அந்நியன் பட "லாலி லாலோ” பாடல் குழந்தையை ஞாபகம் இருக்கா? இப்போ ஆளே மாறிட்டாங்களே!
சென்னை: சில நடிகர், நடிகைகள் ஒரு படத்தில் 2 மணி நேரம் தொடர்ந்து வந்தால் கூட ரசிகர்கள் காலப்போக்கில் மறந்துவிடுவார்கள். ஆனால் சிலர் 2 நிமிடம் வந்தாலே போதும் பல வருடம் கழித்தும் அவர்கள் முகம் மனதில் நிற்கும். அப்படித்தான் தமிழ் ரசிகர்களால் இன்னும் மறக்க முடியாத ஒரு குழந்தை நட்சத்திரம் தான் நடிகை திவ்யா நாகேஷ். அந்நியன் படத்தில் அம்பியின் தங்கச்சியாக நடித்திருப்பார்.

அந்நியன் பட குழந்தை நட்சத்திரம்
அந்நியன் படத்தில் அம்பியின் தங்கச்சி, பேச்சு போட்டியில் கலந்து கொண்டு வண்டியில் வரும்போது மழைநீரில் தவறி விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் அந்த காட்சியை இன்னும் யாராலும் மறந்து இருக்க முடியாது. அந்த காட்சியில் ஒழித்த "லாலி லாலோ" பின்னணி இசையும் அந்த சிறுமியின் முகமும் இன்னமும் சோசியல் மீடியாக்களில் ரீல்ஸ்களிலும், ஷார்ட் வீடியோக்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த குழந்தை இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?
நடிகை திவ்யா நாகேஷ்
அந்நியன் படத்தில் குழந்தையாக நடித்த நடிகையின் பெயர் திவ்யா நாகேஷ். சின்ன வயதிலேயே நடிக்க தொடங்கி விட்டார். விளம்பரம், சீரியல்கள் தமிழ் மற்றும் தெலுங்கு படங்கள் என குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய ஆரம்ப காலத்தை தொடங்கிய திவ்யா 40க்கும் மேற்பட்ட படங்களிலும், ஏராளமான சீரியல்களிலும் நடித்து இருக்கிறார்.

அந்நியன் படத்திற்கு பிறகு திவ்யா நாகேஷின் வாழ்க்கையை மாற்றிய படம் அருந்ததி. அனுஷ்காவின் சின்ன வயது ஜெஜம்மா கேரக்டரில் நடித்த அவருடைய நடிப்பு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெற்றது. அந்த கேரக்டருக்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திறகான நந்தி விருதையும் பெற்றிருந்தார். இன்னும் அருந்ததி குழந்தை என்றும் இவரை பலரும் கூறி வருகின்றனர்.
குளியலறை வீடியோவை வெளியிட்ட சீரியல் நடிகை ஃபரீனா..! ரசிகர்கள் கேள்வி இதுதான்! அட சோதனையே!
குழந்தை நட்சத்திரமாக வெற்றி பெற்ற பிறகு ஹீரோயினியாக ஒரு ரவுண்டு வர வேண்டும் என்று முயற்சி செய்தார். தெலுங்கில் 'Nenu Nanna Abaddam' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதுபோல தமிழில் பாசக்கார நண்பர்கள், புவனக்காடு, எண்ணம் புது வண்ணம், மேற்கு மோகப்போர் கனகதுர்க்கா உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

நடிகை திவ்யா நாகேஷ் தற்போதைய நிலை
குழந்தை நட்சத்திரமாக கிடைத்த புகழ் ஹீரோயினியாக தொடர முடியாமல் போய்விட்டது. அதுபோல அவர் குழந்தையாக இருக்கும்போது நீங்க இனி என்ன மாதிரி என்ன படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது என கேட்டதற்கு மணிரத்தினம், பிரியதர்ஷன் போன்ற இயக்குனருடன் வேலை செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு என்று சொல்லியிருந்தார்.
அந்த அளவிற்கு அவருக்கு சினிமா மீது அப்போது ஆர்வம் இருந்தது. ஆனால் ஹீரோயினியாக வந்த பிறகு அவருக்கு பெரிதாக வெற்றி கிடைக்காததால் சுமார் 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நடிகரும் டான்ஸ் கலைஞருமான அஜயகுமாரை கடந்த வருஷம் கல்யாணம் செய்து கொண்டார். திருமண புகைப்படங்கள் அப்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆனது. திருமணத்திற்கு பிறகு திவ்யா நாகேஷ் பெரிதாக சினிமாவில் நடிக்கவில்லை.
தன்னுடைய குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். அதுபோல சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கிறார். அதோடு புது படங்களுக்கு ரிவ்யூவும் கொடுத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications
