ஜெயம் ரவிக்கும் கல்யாணபரிசு தங்கவேலுவுக்கும் இப்படி ஒரு உறவா? திருட்டு ரயில் ஏறாததால் வந்த வாழ்க்கை
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கின்ற இயக்குனர் மோகன்ராஜா மற்றும் முன்னணி கதாநாயகர்கள் ஒருவரான நடிகர் ஜெயம் ரவி குடும்பத்தினருக்கும் மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் தங்கவேலு குடும்பத்தினருக்கிடையே இருக்கும் உறவை பற்றி பிரபல சினிமா பத்திரிக்கையாளர் சித்ரா லக்ஷ்மன் சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்தத் தகவல்கள் பலருக்கு ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால் சென்னை தான் ஒரே வழி என்று பலர் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் தானும் சென்னை சென்று முன்னேற வேண்டும் என்று தன்னுடைய 13 வயதில் முடிவெடுத்துள்ளான் ஜின்னா என்ற ஒரு சிறுவன்.
ஆனால் சென்னை செல்வதற்கு டிக்கெட் எடுப்பதற்கு ஜின்னாவிடம் பணம் இல்லை.அப்போதெல்லாம் பலர் டிக்கெட் எடுக்காமல் திருட்டு ரயில் ஏறி சென்னை வருவதுண்டு. ஆனால் ஜின்னாவிற்கு அப்படி வர மனமில்லை மதுரைக்கு அருகில் உள்ள திருமங்கலத்தை சேர்ந்த ஜின்னா நடை பயணமாகவே சென்னை நோக்கி நடக்க ஆரம்பித்துள்ளான்.

நடந்தே ஒரு வழியாக சென்னையை அடைந்த சிறுவன் ஜின்னா வந்து சேர்ந்த இடம் சென்னையின் பாண்டி பஜார். தங்குவதற்கு இடமில்லாமல்
இருந்த ஜின்னா ஒரு வழியாக பாண்டி பஜார் பின்புறம் நகைச்சுவை நடிகர் தங்கவேலு இடம் சென்று உதவி கேட்டுள்ளான்.முதல் பார்வையிலேயே ஜின்னாவை தங்கவேலுவிற்கும் அவரது மனைவிக்கும் பிடித்து போய் விட்டதால் தன்னுடைய வீட்டிலேயே ஜின்னாவை தங்க வைத்துள்ளார்.
தங்கவேலு பிசியான நகைச்சுவை நடிகராக உச்சத்தில் இருந்து கொண்டிருந்த காலகட்டம் அது. அந்த சமயத்தில் எத்தனை படங்கள் ரிலீஸ் ஆனாலும் கதாநாயகர்கள் வேறு வேறு இருப்பார்கள் ஆனால் அனைத்து படத்திலும் நகைச்சுவை நடிகர் தங்கவேலு தான் பிரதானமாக இருப்பார். அந்த அளவிற்கு தங்கவேலு பிஸியாக இருந்த காலம் அது.

மிகப்பெரிய நடிகராக புகழ்,பணம் என அனைத்தும் இருந்தாலும் தனக்கு ஒரு குழந்தை இல்லையே என்ற ஏக்கம் நடிகர் தங்கவேலுவிற்கு இருந்தது. இதனால் தன் வீட்டில் வளர்ந்த ஜின்னாவையே தன்னுடைய மகனாக தத்தெடுக்க முடிவு செய்து தன்னுடைய நண்பர்களிடம் கூறியுள்ளார். தனது மனைவி மற்றும் நண்பர்களும் தங்கவேலு முடிவுக்கு சரி சொன்னதால் ஜின்னாவையே தன் மகனாக தத்தெடுத்து மோகன் என பெயரை மாற்றினார்.
அந்த மோகன் வேறு யாரும் இல்லை தமிழ் மற்றும் தெலுங்கில் இன்றும் பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிற இயக்குனர் மோகன்ராஜா மற்றும் தமிழில் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவரான நடிகர் ஜெயம் ரவியின் தந்தை தான். எவ்வளவுதான் கஷ்டம் இருந்தாலும் திருட்டு ரயில் ஏறாமல் மதுரையில் இருந்து நடந்தே சென்னைக்கு வந்த எடிட்டர் மோகனின் நேர்மை தான் இன்றும் அவரையும் அவர் மகன்களையும் இந்த உயரத்தில் வைத்திருக்கிறது என்று பலர் எடிட்டர் மோகனை பாராட்டி தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications