பீரியட்ஸ் நேரத்திலும் உடலுறவு டார்ச்சர்.. செகண்ட் லவ் நிகழ்ச்சியில் கதறி அழுத விஜய் டிவி பிரபலம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செகண்ட் லவ் நிகழ்ச்சியை தொடங்கிய நாளிலிருந்து சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. காதலில் தோல்வி, விவாகரத்து என பிரேக்கப் ஆனவர்கள் வாழ்க்கையில் மீண்டும் ஒரு துணையை தேட ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களது அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்து வருவதால் ஒவ்வொரு எபிசோடும் புதிய விவாதத்தை கிளப்பி வருகிறது.
ஒரு புறம் இப்படிப்பட்ட நிகழ்ச்சி தேவையா? என்று விமர்சித்து வர இன்னொரு தரப்பு இரண்டாவது வாழ்க்கை தொடங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல தளம் என்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதேபோல சிலர் பிரேக்கப் வலியில் துடித்துக் கொண்டிருக்கும் போது நம்மைப் போல இத்தனை பேர் கஷ்டப்படுகிறார்கள் என்று தங்களுடைய மனதை தேற்றிக் கொள்வதாகவும் சொல்லி வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் தான் சமீபத்திய எபிசோடில் ஒரு பெண் போட்டியாளர் பகிர்ந்த அனுபவம் சோசியல் மீடியாவில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. நிகழ்ச்சியின் சிறப்பு தொகுப்பாளராக இருக்கும் ஸ்ருதிஹாவிடம் தனது முதல் திருமண வாழ்க்கை குறித்து பேசிய அந்த போட்டியாளர் பேசி இருக்கிறார். தன்னுடைய திருமணம் முடிவதற்கு முக்கிய காரணங்கள் என்னவென்றால், தன்னுடைய முன்னாள் கணவரின் கட்டாய உடலுறவு மிரட்டல் தான் என்று பேசி இருந்தார்.

போட்டியாளரின் கண்ணீர் பேச்சு
அதாவது என்னுடைய முன்னாள் திருமண வாழ்க்கையில் நான் அதிகமாக செக்ஸ் டார்ச்சர் அனுபவித்து இருக்கிறேன். எனக்கு பீரியட்ஸ் இருந்தாலும் கூட அவர் உடலுறவுக்கு கூப்பிடுவாரு. எனக்கு பீரியட்ஸ் உடல்நிலை சரியில்லை இந்த நான்கு நாட்கள் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ என்று சொன்னாலும் கேட்க மாட்டாரு, அதனாலேயே அதை நினைச்சாலே எனக்கு பயமாகிவிட்டது.
செக்ஸ் டார்ச்சர்
ஒரு கட்டத்தில் என்னுடைய வாழ்க்கையை வெறுப்பதற்கும் அந்த செக்ஸ் டார்ச்சர் பெரிய காரணம் என்று அவர் கண்ணீருடன் பேசி இருக்கிறார். அப்போது அவர் பேச பேச அவருடன் இருந்த சக போட்டியாளர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து ஆறுதல் செய்தனர். ஆனாலும் அவரால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாது என்பது போல அவர் நடந்து கொண்டார்.
இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் அந்த பெண்ணுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். திருமணமான மனைவி என்பதற்காக எப்போது வேண்டுமானாலும் உடலுறவு கொள்ளலாம் என்று யாரும் நினைக்க கூடாது. பெண்ணின் சம்மதம் மிகவும் முக்கியம். பீரியட்ஸ் நேரத்தில் உடல்நிலை சரியில்லை என்று சொல்லியும் வற்புறுத்துவது மனரீதியான, உடல் ரீதியான வன்முறை என்று பதிவிட்டு வருகிறார்கள்.

விஜய் டிவி செகண்ட் லவ் நிகழ்ச்சி
மேலும் இப்படிப்பட்ட உறவில் இருந்து வெளியே வர தைரியம் எடுத்தது பாராட்டுக்குரியது என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் விவாகரத்து பெற்றவர்கள் காதலில் ஏமாந்தவர்கள் என இந்த நிகழ்ச்சியில் வந்தவர்கள் எல்லோரும் தங்களுடைய முந்தைய கால கஷ்டங்களைப் பற்றிய சொல்லி கொண்டிருப்பது அதிகமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
சூப்பர் சிங்கர் அருணா கல்யாணத்தில் சுவாரசியம்! ஒன்று சேர்ந்த விஜய் டிவி பிரபலங்கள்.. அதுவும் யாரெல்லாம்னு பாருங்க
அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சி தொடங்கி 15 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் பலருக்கு ஜோடி செட் ஆகவில்லை. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியிலிருந்து பிக் பாஸ் அசிம் உட்பட 3 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இப்போது மூன்று போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்திருக்கிறார்கள். அவர்களும் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி பிரச்சனையை கூட்டி இருக்கிறார்கள்.
ரசிகர்கள் கருத்து
இதனால் இந்த நிகழ்ச்சி பார்த்தவர்களுக்கு அடுத்து என்னதான் நடக்கும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. பார்க்காதவர்களுக்கு இந்த பருத்திமூட்டை குடோனில் இருக்கட்டும் இதையெல்லாம் எவ்வளவு பெரிய கேவலமான நிகழ்ச்சி தெரியுமா? இது போன்ற நிகழ்ச்சி எல்லாம் வெளிநாட்டுக்கு டிவி சேனல்களில் தான் வரும் ஆனால் இப்போ தமிழ் சேனல்களிலும் இதை ஒளிபரப்பு செய்கிறார்கள், ஒரு பெண்ணுக்கு இரண்டு ஆண்கள் சண்டை போடுவது 30 நாட்களில் ஒருவரை காதலிக்க தூண்டுவது, கட்டிபிடிப்பது என இவர்கள் செய்யும் அக்கப்போருக்கு அளவே இல்லையா? என்று தான் பலர் கேள்வி எழுப்புகிறார்கள்.


Click it and Unblock the Notifications
