பார் செட்டப்புடன் கட்டிய வீட்டை இடித்துவிட்டு மீண்டும் கட்டிய கண்ணான கண்ணே சீரியல் நடிகை.. ஏன்?
சென்னை: கண்ணான கண்ணே சீரியல் நடிகை பிரியா பிரின்ஸ் புதிதாக கட்டிய வீட்டை இடித்துவிட்டு மீண்டும் கட்டியுள்ளார். இதற்கான நெகிழ்ச்சியான காரணத்தையும் அவர் கூறியிருக்கிறார்.
புதிய தலைமுறை தொலைகாட்சியில் செய்திவாசிப்பாளராக தனது பணியை தொடங்கியவர் பிரியா பிரின்ஸ் இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் என் பெயர் மீனாட்சி, தவணை முறை வாழ்க்கை, தமிழ் கடவுள் முருகன், மாப்பிள்ளை, பொன்மகள் வந்தாள், கண்மணி, கண்ணான கண்ணே உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். இவர் 2015 ஆம் ஆண்டு பசங்க திரைப்படத்திலும் நடித்துள்ளார். 2.0 மற்றும் நடுவன் ஆகிய படங்களிலும் தோன்றியுள்ளார்.
இவருக்கு 33 வயதாகிறது. எனினும் இவர் சீரியல்களில் அம்மா வேடம், வில்லி வேடங்களிலும் பணக்கார பெண் வேடங்களிலும் நடித்து வருகிறார். எத்தனை சீரியல்களிலும் படங்களிலும் நடித்திருந்தாலும் இவருக்கு கண்ணான கண்ணே சீரியலில் வில்லியாக நடித்ததுதான் பெரும் வரவேற்பை பெற்று தந்தது.

இதைத் தொடர்ந்து தற்போது இலக்கியா, ராமன் தேடிய சீதை ஆகிய தொடர்களில் தன்னுடைய வில்லி கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். பிரியா பிரின்ஸ் அண்மையில் ஒரு பிரம்மாண்ட வீட்டை கட்டி வந்தார். இந்த வீட்டில் பார் செட்டப்புடன் கட்டியிருந்தார். இதுகுறித்து அவரே யூடியூப் சேனலில் தெரிவித்திருந்தார்.
இந்த வீட்டில் ஒரு சிறு பகுதியை இடித்துவிட்டு பிரியா பிரின்ஸ் மீண்டும் கட்டியுள்ளார். வீட்டு சமையலறை ஓபன் கிச்சனாக இருக்க வேண்டும் என்பது பிரியா பிரின்ஸின் தாயின் விருப்பமாம். ஆனால் இது வேறு மாதிரி இருந்ததால் தனது தாயின் ஆசைக்காக அந்த பகுதியை மட்டும் இடித்துவிட்டு மீண்டும் கட்டியுள்ளார். இதற்காக அவர் பல லட்சங்களை செலவிட்டும் உள்ளார்.

அவருடைய ஹோம் டூர் வீடியோவையும் அவரது சேனலில் வெளியிட்டிருந்தார். கதவு எண் ஏ1 என போடப்பட்டுள்ள அந்த வீட்டின் வாசலில் சிறிய அளவிலான சாய்பாபா அமர்ந்திருக்கிறார். கோயிலில் உள்ளது போல் விளக்கு இருக்கிறது. கிரகபிரவேசத்திற்கு அனைவரையும் விளக்கு ஏற்ற வைத்துவிட்டோம் என்றார்.
வீட்டில் பர்னிச்சர்களை விலைக்கு வாங்காமல் செய்துள்ளார். ஹாலில் ஒரு ஆன்டிக் போன் வைத்துள்ளார். எதுவுமே அவருடைய உயரத்தில் இருந்தால்தான் தனக்கு பிடிக்கும் என கூறுகிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications