யாரு ராதாரவியா? அவர் நல்லவரா? என் ஆடைக்குள் கையை விட்டு அசிங்கப்படுத்தி! குமுறும் டப்பிங் ஆர்டிஸ்ட்
சென்னை: சினிமாவில் டப்பிங் பேசும் கலைஞர்களிடம், டப்பிங் யூனியன் உறுப்பினர்கள் தவறாக நடந்தால் அதை தட்டி கேட்கும் அளவுக்கு ராதாரவி நல்லவரா என டப்பிங் கலைஞர் சங்கீதா தனது மனக்குமுறலை தெரிவித்துள்ளார்.
நயன்தாராவை அசிங்கமாக பேசிய ராதாரவி எப்படி மற்ற பெண்களுக்கு எதிரான அநியாயங்களை தட்டி கேட்பார் என அந்த பெண் தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து டப்பிங் கலைஞர் சங்கீதா கலாட்டா சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: 2017 ஆம் ஆண்டு கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் ஒருவரால் எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை ஏற்பட்டது. இதுகுறித்து டப்பிங் யூனியன் செயலாளரிடம் புகார் தெரிவித்தேன்.
டப்பிங்கிற்கு அழைக்க மாட்டேன்: ஆனால் அவரோ எனக்கு போன் செய்து "சங்கீதா நான் அந்த நபரிடம் பேசிவிட்டேன். இனி அவர் உங்களை டப்பிங்கிற்கு அழைக்க மாட்டார், நீங்களும் போகாதீர்கள்" என்றார். நான் என்ன சார், நான் புகார் அளித்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இப்படி ஒரு தீர்வை தருகிறீர்களே என்றேன். அதற்கு அவர் "நீங்கள் சட்ட ரீதியிலாக சென்றால் நான் உங்களை யூனியனில் இருந்து நீக்கிவிடுவேன்" என மிரட்டினார்.
பிறகு டப்பிங் யூனியனில் இருந்து வெளியேற்றப்பட்ட சின்மயி உள்ளிட்டோர் இருந்த குழு சார்பில் நான் ராதாரவியை எதிர்த்து டப்பிங் யூனியன் சங்கத் தேர்தலில் போட்டியிட்டேன். அப்போது டப்பிங் யூனியனில் ஒரு மீட்டிங் நடந்தது. அதற்கு நான் சென்றேன். அப்போது ராதாரவி, " அந்த பெண்ணை (என்னை) அடிங்க" என சொன்னார்.
டப்பிங் யூனியன் செயலாளரின் தங்கை : உடனே அந்த டப்பிங் யூனியன் செயலாளரின் தங்கை கவிதா, என்னை அசிங்கமாக பேசி, என் ஆடைக்குள் கையை விட்டு நகங்களால் கீறி என்னை மிகவும் டார்ச்சர் செய்தார். நான் எழுந்திருக்காமல் இருக்க சில பெண்கள் என்னை அப்படியே அழுத்தி பிடித்துக் கொண்டனர். உடனே நான் ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு மருத்துவர்கள் அட்மிட் ஆக சொல்லி போலீஸிலும் தகவல் சொன்னதால் இது கேஸ் ஆனது. கவிதா செய்தது எல்லாமே ராதாரவி சொல்லித்தான்.

8 பேர் மீது வழக்கு: நான் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை. உடனே சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் புகார் கொடுத்தேன். அப்போது ராதாரவி, யூனியன் செயலாளர் கதிரவன் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டனர்.
ராதாரவி நல்லவரா: அப்படியும் என் கேஸ் குறித்து வழக்குப் பதிவு செய்யாமல் கேஸையே முடித்துவிட்டார்கள். ராதாரவிக்கு இருக்கும் பணபலம், ஆள்பலம் எல்லாருக்கும் தெரியும். அவர் தலையீட்டால் இப்படி கேஸை க்ளோஸ் செய்திருக்கலாம். செயலாளர் கதிரவனும் பெண்களிடம் அசிங்கமாகவே பேசுவார். இதை ராதாரவி தட்டி கேட்க மாட்டார். ஏனென்றால் அவரே நல்லவர் கிடையாது. யூடியூபில் இதுவரை எந்த பெண்ணையாவது நன்றாக பேசியுள்ளாரா, நயன்தாராவை அவர் என்ன பேசினார், அவரை எதற்காக திமுகவிலிருந்து நீக்கினார்கள். எனவே அவரே நல்லவர் இல்லாத போது அவர் எப்படி அநியாயத்தை தட்டி கேட்பார். டப்பிங் யூனியன் தேர்தலில் கள்ள ஓட்டுக்களை போட்டு ராதாரவி அணியே எப்போதும் வெல்லும். இவ்வாறு டப்பிங் கலைஞர் சங்கீதா தனக்கு நடந்த அநியாயங்கள் குறித்து தெரிவித்திருந்தார்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications