ஏம்மா ராஜலட்சுமி புருஷனை கூடவே கூட்டிட்டு வராதேம்மா.. இவங்கலாம் தொல்லை.. ராதாரவி பேச்சால் சர்ச்சை
சென்னை: எங்க போனாலும் உன் புருஷன் செந்தில் கணேஷை கூடவே கூட்டிட்டு வராதே, தொல்லை என ராஜலட்சுமியிடம் ராதாரவி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
செந்தில் கணேஷும் அவரது மனைவி ராஜலட்சுமியும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருவரும் சினிமா பாடல்களை தவிர்துவிட்டு நாட்டுப் புறப்பாடல்களை மட்டுமே பாடி மக்களின் மனங்களை வென்றனர். அந்த சீசனில் வெற்றியாளர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து இவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று கச்சேரி நடத்தும் அளவுக்கு இவர்களுக்கு மவுசு கூடிவிட்டது. இத்தனைக்கு காரணம் இவர்களுடைய கடுமையான உழைப்பு என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும்.

சினிமாவில் பாட வாய்ப்பு
மெல்ல இவர்களுக்கு சினிமாவில் பாட வாய்ப்பு கிடைத்தது. ராஜலட்சுமியும் செந்தில் கணேஷும் இணைந்து சார்லி சாப்ளின் படத்தில் சின்ன மச்சான் செவத்த மச்சான், சின்ன புள்ள செவத்த புள்ள என்ற பாடலை பாடினர். இதன் மூலம் அவர்கள் இருவரும் மேலும் பிரபலமடைந்தனர். பின்னர் ராஜலட்சுமி புஷ்பா படத்தில் சாமி ஏ சாமி என்ற பாடலை பாடினார்.

விருமன் படம்
விருமன் படத்திலும் இவர் பாடுவதாக இருந்தது. இவர் பாடி முடித்த பிறகு அந்த பாடல் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கரின் குரலில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும் எந்த குரல் பாடலுக்கு பொருத்தம் என்பதை இயக்குநர்தான் முடிவு செய்வார். இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என ராஜலட்சுமி தெரிவித்தார்.

கணவன் மனைவி
கணவன் மனைவி இருவரும் சேர்ந்து யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார்கள். இதில் வெளிநாடுகளுக்கு செல்லும் வீடியோக்களை போட்டு ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறார்கள். ராஜலட்சுமி தற்போது நடிகையாகவும் புது அவதாரம் எடுத்திருக்கிறார். கணபதி பாலமுருகன் இயக்கி வரும் லைசன்ஸ் எனும் படத்தில் ராஜலட்சுமி ஹீரோயினாக நடித்து வருகிறார்.

ராஜலட்சுமி போஸ்டர்
படத்தின் போஸ்டரில் ராஜலட்சுமி முறைப்பது போன்ற தோற்றத்தில் இருக்கிறார். இந்த படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் ராஜலட்சுமி தனது கணவர் செந்தில் கணேஷுடன் கலந்து கொண்டார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராதாரவியும் நடித்துள்ளார்.

ராதாரவி பேச்சு
இந்த விழாவில் ராதாரவி பேசுகையில் லைசன்ஸ் படத்தின் கதை இதுவரை யாரும் சொல்லாத கதை. என்னுடைய 49 ஆண்டுகால சினிமா அனுபவத்தில் நான் இது போன்ற கதையை கேட்டதே இல்லை. இந்த படத்திற்கு நிறைய விருதுகள் கிடைக்கும். படக்குழுவுக்கு வாழ்த்துகள்.

பாரதி கேரக்டர்
பாரதி என்ற கதாபாத்திரத்தில் ராஜலட்சுமி நடித்துள்ளார். கதைக்கு ஏற்ற ஹீரோயின் அவர். இவரை தேர்வு செய்ததற்கு இயக்குநரை பாராட்டியே ஆக வேண்டும். ரினிசார் முகத்தை போட்டாலே இழுக்குது. ஆனால் ராஜலட்சுமியின் முகத்தை தைரியமாக போஸ்டரில் போட்டுள்ளார்கள். குத்துவிளக்கு ஏற்றும் போது கூட ராஜலட்சுமி தனது கணவர் செந்தில் கணேஷை அழைத்தார்.

கணவர் தொல்லை
கணவரை அழைத்து வராதீர்கள். எதுக்கு புருஷனை அழைத்து வருகிறீர்கள். தொல்லை. உங்களுக்கு பாதுகாப்பு என நினைக்கிறீர்கள். அது பாதுகாப்பு அல்ல. நீங்கள்தான் உங்களுக்கு பாதுகாப்பு. யாரும் யாரையும் பாதுகாக்க முடியாது. சினிமா மட்டும் அல்ல, அலுவலகம், அரசியலிலும் நாம் தான் நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என ராதாரவி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications