எதிர்நீச்சலில் இன்று! ஈஸ்வரியை "அம்மா"னு சொன்ன ஜீவானந்தம் மகள்! ஏய்! கொலை மிரட்டல் விடுத்த குணசேகரன்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் கரிகாலனுக்கும் ஆதிரைக்கும் செமையாக சண்டை நடக்கிறது. இதை பார்க்கும் குணசேகரன் தனது தாய் விசாலாட்சியிடம் வந்து மிரட்டும் காட்சிகளின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் தினந்தோறும் விறுவிறுப்பாக விஷயங்கள் நடந்து வருகின்றன. முதல் நாள் சீரியல் முடிந்து அடுத்த நாள் சீரியல் பார்ப்பதற்கு முன்பு நாம் யூகித்து வைப்பதை போல் நடக்காமல் நிறைய திருப்பங்களுடன் இந்த சீரியல் வெற்றி நடை போடுகிறது.

இந்த சீரியலில் தினசரி ப்ரோமோ வெளியாகி பரபரப்பை நாளுக்கு நாள் கூட்டி வருகிறது. இது டிஆர்பி ரேட்டிங்கிலும் நம்பர் ஒன்னாக இருக்கிறது. அந்த அளவுக்கு மக்கள் இந்த சீரியலுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். குணசேகரனின் சுயரூபத்தை தெரிந்து கொண்ட ஜனனி வீட்டில் உள்ளவர்களிடம் அவரை பற்றி சொல்கிறார். இதையடுத்து அனைவருமே அவருக்கு எதிராக திரும்புகிறார்கள். மீண்டும் அப்பத்தாவின் 40 சதவீத பிரச்சினை பூதாகரமாக வெடிக்கிறது.
எப்படியும் தன்னிடம் இருந்து ஜீவானந்தம் கைப்பற்றிய அப்பத்தாவின் சொத்துகளை மீட்க வேண்டும் என குணசேகரன் கொலை வெறியில் அலைகிறார். அவரை கொலை செய்யும் முயற்சியின் போதுதான் அவருடைய மனைவியை குணசேகரன் சுட்டுக் கொன்று விடுகிறார். தற்போது ஜீவானந்தத்தின் குழந்தை தாயில்லாமல் தவித்து வருகிறது.

இந்த நிலையில் இன்றைய தினத்திற்கான சீரியல் வெளியாகியுள்ளது. அதில் ஆதிரைக்கும் கரிகாலனுக்கும் விசாலாட்சிக்கும் இடையே பயங்கர வாக்குவாதம் ஏற்படுகிறது. இந்த சப்தம் கேட்டு குணசேகரன் வெளியே வந்து அங்க என்ன பிரச்சினை, சத்தம் மேல வரைக்கும் கேட்குது என்கிறார். அதற்கு ஆதிரை நான்தான் பிரச்சினை பண்ணுறேன் என்கிறார்.
அதற்கு குணசேகரன் தனது சிக்னேச்சர் முக பாவனையால் விசாலாட்சியை பார்த்து " இந்த வீட்டில் உள்ள பொம்பளைகளுடன் சேர்ந்துக்கிட்டு எனக்கெதிராக ஒரு அடி எடுத்து வைச்சாளாக இருந்திச்சுன்னா பாரேன் அப்புறம் உனக்கு பொண்ணு இருக்க மாட்டா பாத்துக்கோ என்கிறார்.

மறுபுறம் ஈஸ்வரியிடம் ஜீவானந்தத்தின் குழந்தை நீங்க எங்கம்மா மாதிரியே இருக்கீங்க என்று கூறிவிட்டு அழுகிறாள். உடனே ஈஸ்வரி அழக்கூடாது என ஆறுதல் கூறி கட்டி அணைத்து ஆறுதல் கூறிக் கொண்டே அழுகிறார். அப்போது ஜீவானந்தம் வருகிறார். இப்படியாக இந்த ப்ரோமோ உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications