எதிர்நீச்சல் "தர்ஷினி” யார் தெரியுமா..? கின்னஸ் ரெக்கார்ட்.. அடேங்கப்பா..! இத்தனை வெற்றியா..?
சென்னை: சன் டிவியில் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷினி கேரக்டரில் நடித்து வரும் நடிகையின் பெயர் மோனிஷா விஜய் தான்.
இவர் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் மற்றும் ஈஸ்வரியின் மகளாக இந்த சீரியலில் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பு மோனிஷா பல சீரியல்களிலும், விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார்.

அத்தோடு மோனிஷா ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் விளையாட்டு வீராங்கனையாகவும், சிலம்பாட்டத்தில் கைதேர்ந்தவர் ஆகவும், அதே நேரத்தில் கின்னஸ் ரெக்கார்டு செய்தவராகவும் இருக்கிறார். மேலும் அவருக்குள் எத்தனை திறமைகள் இருக்கிறது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் அனைத்து தரப்பட்ட ரசிகர்களாலும் ரசிக்கப்படும் ஒரு சீரியலாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இந்த சீரியல் பெண் அடிமைத்தனத்துக்கு எதிராக ஒளிபரப்பாக தொடங்கியதும், பலர் இதற்கு நெகட்டிவ் கருத்துக்கள் கூறிக் கொண்டிருந்தாலும் இப்போது இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து இருக்கிறார்கள். அதுவும் ஆண்கள் கூட இந்த சீரியலுக்கு அதிகமான சப்போர்ட் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்.

அதனாலேயே இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும், ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைய தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் குட்டி குழந்தை முதல் பெரிய கதாநாயகி வரைக்கும் அனைத்து நடிகர்களுக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அது போல தான் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் மற்றும் ஈஸ்வரியின் மகள் தர்ஷினி கேரக்டரில் நடிகை மோனிஷாக்கும் ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு இவருடைய சடங்கு ஃபங்ஷன் போது இவருடைய நடிப்பு அதிகமாக பேசப்பட்டது. ஆனால் அதைத் தொடர்ந்து இவருக்கு அதிகமாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறது. இந்த நிலையில் இன்னும் வரும் நாட்களில் இவருடைய திறமைக்கு தகுந்த மாதிரி பெரிய அளவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பது நிச்சயம். அந்த அளவிற்கு இவருக்கு என்ன திறமை எல்லாம் இருக்கிறது என்று பார்த்தால் கேட்பவர்கள் வியந்து போய் விடுவார்கள். அந்த அளவிற்கு இவர் சொல்லிக் கொண்டே போகிறார்.

என்னனா தர்ஷினியாக நடிக்கும் மோனிஷா விஜய் ஒரு கின்னஸ் ரெக்கார்ட் ஹோல்டர், அவரும் அவருடைய சகோதரியும் சேர்ந்து இந்த கின்னஸ் சாதனையை படைத்திருக்கிறார்கள். இந்தியாவில் முதல்முறையாக கின்னஸ் ரெக்கார்ட் படைத்த சகோதரிகள் இவர்கள்தான். அதுபோல இவர்கள் இரண்டு பேரும் சிலம்பத்தில் இந்திய அளவில் தேர்வாகி இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட விளையாட்டு வீராங்கனையாக சென்று இன்டர்நேஷனல் அளவில் சிலம்பத்தில் கோல்ட் மெடல் பெற்றிருக்கிறாராம்.
அதுபோல இவர் சிலம்பம் மட்டும் அல்லாமல் கராத்தே போன்ற பல தற்காப்பு கலைகளையும் கற்றுக் கொண்டு அதில் போட்டியில் கலந்து கொண்டு இதுவரைக்கும் பெரிய அளவில் 130 க்கும் மேற்பட்ட சர்டிபிகேட், மெடல் வாங்கி இருக்கிறாராம். விளையாட்டு மட்டுமல்லாமல் நடிப்பிலும் இவர் மூன்று வயதிலேயே காலடி எடுத்து வைக்க தொடங்கி இருக்கிறார்.

கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா, ரியாலிட்டி ஷோ, டான்ஸ் ஷோ, ஜோடி நம்பர் 1, அதுபோல ஜீ தமிழில் ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் என பல நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக இவர் கலந்து கொண்டு இருந்தாராம். அப்போது தான் இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சந்திரகுமாரி என்ற சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதிலும் நடித்திருக்கிறார். அதுபோல கலர்ஸ் தமிழ் என பல சேனல்களில் நடித்துவிட்டு இப்போது எதிர்நீச்சல் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதுபோல இவர் தொடர்ச்சியாக விளையாட்டுகள், நடிப்பு, டான்ஸ் மட்டுமல்லாமல் இவர் ஒரு மியுசிஷ்யன், என பல திறமைகள் கைவசம் வைத்திருக்கும் நிலையில் இவருடைய பல திறமையை பல வருடங்களுக்கு முன்பே ஜீ தமிழ் ரியாலிட்டி ஷோவில் பார்த்து தேவயானி கண்கலங்கி அழுது இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுபோல எதிர்நீச்சல் சீரியலுக்கான ஆடிஷனில் கூட இவர் எம்.ஆர் ராதாவின் குரலில் மிமிக்கிரி பண்ணி அசத்தியிருக்கிறார். அதை பார்த்து தான் திருச்செல்வம் இந்த சீரியலில் இவருக்கு வாய்ப்பு கொடுத்து இருந்தாராம். அந்த அளவிற்கு இவருக்குள் திறமை இருக்கும் நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் இவருக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் இருக்கிறது. ஆனால் எதிர்வரும் காலங்களில் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. நாமம் பொருத்துவது பார்ப்போம்.

-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
வாழ்க்கையை கெடுத்த "வதந்தி”.. இப்போ கஷ்டப்படுறேன்.. கண்ணீருடன் உதவி கேட்ட பாவா லட்சுமணன்! -
"பாரதிராஜாவை போலவே... கடைசி நாட்களில் அமைதியாக வலியை சுமந்த மணிவண்ணன்!" சோக கதை -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications