நடிப்பதில் ஆர்வம் கொண்டவரா நீங்கள்? விஜய் டிவி சீரியலில் ஹீரோயினாக வேண்டுமா? இதோ அரிய வாய்ப்பு
சென்னை: நடிப்பதில் ஆர்வம் கொண்டவரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு பெரிய டிவி சேனல் சீரியலில் கதாநாயகி வாய்ப்பு வழங்கப்படுகிறது.
டிவி சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள், ஆங்கரிங் உள்ளிட்ட பணிகளை பார்ட் டைமாக செய்தால் கூட மக்களிடம் பெரிய ரீச் கிடைக்கும். இதற்கு உதாரணம் தற்போது டப்ஸ்மேஷ், டிக்டாக், இன்ஸ்டா உள்ளிட்ட சமூகஊடகங்கள்தான்.

இதில் டிக்டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. டப்ஸ்மேஷை யாரும் பயன்படுத்துவதில்லை. அதனால் நிறைய பேர் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகிறார்கள். இதில் எங்கோ ஒரு கிராமத்தில் இருந்து போடும் பதிவுக்கு கூட நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அவ்வாறு பொதுமக்களிடம் பிரபலமாக இருந்தவர்களுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்தன. அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் ஒரு பெரிய வாய்ப்பு காத்திருக்கிறது. இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் என்ன தெரியுமா.
நீங்கள் உலகத்தில் எந்த மூலையில் வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள். ஆனால் வரும் மே 28ஆம் தேதி சென்னைக்கு வந்துவிடுங்கள். இதுகுறித்து விஜய் டிவி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீங்கள் நடிப்பதில் ஆர்வம் கொண்டவரா? அப்போ உங்களுக்கான ஒரு நிகழ்ச்சிதான் இது. இதில் பங்குபெறுவது மிகவும் சுலபம்.
புதிய படைப்புக்களை வழங்குவதில் விஜய் டிவி எப்போதும் முன்னோடியாக இருந்து வருகிறது. அதன் வரிசையில் கதாநாயகி என்ற ஓர் நட்சத்திர தேடல் படலம் விஜய் டிவியால் அரங்கேற்றப்படுகிறது.

• இதில் பங்குபெற நீங்கள் 18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
• நடிப்பில் ஆர்வம் கொண்டவராக இருக்க வேண்டும்.
• தமிழ் பேசத்தெரிந்திருக்க வேண்டும்.
• தன்னம்பிக்கையுள்ள, தைரியமான, நகைச்சுவையுணர்வுள்ள, கேமரா பயம் இல்லாதவராக இருக்க வேண்டும்.
இதில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு விஜய் டிவி மெகா தொடரில் நடிக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு அளிக்கப்படும். விஜய் டிவி சீரியலுக்கான சிறந்த தமிழ் பேசும் கதாநாயகியை அடையாளம் காண்பதே இந்த நிகழ்ச்சி.
நேர்காணல் நடக்கும் விவரங்கள்:
நாள்: மே 28 , ஞாயிறு காலை 8 மணி முதல்.
இடம்: மெட்ராஸ் கிறிஸ்டின் மேல்நிலைப்பள்ளி, ஹாரிங்டன் சாலை, சேத்துப்பட்டு, சென்னை - 600031.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே கோவை, மதுரையில் ஆடிஷன்கள் நடந்துவிட்டன. தற்போது சென்னையில் நடக்கிறது. அது போல் இனி வரும் வாரங்களில் மற்ற ஊர்களில் ஆடிஷன் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு வரும் போது நீங்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதற்கான அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும்.
ஆடிஷன் முடிந்தவுடன் தேர்வாகும் நபர்களுக்கு விஜய் டிவியிலிருந்து அழைப்பு வரும்.
விஜய் டிவியில் ஏற்கெனவே செல்ல குரலுக்கான தேடல் என சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடந்து வருகிறது. தற்போது சீசன் 9 நடந்து வருகிறது. அது போல் ஜூனியர்களுக்கும் தனியே ஒரு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடக்கிறது. இதுவும் 8 சீசன்களை கடந்து நடந்து வருகிறது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications