டிடி பக்கத்தில் இருக்கும் நபர் யார் தெரியுதா? குட் நியூஸ் சொன்ன பிரியதர்ஷினி..குவியும் வாழ்த்துக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவி நிகழ்ச்சிகளில் அதிகமாக தொகுப்பாளராக இருக்கும் டிடி மற்றும் எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகாவாக நடிக்கும் நடிகை பிரியதர்ஷினி சகோதரிகள் தான் என்பது பலருக்கும் தெரியும்.

இந்த நிலையில் டிடி மற்றும் பிரியதர்ஷினி சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பிரியதர்ஷினி வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார்.

Do you know who the person on the DD nearby is? Priyadarshini gave good news

இவர்கள் இருவருடனும் ஒரு ஆண் நபர் ஒருவர் அமர்ந்திருக்கிறார். அந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. யார் அவர் என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்று சொல்லும் அளவிற்கு பல வருடங்களாக விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய டிடி பலமுறை சிறந்த தொகுப்பாளருக்கான விருதினை பெற்றிருக்கிறார். அத்தோடு தொகுப்பாளராக மட்டுமல்லாமல் டிடி சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

அதிலும் ஜோடி நம்பர் ஒன், காபி வித் டிடி என்ற நிகழ்ச்சிகள் அதிகமான ரசிகர்கள் டிடிக்காகவே பார்த்து வந்தனர். அந்த அளவிற்கு ரசிகர்களின் முன்பு சிரித்த முகமாக ஜாலியாக பேசிக் கொண்டிருக்கும் டிடிஐ அதிகமான ரசிகர்களுக்கு பிடிக்கும். இந்த நிலையில் தான் இவருக்கு சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் வாய்ப்பு கிடைத்தது. ஜூலி கணபதி, நலத்தமயந்தி, பவர் பாண்டி, காபி வித் காதல் போன்ற பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

அதோடு சமுதாயத்தில் பலருக்கு மோட்டிவேஷன் கொடுக்கும் மோட்டிவேஷனராகவும் இருக்கும் நிலையில் தனிப்பட்ட வாழ்க்கை சோகமானதாக தான் இருந்து வருகிறது. ஆனாலும் எவ்வளவு பெரிய வேதனையில் இருந்தாலும் அதிலிருந்து கடந்து வந்த டிடி தனக்கு கிடைக்கும் இடங்களில் எல்லாம் பலருக்கும் உத்வேகம் கொடுக்கும் வகையில் பேசி வருகிறார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்ட டிடி அதற்குப் பிறகு வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறப்போகிறது என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் அந்த வாழ்க்கை சில மாதங்களுக்குள் முடிவுக்கு வந்துவிட்டது.

திடீர்னு அவருடைய கணவருக்கும் இவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்தனர் பிறகு விவாகரத்தும் செய்து கொண்டனர் இந்த நிலையில் டிடி இரண்டாவது திருமணம் பற்றி தகவல்கள் பரவி வருகிறது. இந்த நிலையில் டிடியின் சகோதரி ஆன எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா ஆவாக நடிக்கும் பிரியதர்ஷினி ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் பிரியதர்ஷினி திவ்யதர்ஷினி கூடவே இன்னொரு ஆண் நபரும் இருக்கிறார். அவருக்கு இன்று பிறந்தநாளாம். அது வேறு யாரும் இல்லை அதுதான் இவர்கள் இருவரின் சகோதரர்தானாம் சுதர்சன் என்பதுதான் அவருடைய பெயராம். இந்த நிலையில் சுதர்சனின் பிறந்தநாளுக்கு பிரியதர்ஷினி வாழ்த்துக்கள் கூறி இருக்கும் நிலையில் தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+