இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை யார் தெரியுதா? தமிழ் சினிமாவை கலக்கிய டாப் நடிகர் தான்! எதிர்பார்க்காத மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை யார் தெரியுதா? என்ற கேள்வியுடன் நடிகர் வினித் வெளியிட்ட போட்டோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாரத நாட்டிய டிரஸ்ஸில் இருக்கும் அந்த குழந்தை இப்போ தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் பிரபலமான நடிகர் தான் என்பது உலகம் அறிந்த ரகசியம். ஆனால் வினித் ரசிகர்களை குழம்ப வைத்திருக்கிறார்.

அதாவது நடிகர் வினித் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் இரண்டு போட்டோவை பகிர்ந்து "Can anyone guess this little dancer?" என்ற பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் சின்ன வயதில் பரதநாட்டிய போட்டிக்கு தயாராக இருக்கும்போது பெண் உடையில் எடுத்த க்யூட்டான புகைப்படங்கள்தான். இந்த பதிவுக்கு ஆயிரம் கணக்கான ரசிகர்கள் லக்குகள் மற்றும் கருத்துக்களை வெளியிட்டு இருக்கின்றனர்.

Vineeth Actor Vineeth Bharatanatyam

நடிகர் வினித் சிறு வயது போட்டோ

அதில் முதல் புகைப்படத்தை பார்க்கும் போது அது வினித் என்பது பலருக்கும் தெரியாது. ஆனால் 2வது புகைப்படத்தில் அந்த கண்கள் மற்றும் முக அழகை பார்க்கும்போது வினித் என்பது ரசிகர்களால் கண்டுபிடிக்க முடிகிறது. நடிகர் வினித்தின் சொந்த ஊரான கேரளாவில் இருந்தே பரதநாட்டியம் மற்றும் இந்திய பாரம்பரிய நடனங்களை முறையாக கற்றுக் கொண்டவர்.

அவருடைய குடும்பத்தினர் கொடுத்த மோட்டிவேஷனலால் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். பிறகு சிறந்த நடன திறமையே அவரை சினிமாவுக்கு அழைத்து வந்தது. 1980 களின் கடைசியிலும் 1990 களிலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களிலும் நடித்து அசத்தியிருப்பார். அவர் தமிழில் அறிமுகமான ஆவாரம்பூ படம் அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது. அதற்குப் பிறகு சங்கர் இயக்கிய ஜென்டில்மேன் திரைப்படத்திலும் ஒரு கேரக்டரில் நடித்திருப்பார்.

Vineeth Actor Vineeth Bharatanatyam

நடிகர் வினித் ஆரம்ப காலம்

அதைத்தொடர்ந்து தான் நடிகர் அப்பாஸுடன் காதல் தேசம் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தான் இவரை சாக்லேட் பாயாக இளம் ரசிகர்களின் மத்தியில் தனி இடம் வாங்கி கொடுத்தது. அதற்குப் பிறகு சந்திரமுகி, சுயம்வரம், சர்வம் தாள மயம் என பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். காதல், குடும்பம், டான்ஸ், சென்டிமென்ட் என எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் இயல்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

நடிகர் சல்மான் கானுக்கு என்ன ஆச்சு? உடல் மெலிந்து ஆளே மாறிய போட்டோ.. அவரே கொடுத்த பதில் என்ன தெரியுமா?
இப்போ வரைக்கும் எத்தனையோ மலையாள நடிகர்கள் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் பதிந்து விடுகிறார்கள். அதேபோலத்தான் இவரும் ஆரம்பத்திலேயே ரசிகர்களுடன் கனெக்ட் ஆகிவிட்டார். அதோடு என்னதான் நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் தனக்கு பிடித்த டான்ஸிலும் கலக்கி கொண்டு தான் இருக்கிறார். சமீப காலமாக குண சித்திர வேடங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

Vineeth Actor Vineeth Bharatanatyam

டான்ஸ் டீச்சர்

சந்திரமுகி திரைப்படத்திற்கு பிறகு இவரை பெரிதான கேரக்டர்களில் தமிழில் பார்க்க முடியவில்லை என்றாலும் மலையாள சினிமாவில் முக்கிய கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் டான்ஸ் ஸ்கூலையும் நடத்தி வருகிறார். இவருடைய டான்ஸ் ஸ்கூலில் தான் தாமிரபரணி படத்தில் பானுவாக நடித்த நடிகையின் மகளும் டான்ஸ் கற்று இருந்தார். சில மாதங்களுக்கும் முன்பு இந்த நடிகை என் குழந்தையின் குருநாதர் என்று இவரை அறிமுகப்படுத்தி வைத்திருந்தார். அந்த புகைப்படங்கள் கூட பெரிதாக பேசப்பட்டது.

டெல்லி தடியடி சம்பவத்துக்கு கொதித்த நடிகர் டொவினோ தாமஸ்.. வெளியிட்ட பதிவு! பாராட்டும் ரசிகர்கள்
இந்த நிலையில் இப்போது தன்னுடைய சின்ன வயது புகைப்படத்தை வினித் பகிர்ந்து இருக்கும் நிலையில் அதை பார்த்ததும் அப்போதே எவ்வளவு சின்ன வயதிலிருந்தே இவர் ஒரு கலைஞராகத்தான் இருந்திருக்கிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் கொடுக்கின்றனர். இன்னும் சில ரசிகர்கள் இது வினித் என்றே தெரியவில்லை, உண்மையில் நாங்கள் ஏதோ ஒரு பொண்ணு என்று நினைச்சிட்டோம் என சொல்லி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+