முகத்துக்கு நேராக அந்த அமைச்சர் சொன்ன வார்த்தை! அதற்கு பிறகு நான் மாறிவிட்டேன்.. நடிகர் சூர்யா உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கருப்பு படத்திற்கு பிறகு சூர்யா நடித்திருக்கும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது. தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் மமீதா பைஜூ, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் பிரமோஷனில் சூர்யா பேசும்போது தன்னிடம் அமைச்சர் ஒருவர் சொன்ன வார்த்தை தன்னுடைய மனதை மாற்றிவிட்டது என்று அவர் உருக்கமாக பேசியிருக்கிறார்.

சூர்யாவுக்கு சில வருஷங்களாக நடித்த திரைப்படங்கள் பெரிய அளவில் கை கொடுக்க வில்லை. ஆனால் கருப்பு படம் பெரிய அளவில் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துவிட்டது. இந்த படத்தில் அவர் ஹீரோவா அல்லது ஹெஸ்ட்டா என்ற குழப்பம் ரசிகர்களுக்கு இருந்தாலும் கருப்பசாமி கேரக்டரில் சூர்யாவின் அசத்தலான நடிப்பு ரசிகர்களை ரசிக்க வைத்து விட்டது. அதனாலயே சூர்யாவின் மார்க்கெட் மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம்

அதே நேரத்தில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் ப்ரமோஷனில் சூர்யா பேசிய விஷயங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே ஒரு பிரமோஷனில் பேசும்போது மனைவி பற்றி பேசி இருந்தார். எல்லோரும் காதலித்தால் மட்டும் போதாது. மனைவியை தினமும் காதலிக்க வேண்டும். அவர்களுடைய வளர்ச்சிக்கு நாம துணையாக இருக்க வேண்டும். அப்போதுதான் நம்முடைய வாழ்க்கையே முன்னேறும் என்று சொல்லி அட்வைஸ் கொடுத்திருந்தார்.

Suriya Sivakumar

நடிகர் சூர்யா பேட்டி

அதுபோல இப்போது ப்ரோமோஷனில் பேசும்போது தான் நடிக்க வந்ததற்காக காரணமே பணத்தேவைதான். பணத்தை இல்லாததால் தான் நான் நடிக்க வந்தேன் என்று கூறியிருந்தார். விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தை பற்றி பேசும்போது, இந்த படத்தை பார்க்கும் போது ரசிகர்கள் முகத்தில் ஒரு புன்சிரிப்பு இருந்து கொண்டே இருக்கும். அந்த அளவிற்கு இந்த படம் ரசிகர்களுடன் எளிதாக கனெக்ட் ஆகிவிடும் என்று கூறினார்.

மேலும் அவர் பேசும் போது, தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தில் சொன்னார். அதாவது என்னுடைய நண்பர் ஒரு அமைச்சரின் குடும்ப உறவினர். என் நண்பர் வீட்டு பங்க்ஷனுக்காக நாங்கள் அமைச்சருக்கு திருமண பத்திரிக்கை கொடுக்க போயிருந்தோம். அப்போது இவர் யார் என்று என்னைப் பற்றி என்னுடைய நண்பரிடம் இவர் யார் என்று கேட்டார்.

Suriya Sivakumar

அமைச்சர் சொன்ன வார்த்தை

அப்போது என்னுடைய நண்பன், இவர்தான் நடிகர் சிவகுமாருடைய மூத்த மகன் என்று என்னை அறிமுகப்படுத்தினார். அப்போது அந்த அமைச்சர் உங்க அப்பா பண்ணுனதை தான் நீங்களும் திரும்ப பண்ண போறீங்களா? என்று என்கிட்ட கேட்டாரு. அந்த வார்த்தை என்னுடைய மனதை ரொம்ப பாதித்துவிட்டது. அதனால் என்னுடைய அப்பா படங்களை பார்ப்பதையே நான் நிறுத்தி விட்டேன். அவருடைய சாயல் எனக்குள் எதுவும் வராமல் எனக்கென ஒரு தனி பாதையை என்னால் உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் அப்படி செய்தேன் என்று சூர்யா சொல்லி இருக்கிறார்.

காதலர்களுக்கு ரோல் மாடலான சூர்யா, ஜோதிகா.. ஒரே ஒரு பேட்டியில் நடந்த அதிசயம்! பாராட்டு குவியுதே
சூர்யா இப்படி சொன்னதும் யார் அந்த அமைச்சராக இருக்கும் என்று பலரும் கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டனர். அதுபோல ஏற்கனவே இந்த படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் பேசும்போது நடிகை ராதிகா, தன்னுடைய தம்பி படிப்புக்காக செய்த உதவிகள் குறித்து பேசி இருந்தார். அதாவது நடிகர் கார்த்தி வெளிநாட்டில் படிக்கப் போகும் சமயத்தில் அமெரிக்காவில் படிக்க வேண்டும் என்றால் பேங்க் டெபாசிட்டில் குறிப்பிட்ட தொகை இருக்க வேண்டுமாம். ஆனால் சிவகுமாரிடம் அப்போது அவ்வளவு பணம் இல்லாததால் சிவகுமார் தவித்துக் கொண்டிருந்தாராம்.

Suriya Sivakumar

ராதிகா செய்த உதவி

அந்த சமயத்தில் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ராதிகா, நான் உங்களுக்கு கொஞ்சம் பணத்தை அக்கவுண்டில் போட்டு வைக்கிறேன் அது இருக்கட்டும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டாராம். அதனால்தான் கார்த்தியால் வெளிநாட்டில் போய் படிக்க முடிந்தது என்று சூர்யா சொல்லியிருந்தார். அதுபோல சூர்யா, ஜோதிகா கல்யாணம் நடப்பதற்கு கூட ராதிகா தான் காரணம் என்று சிவகுமாரே பேட்டிகளில் சொல்லி இருக்கிறார். இந்த ராதிகா தான் இவங்களுடைய காதல் பற்றி என்கிட்ட சொல்லி என்னுடைய மனதை மாற்றினார் என பேசி இருந்தார். இப்போது சூர்யாவும் ராதிகாவும் இந்த படத்தில் நடித்திருப்பது படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க வைத்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+