விஜய் டிவியில் முன்னணி நடிகைகள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? "அந்த” நடிகை தான் அதிக சம்பளமாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தற்போதைய முன்னணி சேனலாக விஜய் டிவி வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

அந்த வகையில் விஜய் டிவியில் நடிக்கும் நடிகைகளின் சம்பள விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

அதில் யார் யார் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்ற விவரங்களை பார்க்கலாம்.

Do you know how much the leading actresses earn in Vijay TV

பொதுவாக இப்போது உள்ள சூழ்நிலையில் சீரியலில் நடிக்கும் நடிகைகள் சீரியலை தாண்டி சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக மாறி அதிகமான ரசிகர்களுக்கு பரிட்சயமாக இருக்கின்றனர். அந்த வகையில் விஜய் டிவி நடிகைகள் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல்கள் இப்போது வெளியாகி இருக்கிறது. அதில் யார் அதிகமான சம்பளம் வாங்குகிறார்கள் என்ற விவரத்தை பார்க்கலாம்.

1,சுசித்ரா: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா கேரக்டரில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். இவர் ஒரு கன்னட நடிகையாகவும் இருக்கிறார். "சைவம்" ஒரு சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் சில ஷார்ட் பிலிம்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் பாக்கியலட்சுமி சீரியலில் நடிப்பதற்காக ஒரு நாளைக்கு 12000 ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

2, நக்ஷத்திரா: இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் சரஸ்வதியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல இவர் ஆரம்பத்தில் தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அனைவருக்கும் பிரபலமானவர்தான். அதுமட்டுமில்லாமல் சன் டிவியில் சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். இப்போது விஜய் டிவி சீரியலில் தொடர்ந்து நடித்துவரும் இவருக்கு ஒரு நாளைக்கு சம்பளம் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறதாம்.

3, வினுஷா தேவி: பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து வரும் வினுஷா தேவி பாரதி கண்ணம்மா சீரியல் முதல் பாகத்திலும் கண்ணமாவாக நடித்திருந்தார். இப்போது இரண்டாவது பாகத்திலும் கண்ணம்மாவாக தொடர்ந்து கொண்டிருக்கிறார். இவர் இதற்கு முன்பு ஒரு மாடலிங் பெண்ணாகவும் இன்ஸ்டாகிராம் பிரபலமாகவும் இருந்த நிலையில் இப்போது நடிகையாக கலக்கி கொண்டிருக்கும் நிலையில் இவருக்கு ஒரு நாளைக்கு 8000 சம்பளம் பெறுகிறாராம்.

Do you know how much the leading actresses earn in Vijay TV

4, ரேஷ்மா பசுபுலேட்டி: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மட்டுமல்லாமல் பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி இதற்கு முன்பு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அதுவும் வேலையின்னு வந்துவிட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் இவருடைய புஷ்பா கேரக்டர் இப்போதும் அதிகமானவரால் குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் ரேஷ்மாவிற்கு ஒரு நாளைக்கு சம்பளம் ஏழாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறதாம்.

5, சுஜிதா தனுஷ்: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனம் கேரக்டரில் நடித்து வரும் சுஜிதா ஒரு நாளைக்கு இந்த சீரியலின் நடிப்பதற்காக 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. சுஜிதா குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போதே பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இப்போது தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+