பூர்ணிமா, அர்ச்சனா , விசித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஜோவிகாவும் பிரதீப் ஆண்டனியும் எவிக்ட் ஆகிவிட்டார்கள்.
இந்த நிகழ்ச்சி தற்போது 85 எபிசோடுகளை கடந்துள்ளது. இந்த விளையாட்டில் முதலில் 23 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இதில் இதுவரை 11 பேர் வெளியேற்றப்பட்டனர். பாவா செல்லததுரை அவராகவே போட்டியிலிருந்து விலகி விட்டார். அது போல் வலுவான போட்டியாளராக கருதப்பட்ட பிரதீப் ஆன்டணி, ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில் 84 ஆவது நாளான இன்று யார் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. விசித்ரா, ரவீனா, சரவண விக்ரம் ஆகிய மூன்று பேர் நாமினேஷனில் உள்ளது. இவர்கள் விக்ரம்தான் வெளியேறுவார் என்பது சந்தேகத்திற்கு இடமளிக்காத வகையில் நம்பப்படுகிறது.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் சரவண விக்ரம் வெளியேற போவதாக தகவல்கள் வந்துள்ளன. அவர் 80 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் இருந்தார். இதற்காக அவருக்கு ஒரு எபிசோடுக்கு 18 ஆயிரம் ஊதியம் பேசப்பட்டது. அவருக்கு 14. 94 லட்சம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும். இவருக்கு பிறகு பிக்பாஸ் வீட்டில் விசித்ரா, ரவீனா, பூர்ணிமா, நிக்ஸன், மாயா, மணிசந்திரா, தினேஷ், அர்ச்சனா உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.
இந்த வீட்டில் வாரந்தோறும் சில போட்டியாளர்கள் மக்களின் வாக்குகளுக்கேற்ப வெளியேற்றப்படுவார்கள். அந்த வகையில் யார் கடைசி வரை பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார்களோ அவர்கள்தான் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள். இந்த நிகழ்ச்சி 106 ஆவது முடிவடையும். அதுவரை போட்டியாளர்களுக்கு நவராத்திரி, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு. பொங்கல் உள்ளிட்டவை இங்குதான் கொண்டாடுவார்கள். இந்த போட்டியிலிருந்து கூல் சுரேஷ் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் யார் கடைசி வரை இருப்பார்கள் என தெரியவில்லை.
நிக்ஸன், பூர்ணிமா, மாயா ஆகியோர் எப்போது வெளியேற்றப்படுவார்கள் என நெட்டிசன்கள் கேட்கிறார்கள். இவர்களைத்தான் புல்லியிங் கேங் என விமர்சிக்கிறார்கள்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications