குளியலறை வீடியோவை வெளியிட்ட சீரியல் நடிகை ஃபரீனா..! ரசிகர்கள் கேள்வி இதுதான்! அட சோதனையே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் வில்லியாக நடித்து பிரபலம் அடைந்த ஃபரீனா ஆசாத் சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். ஆனால் இப்போது அவர் வெளியிட்ட குளியல் அறை வீடியோ தான் பெரியதாக பேசப்பட்டு வருகிறது. என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா என்று பலரும் அவரை திட்டி தீர்த்து வருகிறார்கள்.

சில நடிகைகள் எப்போதும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பார்கள். அதில் ஒருவர் தான் ஃபரீனா ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவர் வெளியிட்ட வீடியோ பெரிதாக பேசப்பட்டது. நள்ளிரவு நேரத்தில் அழுது வடிந்த முகத்துடன் சோகமாக பேசியபடி அந்த வீடியோ வெளியிட்டு இருந்தார். அதை பார்த்ததும் ரசிகர்கள் இவருக்கு என்ன பிரச்சனை? கணவரை பிரிய போகிறாரா? என்றெல்லாம் கேள்வி எழுப்பினர்.

நடிகை ஃபரீனா ஆசாத் வீடியோ

காரணம் இதற்கு முன்பு அவர் தமிழா தமிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது புத்தாண்டு பலன்கள் சொல்லும்போது ஃபரீனா ஆசாத் ராசிக்கு அவருடைய கணவருடன் விவாகரத்து ஆகலாம் என்று சொல்லி இருந்தார்கள். அதனால் அது தான் இப்போ நடந்து இருக்கிறதா? என்று கூட சிலர் கேள்வி எழுப்பு இருந்தனர். ஆனால் அந்த வீடியோவில் ஃபரீனா நமக்கு ஒருத்தங்க ரொம்ப புடிச்சி இருந்தா அவங்க கிட்ட பேசுறதுக்கு முயற்சி எடுத்த போது அவங்க நம்மை அவாய்ட் பண்ணுனா நீங்க அதற்காக அழுது நம்முடைய உடலை எடுத்துக்க வேண்டாம். நம்ம அந்த நேரத்தில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று பேசி இருந்தார்.

Farina Azad Vijay TV

குளியலறை வீடியோ

பிறகு ரசிகர்கள் அந்த வீடியோவுக்கு உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டுக் கொண்டிருந்த நிலையில் அந்த வீடியோவையும் அவர் டெலிட் செய்து விட்டார். இந்த நிலையில் இப்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அந்த வீடியோவில் அவர் குளியல் அறையில் குளிக்கும் காட்சிகள் இருக்கிறது. வெறும் ஒரு டவலை மட்டும் கட்டிக் கொண்டு உடல் முழுவதும் சூம் வைத்து இருக்கிறார்.

ரசிகர்கள் கருத்து

அதை பார்த்ததும் என்ன இவர் இப்படி இறங்கிட்டாரு என்று பலரும் கேள்வி எழுப்ப, கடைசியில் தான் அந்த வீடியோவில் ஒரு ஷாம்புவுக்கு அவர் அட்வர்டைஸ்மென்ட் செய்கிறார். என்னதான் இது அட்வர்டைஸ்மென்ட் வீடியோவாக இருந்தாலும் இப்படியெல்லாமா பண்ணுவீங்க? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆரம்பத்தில் ஜீ தமிழில் பல நிகழ்ச்சிகளை ஃபரீனா தொகுத்து வழங்கி இருந்தார்.

பீரியட்ஸ் நேரத்திலும் உடலுறவு டார்ச்சர்.. செகண்ட் லவ் நிகழ்ச்சியில் கதறி அழுத விஜய் டிவி பிரபலம்
அதிலும் அவர் தொகுத்து வழங்கிய சமையல் நிகழ்ச்சியை பார்க்க பல பெண்கள் காத்திருப்பார்கள். காரணம் சமையல் நிகழ்ச்சிக்காக மட்டும் அல்ல, அந்த நிகழ்ச்சிக்காக ஃபரீனா போடும் டிரஸ்ஸை பார்ப்பதற்காக கூட பலர் காத்திருந்தார்கள். அவருடைய உடை மட்டுமல்லாமல் அவர் அணியும் வித்தியாசமான ஜுவல்சும் கூட அதிகமாக பேசப்பட்டது.

விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் ஜெயமணி காலமானார்.. வருத்தத்தில் சின்னத்திரை உலகம்
ஆனால் இப்போது அவர் ஒரு சில சீரியல்களை நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது பாரதி கண்ணம்மா சீரியல் தான். அந்த சீரியலில் முதல் பாகத்திலும் 2வது பாகத்திலும் நடித்திருந்தார். இப்போது அவர் சோசியல் மீடியாவில் இதுபோன்ற சர்ச்சையான வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

Farina Azad Vijay TV

சர்ச்சைக்கு பஞ்சம் இல்லை

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு பிளவுஸில் சீரியல் லைட் வைத்து ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதிலும் திருவண்ணாமலை கோபுரம் வடிவத்தில் அவர் அந்த சீரியல் லைட் வைத்திருந்தது கூட பெரிதாக பேசப்பட்டு இருந்தது. இப்ப அதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் குளியலறை வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இவரை நெட்டிசன்கள் திட்டி கொண்டு இருக்கிறர்கள். ஆனால் அடுத்து என்ன வீடியோவை இறக்கப் போகிறாரோ? என்று அவருடைய ரசிகர்கள் காத்திருக்கிறார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+