"நீங்கள் கேட்டவை” பட நடிகர் பானுச்சந்தர் நினைவிருக்கா? இப்போ எப்படி இருக்கிறார்? ஆளே அடையாளம் தெரியலையே!
சென்னை: 80ஸ் தமிழ் சினிமாவை பார்த்தவர்களுக்கு பானுச்சந்தர் என்ற பெயரை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. அன்றைய காலகட்டத்தில் ஹீரோவாக வலம் வந்த இவர் குறிப்பாக காதல் மற்றும் உணர்வுபூர்வமான கேரக்டர்களில் தனித்துவமான நடிப்பை கொடுத்தவர். இப்போது பல வருடங்களுக்கு பிறகு பானுசந்தரின் சில புகைப்படங்களும் வீடியோக்களும் வீடியோவில் வைரலாகி வருகின்றன. அதில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார்.
வெள்ளை தாடி, நரைத்த தலைமுடி என முற்றிலும் வேறு ஒரு தோற்றத்தில் இருக்கும் அவரை பார்த்ததும் இவர்தான அந்த காலத்து ஹீரோ பானு சந்தரா என்று பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். வயதானால் எல்லோருக்கும் மாற்றம் வரும். அதுதான் இப்போது இவருக்கும் வந்திருக்கிறது. ஆனால் இவரை திரையில் பார்த்து ரசித்தவர்களுக்கு இவருடைய இப்போதைய தோற்றம் ஆசிரியத்தையும் கொடுத்திருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பானு சந்தர் அமர்ந்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் வயது ஆனாலும் அதே பழைய கம்பீரத்துடன் அவர் இருப்பதை பார்த்த ரசிகர்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள்.

இசை அமைப்பாளர் மகன்
பானுச்சந்தர் யார் என்றால் தெலுங்கு சினிமாவில் 1970களில் இறுதியில் நடிக்க தொடங்கியவர். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அந்த நேரத்தில் கதாநாயகனாகவும் குணசித்திர வேடங்களிலும் பல படங்களில் நடித்திருந்தார். அதுபோல பிரபல இசையமைப்பாளர் மாஸ்டர் வேணுவின் மகன் என்பது பலருக்கும் தெரியாத தகவல். கதாநாயகனாக இருந்த காலத்தில் அவருடைய தோற்றம் மட்டுமல்லாமல் அமைதியான நடிப்பு, உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தும் விதம் ரசிகர்களை கவர்ந்திருந்தது.

பானு சந்தர் நடித்த படங்கள்
குறிப்பாக இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கிய படங்களில் இவர் அதிகமாக நடித்திருப்பார். மூடுபனி, நீங்கள் கேட்டவை தெலுங்கில் வெளியான நிரிஷனா போன்ற படங்கள் அவரின் சினிமா பயணத்தில் முக்கியமானவை. அதிலும் மூடுபண்ணி படத்தில் ரவி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் காலம் மாறியபோது கதாநாயகன் என்ற இடத்தில் இருந்து குணச்சித்திர கேரக்டர்களுக்கும் பானு சந்தர் மாறினார்.
முகத்துக்கு நேராக அந்த அமைச்சர் சொன்ன வார்த்தை! அதற்கு பிறகு நான் மாறிவிட்டேன்.. நடிகர் சூர்யா உருக்கம்
தமிழில் நீங்கள் கேட்டவை மிருகம், லட்சியம், ஒரு தாயின் ஆசை, ஸ்டைல், சாமுராய் உள்ளிட்ட பல படங்களிலும் குணசித்திர வேடங்களில் நடித்திருந்தார். அதுபோல தெலுங்கிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இப்போது அவருக்கு வயது அதிகரித்தாலும் தொடர்ந்து முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார். பானுச்சந்தரின் மகன் ஜெய்ந்த் கூட சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

ரசிகர்களின் கேள்விகள்
கடந்த 2019ல் வெளியான மார்கழி 16 திரைப்படத்தில் ஜெய்ந்த் நடித்திருந்தார். அப்போது தன்னுடைய மகனை இயக்கும் முயற்சியிலும் பானுச்சந்தர் ஈடுபட்டிருந்தார். ஆனால் அதற்கு பிறகு பெரிதாக ஜெய்ந்து தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை. ஒரு காலத்தில் கதாநாயகனாக கலக்கிய பாலச்சந்தர் இப்போது வெள்ளை தாடி உடன் வயதான தோற்றத்தில் இருக்கிறார். ஆனாலும் அவருடைய முகத்தில் இருக்கும் அந்த கம்பீரமும் கேமராவுக்கு முன்னால் இருக்கும் தன்னம்பிக்கையும் மட்டும் மாறவில்லை. அதைப் பார்த்ததும் தான் ரசிகர்களுக்கு இந்த நடிகரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்ற தேடல் வந்திருக்கிறது. அதுதான் இப்போ இந்த புகைப்படங்கள் வைரலாக காரணமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications
