உங்க ஸ்மைல் க்யூட்டா இருக்கு! சச்சின் படத்தில் விஜய்யிடம் சொன்ன அந்த குட்டி குழந்தை இப்போ யாருன்னு தெரியுதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் ரசிகர்கள் யாராக இருந்தாலும் இந்த ஒரு வசனத்தை மறந்து இருக்க வாய்ப்பே இல்லை. 2005 இல் வெளியான சச்சின் படத்தில் விஜய்யிடம் ஒரு குட்டி குழந்தை சிரித்தபடியே, உங்க ஸ்மைல் க்யூட்டாய் இருக்கு என்று சொல்லும் அந்த காட்சி.. இன்றும் ஷார்ட்ஸ், மீம்ஸ், ரீல்ஸ் எல்லாவற்றிலும் அடிக்கடி சுற்றி வருகிறது. அந்த குழந்தை வெள்ளை ஸ்வெட்டரில் பாப் கட்டிங்கில் க்யூட்டாக இருக்கும். அந்த சிறுமி இப்போ இளம்பெண்ணாக மாறி இருக்கிறார். அவருடைய வீடியோ தான் இப்போ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சச்சின் பட குழந்தை

சச்சின் படத்தில் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ப்ரீத்தி தற்போது நடிகையாக இல்லாமல் பாடகி மற்றும் பாடல் ஆசிரியராக தனது பயணத்தை தொடர்கிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது பழைய காட்சிகளை மீண்டும் ரீ கிரியேட் செய்திருக்கிறார்‌ சச்சின் படத்தில் விஜய்யிடம் எப்படி பேசுவாரோ அதே போல இப்போதும் வைட் கலர் ஸ்வெட்டரில் பாப் கட்டிங்கோடு அவர் வெளியிட்ட வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்ததும் அந்த குட்டி பொண்ணா? இவ்வளவு வளர்ந்துடுச்சு என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Vijay Sachin Movie Child Artist

சச்சின் பட நினைவுகள்

சச்சின் படம் வந்து 21 வருஷம் ஆனதே பலருக்கு மறந்து போய்விட்டது போல. காலம் எவ்வளவு வேகமாக போயிடுச்சு... இப்பதானே குழந்தையாக பார்த்தோம், அதற்குள்ள இப்போ இவ்வளவு பெரியவங்களா ஆகிட்டாங்களே என்று பலர் கமெண்ட்ஸ் கொடுத்திருக்கிறார்கள். ப்ரீத்தி வெளியிட்ட இந்த க்யூட்டான வீடியோ கூட இணையத்தில் அதிகமான லைக்களை பற்றி வருகிறது. அவர் பல பாடல்களை பாடி வீடியோக்கள் வெளியிட்டிருந்தாலும் கூட அதையெல்லாம் தாண்டி இந்த சச்சின் ரீ கிரியேட் வீடியோ தான் வைரல் ஆகி வருகிறது.

Vijay Sachin Movie Child Artist

ரசிகர்கள் கருத்து

ஜான் மகேந்திரன் இயக்கிய சச்சின் படம் 2005 இல் வெளியானது. ஜெனிலியா பிபாஷா பாசு, வடிவேலு, ரகுவரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் வெளியான காலத்திலேயே பெரிய வரவேற்பு பெற்றது. தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடல்களும் இன்று வரை ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம் பிடித்திருக்கின்றன. 20 வருஷங்கள் கடந்த பிறகு இந்த படம் ரீலிசிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

ஒரு காலத்தில் திரிஷா, விஜய் மனதார நேசித்தாங்க! ஆனால் சந்திரசேகர்! நடிகை குட்டி பத்மினி போட்ட புது குண்டு
சில படங்களில் பெரிய பஞ்ச் டயலாக்கு கூட ஒரு சிலருக்கு மறந்து போய்விடும். ஆனால் சில நேரங்களில் ஒரு குழந்தை சொல்லும் ஒரு சின்ன வசனம் மட்டும் ரசிகர்களின் மனதில் நிரந்தரமாக பதிந்துவிடும். உங்கள் ஸ்மைல் கியூட்டா இருக்கு என்பதும் அப்படிப்பட்ட வசனங்களில் ஒன்றுதான். அன்று அந்த காட்சியை நடித்த குழந்தை வளர்ந்து மீண்டும் அதே காட்சியை ரீகிரியேட் செய்திருப்பது விஜய் ரசிகர்களுக்கு ஒரு அழகான நாஸ்டால்ஜியா தருணமா மாறி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+