நீயா நானாவில் குழந்தைகள் கேட்ட சந்தேகம்.. ஆடிப்போன கோபிநாத்.. இந்த நேரத்திற்கு சரியான கேள்வி தான்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் குழந்தைகள் மருத்துவர்களிடம் தங்களுடைய சந்தேகங்களை கேட்டு அறிந்திருக்கின்றனர்.
அதில் சில குழந்தைகள் தங்களுக்கு சளி ஏற்படுவது குறித்து கேட்டு அறிந்ததை பார்த்து கோபிநாத் வியந்து போயிருக்கிறார்.
வீட்டில் ஒரு மாதிரி சொல்கிறார்கள் மருத்துவமனையில் ஒரு மாதிரி சொல்கிறார்கள் என்று குழந்தைகள் தங்களுடைய ஐயங்களை தீர்த்ததை பார்த்து கோபிநாத் பாராட்டி இருக்கிறார்.

அம்மா பாசம்
அம்மா என்றால் யாருக்குத்தான் பிடிக்காது சார் என்று சொல்வார்கள் ஆனால் நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு குழந்தை தனக்கு தன்னுடைய அம்மாவை எந்த அளவிற்கு பிடிக்கும் என்பதை உலகத்திற்கே வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் ஏப்ரல் ஒன்பதாம் தேதி எபிசோட் சுவாரசியமான நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது.
கோபிநாத்தின் அறிமுகம்
இந்த வார நிகழ்ச்சியில் ஒரு பக்கம் மருத்துவர்களும் இன்னொரு பக்கம் குழந்தைகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர். பொதுவாக வீட்டில் குழந்தைகள் சேட்டை செய்து கொண்டால் பலரும் அப்பாட்ட சொல்லி கொடுத்துடுவேன் என்று பயமுறுத்துவார்கள். அல்லது டீச்சர்ரிடம் சொல்லி பயமுறுத்துவேன் என்று சொல்வார்கள் ஆனால் இப்போது டாக்டரிடம் சொல்லி விடுவேன் என்று பயமுறுத்துகிறார்கள் என்று கோபிநாத் அறிமுகம் கொடுத்திருக்கிறார்.
விக்கலுக்கு காரணம்
ஒரு பக்கம் குழந்தைகள் டாக்டரிடம் தங்களுக்கு பல வருடங்களாக இருக்கும் சந்தேகங்களை கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அதில் ஒரு குழந்தை எனக்கு அடிக்கடி விக்கல் வருகிறது. அப்படி வரும்போது என்னுடைய அம்மா உனக்கு வயிறு பெருக்குது. அதனால் தான் அப்படி என்று சொல்றாங்க. அது உண்மையா? என்று கேட்க, அதற்கு மருத்துவர் தொண்டையில் வறட்சி ஏற்பட்டால் விக்கல் ஏற்படும் அல்லது வயிற்றுக்கும் நெஞ்சு பகுதிக்கும் இடையில் இருக்கும் பகுதியில் ஏதாவது ஸ்டிமினேட் ஆகும்போது விக்கல் வரும் என்று விளக்கம் கொடுக்கிறார்.

இன்ஜெக்ஷன் வேண்டாம்
அடுத்து ஒரு குழந்தை நாங்கள் ஐஸ்கிரீம் சாப்பிட்டால், சாக்லேட் சாப்பிட்டால் சளி பிடிக்கிறது. அதற்கு மருத்துவரிடம் கூட்டிட்டு போனா? அவங்க எங்களுக்கு இன்ஜெக்ஷன் போடுறாங்க. எதுக்காக எங்களுக்கு இன்ஜெக்ஷன் போடுறீங்க. அது இன்ஜெக்ஷன் இல்லாமல் ஏதாவது செய்யலாமே என்று கேட்க, நாங்கள் எல்லோருக்கும் இன்ஜெக்ஷன் போடுறது இல்லை நீங்க சாக்லேட் அல்லது ஐஸ்கிரீம் சாப்பிட்டால் கொஞ்சம் வெந்நீர் குடித்து விடுங்கள் என்றும் முடியாத பட்சத்தில் தான் இன்ஜெக்ஷன் போடுறோம் என்று ஒரு மருத்துவர் விளக்கம் கொடுக்கிறார்.
இப்படி செய்யுங்கள்
அதில் இன்னொரு குழந்தை வெயில் காலத்தில் தர்பூசணி சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று சொல்கிறார்களே! அது உண்மையா? என்று கேட்க அதற்கு மருத்துவர்கள் அப்படியெல்லாம் இல்லை. தர்பூசணி பழத்தை வாங்கி அப்படியே சாப்பிட்டால் ஒரு பிரச்சனையும் இல்லை. அதை ஃப்ரிட்ஜில் வைத்து அடுத்தடுத்து சாப்பிடும் போது தான் சளி பிடிக்கிறது என்று விளக்கம் கொடுத்திருக்கின்றனர்.
டாக்டர் கேட்ட கேள்வி
இன்னொரு குழந்தை வீட்டில் எப்போதும் இட்லி தோசை சாப்பாடு என்று தினமும் அதையே சாப்பிட சொல்கிறார்கள். எங்களுக்கு சாப்பிட பிடிக்கவில்லை என்று வருத்தத்தை பகிர்ந்து கொள்ள, அதற்கு வெகுண்டெழுந்த டாக்டர் இதை நான் நம்பவே மாட்டேன். உங்க வீட்டில் எத்தனை வீட்டில் எத்தனை பேருடைய வீட்டில் அம்மா வேலைக்கு போகிறார்கள் என்று கேட்க, அங்கே இருந்த பல குழந்தைகள் கையை தூக்கின்றனர். உங்களுடைய அம்மா தினமும் தோசை என்றால் நான் நம்பவே மாட்டேன். அந்த தோசையில் வெரட்டியா தானே செய்கிறார்கள். நானும் என்னுடைய இரண்டு குழந்தைகளை வளர்த்து இருக்கிறேன்.

சரியான நெத்தி அடி
குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி செய்ய வேண்டும் என்று வேலைக்கு போவதற்கு முன்பாக அவசர அவசரமாக சாப்பாடு செய்கின்றனர். கையில் போனை வைத்துக் கொண்டே ஆபீஸில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்த மாதிரியே உங்களுக்கு சமையல் செய்து கொடுக்கிறார்கள். ஆனால் உங்களுக்கு சாப்பிட பிடிக்கவில்லை. ஒரே போல செய்கிறார்கள் என்று நீங்கள் குற்றம் சுமற்றுகிறீர்களா? என்று கேள்வி கேட்க, அத்தனை குழந்தைகளும் கப்சிப் ஆகிவிட்டனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications